நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான சர்வதேச செயற்பாடுகளுக்கமைய, இலங்கையும் ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை எய்துவது தொடர்பான நடவடிக்கைகளை தனது தேசிய கொள்கைகளில் உள்வாங்கி செயலாற்றுகின்றது. அதன் பிரகாரம், நாட்டின் செயற்பாடுகளுக்கமைய அமானா வங்கியும் இந்த நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றது.
அமானா வங்கியின் பிரத்தியேகமான வங்கியியல் மாதிரி என்பது நிதியியல் மற்றும் வங்கியியல் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் நிலைபேறாண்மையை உறுதி செய்வதுடன், சொத்துக்கள் அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல்களின் பிரகாரம் நிதி திரட்டப்படுவது மற்றும் முதலிடப்படுவது, பங்காண்மைகளை ஊக்குவிக்கும் ஒப்பந்த அடிப்படையிலான ஏற்பாடுகள் மற்றும் பரந்தளவு பொருளாதாரத்துக்காக இலாபம் மற்றும் நட்டத்தை பகிர்வது போன்றன தொழிற்துறையை நிலைபேறான நிதியளிப்பாக திகழச் செய்துள்ளது. இதன் பிரகாரம், வங்கி பாரியளவு சமூகத்துடன் பிணைப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை எய்துவதற்கமைய, வங்கியின் நோக்கமான வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் வாழ்க்கைக்கு வளமூட்டல் என்பதன் பிரகாரம் தனது நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றது.
நாட்டின் இதுவரையில் வங்கிச் சேவைகள் வழங்கப்படாத பிரிவுகளுக்கு எமது விருது வென்ற தங்கச் சான்றிதழ் நிதியளிப்பு தீர்வுகள் என்பது பெரும் உதவியாக அமைந்துள்ளது. குறிப்பாக நிதிச் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளவர்களுக்கு நிதி உள்ளடக்கங்களை பெற்றுக் கொடுப்பதற்கு உதவியாக அமைந்துள்ளது. கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக நிதி உறுதியற்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், பல தனிநபர்கள் மற்றும் வியாபாரங்கள் வங்கியின் மக்களுக்கு நட்பான தங்கச் சான்றிதழ் நிதியளவு தீர்வுகளை நாடியிருந்ததுடன், அவர்களுக்கு உதவிகளை வழங்கும் வகையில் வழங்கும் நிதித் தொகையின் பெறுமதியையும், மீளச் செலுத்துவதற்கான காலப்பகுதியை நீடித்தும் வழங்கியிருந்தது. தனிநபர்கள் மற்றும் இதர நுண் தொழிற்துறைகளுக்கு அவசியமான நிதியை சௌகரியமான முறையில் பெற்றுக் கொள்ள உதவுகின்றமையால், காலப்போக்கில் இந்தத் தீர்வின் ஏற்றுக் கொள்ளல் என்பது அதிகரித்திருந்தது. மேலும், பிரத்தியேகமான பெண்கள் அலகுகளினூடாக பெண் வாடிக்கையாளர்களுக்கு இரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பான சூழலில் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள உதவியிருந்தமையால், இந்தத் தீர்வு பெண்களுக்கு வலுவூட்ட உதவியிருந்தது.
சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் நன்கொடை நிதிச் செயற்பாடுகள் போன்றவற்றினூடாக பல சமூக சென்றடைவுத் திட்டங்களில் தொடர்ந்தும் பங்களிப்பு வழங்கும் நிலையில், கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது என்பது தொடர்பில் டிஜிட்டல் மூலங்களினூடாக நிதிசார் அறிவை மேம்படுத்தும் பணிகளை வங்கியின் அறிவுசார் சந்தைப்படுத்தல் முன்னெடுப்பினூடாக மேற்கொள்ளப்படுகின்றது. எமது பிரத்தியேகமான வங்கி முறைமை தொடர்பில் போதியளவு அறிவின்மை மற்றும் தவறான அபிப்பிராயங்கள் காரணமாக, அமானா வங்கி சுயமாக முன்வந்து பல்வேறு பங்காளர்கள் மத்தியில் இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் தொடர்பில் புரிந்துணர்வை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிக்கின்றது. இதுவரை முன்னெடுத்திருந்த செயற்பாடுகளினூடாக வெற்றியை எய்தியுள்ள அமானா வங்கி, இந்த வங்கி மாதிரி தொடர்பில் மேலும் வாடிக்கையாளர்கள் முறையான புரிந்துணர்வை பெற்றுக் கொண்டு, இதனை பின்பற்ற ஆரம்பிப்பார்கள் என்பதில் அமானா வங்கி நம்பிக்கையுடன் திகழ்கின்றது.
இன்றை சமூகத்தில் பெண்களும் முக்கிய பங்கை வகிக்கின்றனர். பெண்களுக்கு வலுவூட்டல் மற்றும் பெண் தொழில்முயற்சியாண்மையை ஊக்குவிப்பதனூடாக நிதிச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு வங்கியினால் ஆதரவளிக்கப்படுகின்றது. 146,000 க்கும் அதிகமான பெண் வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்குவதுடன், பெண்களுக்கான 8 பிரத்தியேகமான வங்கியியல் அலகுகளையும் நாட்டில் கொண்டுள்ளது. இதனூடாக பெண்களுக்கு தமது வங்கிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு அதிகளவு இரகசியத்தன்மை மற்றும் சௌகரியத்தை வழங்குகின்றது. புதிய வியாபார மாதிரிகளில் ஈடுபட்டுள்ள பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், பெண்கள் சேமிப்புக் கணக்கு, பெண்கள் நடைமுறைக்கணக்கு மற்றும் பெண்கள் டெபிட் கார்ட் போன்ற பிரத்தியேகமான தீர்வுகளையும் வங்கி வழங்குகின்றது.
நிலக்கரியினூடாக மின் பிறப்பாக்கலை குறைத்து, சூரிய வலு, நீர் மின் உற்பத்தி, காற்றாலை வலு உற்பத்தி மற்றும் பயோமாஸ் ஆகிய புதுப்பிக்கத்தக்க வலுச் செயற்திட்டங்களில் முதலீடுகளை மேற்கொள்ள எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களை ஊக்குவித்து அவர்களுக்கு அவசியமான நிதியளிப்புகளை வழங்குவதனூடகா வங்கி சூழலுக்கு நட்பான வலுப் பயன்பாட்டை பெருமளவு ஊக்குவிக்கின்றது. இந்த ஆண்டில், மினி நீர் மின் பிறப்பாக்கல் நிலையங்கள் மற்றும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற பாரியளவு புதுப்பிக்கத்தக்க வலு திட்டங்களுக்கான தமது நிதியளிப்பை வங்கி அதிகரித்துள்ளது. இவற்றினூடாக 15,500 MWh வலு உற்பத்தி செய்யப்பட்டு தேசிய மின்விநியோக கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருந்ததுடன், 12,000 டொன்கள் காபனீரொட்சைட் வெளியேற்றத்தையும் தணிப்பதற்கு பங்களிப்பு வழங்கியிருந்தது. வங்கியினால் இல்லங்களையும் சூழலுக்கு நட்பான வலு மூலங்களுக்கு மாறிக் கொள்வதற்கு ஆதரவளிக்கும் சகாயமான நிதியியல் தீர்வுகள் வழங்கப்படுகின்றன. மேலும், இந்த சூழலுக்கு நட்பான செயற்பாடுகளுக்கான தனது அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில், அமானா வங்கியின் கூட்டாண்மை அலுவலகத்துக்கான மின்சாரம் சூரிய மின்பிறப்பாக்கலினூடாக உற்பத்தி செய்யப்படுவதுடன், 2020 ஆம் ஆண்டில் 93,425 kWh வலு பிறப்பாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அநாதரவான சிறுவர்களுக்கு அவர்களின் வாழ்க்கைக்கு வாய்ப்பளிப்பது மாத்திரமன்றி, அவர்களின் எதிர்காலத்துக்கும் தெரிவை வழங்கும் வகையில் முன்னெடுக்கப்படும் எமது OrphanCare திட்டத்தினூடாக முதிர்வடையும் அநாதரவான சிறுவர்களுக்கு தமது பருவமெய்திய வாழ்க்கையில் சமத்துவமான காலடியை வைப்பதற்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. வங்கியின் முன்னணி சமூக சென்றடைவு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முழுமையான மீளாய்வு மற்றும் அதனூடாக இதுவரையில் எய்தியுள்ள முன்னேற்றங்கள் பற்றி அறிந்து கொள்ள, எமது OrphanCare பக்கத்தை (www.amanabank.lk/orphan-care) பார்க்கவும்.
Tபொறுப்பு வாய்ந்த நுகர்வு மற்றும் சிறந்த செயன்முறைகளை பின்பற்றி உற்பத்திகளை மேற்கொள்ளும் வியாபாரங்களை வங்கி ஊக்குவிக்கின்றது. பொறுப்பு வாய்ந்த நுகர்வு மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்கும் வாடிக்கையாளர்களுக்கு போட்டிகரமான நிதியளிப்பை வழங்குவதுடன், பாரம்பரிய வங்கியியல் மாதிரியிலிருந்து டிஜிட்டல் வங்கி வழிமுறைகளுக்கு மாறிக் கொள்வதனூடாக காலம், பணம் மற்றும் வளங்கள் விரயத்தைக் குறைத்துக் கொள்வதற்காக ஒன்லைன் கணக்கு ஆரம்பிப்பு, SMS அலேர்ட்ஸ், e-கணக்குக்கூற்றுகள், படிவங்கள் அற்ற வைப்புகள், SMS ஊடாக PIN மற்றும் இணைய வங்கிச் சேவையில் காணப்படும் ‘Message to Bank’ எனும் தெரிவினூடாக பெருமளவு சேவைகளை வழங்குகின்றது. தமது பிரிவுகளுக்குள் பொறுப்பு வாய்ந்த நகர்வு என்பதை தமது ஊழியர்கள் மத்தியில் வங்கி ஊக்குவிப்பதுடன், இதன் காரணமாக பயன்பாட்டை குறைத்தல், மீளப் பயன்படுத்தல் மற்றும் மீள்சுழற்சிக்குட்படுத்தல் என பல சூழலுக்கு நட்பான வழிமுறைகளை பின்பற்றக்கூடியதாக அமைந்திருந்தது.
கடல்சார் உயிரியல் பரம்பல் என்பது மக்களினதும் எமது புவியினதும் சுகாதாரத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். பாதுகாக்கப்பட்ட கடல்பகுதிகள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்பதுடன், அப்பகுதிகளில் வளங்கள் சீராக பேணப்படுவதுடனட், அளவுக்கதிகமான மீன்பிடித்தல், கடல்மாசுறல் மற்றும் கடல் அமிலத்தன்மையடைதலை குறைக்க வேண்டும். இந்த முக்கியத்துவம் வாய்ந்த பணிகளுக்கு உதவும் வகையில், இலங்கையின் முதலாவது புரட்சிகரமான நிலைபேறான மீன்பிடி பண்ணைச் செயற்பாட்டின் வளர்ச்சிக்கும் விருத்திக்கும் வங்கி ஆதரவளித்திருந்ததுடன், அதனூடாக கடல் மற்றும் கரையோர சூழல் கட்டமைப்புகளை நிர்வகிக்கவும் பாதுகாக்கவும் உதவிகளை வழங்கியிருந்தது. நாளாந்த பிளாஸ்டிக் கழிவுகளை தமது பிரதான மூலப் பொருளாக மீளப் பயன்படுத்தி, எமது கடல்களில் பிளாஸ்டிக் கழிவுகள் சேர்வதை தவிர்க்கும் வகையில் செயலாற்றும் உள்நாட்டு தொழிற்துறைகளுக்கு வங்கி ஆதரவளிக்கின்றது.