• Working Capital Financing - Main Visual

தொழிற்படு மூலதன நிதியளிப்பு

4 3 2 1

பூர்த்தி செய்யப்பட்ட பொருட்கள்

பூர்த்தி செய்யப்பட்ட பொருட்கள்

பூர்த்தி செய்யப்பட்ட பொருட்களுக்கான தொழிற்படு மூலதன அளிப்பு அல்லது Tijara என்பது கடன் அடிப்படையில் பூர்த்தி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் விற்பனை மற்றும் முகவர் அடிப்படையிலான நிதி வசதியாக அமைந்துள்ளது. இந்த வசதியினூடாக, வாடிக்கையாளர்களுக்கு தமது பூர்த்தி செய்யப்பட்ட சொத்துக்களை விற்பனை செய்ய வாய்ப்பளிப்பதுடன், தமது தொழிற்படு மூலதன தேவையை நிவர்த்தி செய்து, பண விற்பனைகளினூடான அனுகூலங்களை அனுபவித்து மகிழும் வாய்ப்பை வழங்குவதாக அமைந்துள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களின் பூர்த்தி செய்யப்பட்ட பொருட்களை வங்கி கொள்வனவு செய்யும் என்பதுடன், அதன் முகவராக வாடிக்கையாளரை நியமித்து, சந்தையில் கடன் அடிப்படையில் அந்தப் பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்கும். Tijara நிதியளிப்பு என்பது உள்நாட்டு விற்பனைகள் மற்றும் ஏற்றுமதிகளுக்கும் பெற்றுக் கொள்ள முடியும்.

தீர்வின் உள்ளம்சங்கள்

  • வாடிக்கையாளரின் இருப்பில் குறிப்பிட்ட காலமாக கடன் அடிப்படையில் அல்லது பண அடிப்படையில் விற்பனைக்கு தயாராகவுள்ள பொருட்கள் மீது தொழிற்படு மூலதன நிதியளிப்பு (பூர்த்தி செய்யப்பட்ட பொருட்கள்) உடன்படிக்கை மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.
  • ஒப்பந்தத்துக்கான பெறுமதி ஒப்பந்தம் பூர்த்தி அடைந்ததும் அறியக்கூடியதாக இருக்கும்.
  • பொருட்கள் விநியோகிக்கப்பட்டவுடன் உடனடியாக ஒப்பந்தத்துக்கான கொடுப்பனவு செலுத்தப்படும்.

செயலிலுள்ள பணிக்கான நிதியளிப்பு

செயலிலுள்ள பணிக்கான நிதியளிப்பு

செயலிலுள்ள பணி அல்லது Istisna என்பதற்கான தொழிற்படு மூலதன நிதியளிப்பு என்பது, உற்பத்தி செய்யப்படவுள்ள அல்லது நிர்மாணிக்கப்படவுள்ள குறிப்பிட்ட பொருட்கள் அவை பூர்த்தியடைந்ததும் அவற்றை விற்பனை செய்வதற்கு உற்பத்தியாளர் அல்லது நிர்மாணிப்பவரின் உடன்பாட்டுடன் மேற்கொள்ளப்படும் வசதியாகும். அதனைத் தொடர்ந்து, உற்பத்தியை / நிர்மாணத்தை வாடிக்கையாளருக்கு வங்கி விநியோகிக்கும்.

தீர்வின் உள்ளம்சங்கள்

    • ஊழியர்களை ஈடுபடுத்தி இயற்கையான நிலையை மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய மூலப்பொருட்களுக்கு மாத்திரம் Istisna ஒப்பந்தம் அனுமதிக்கப்படும். சம்பந்தப்பட்ட விடயம், எப்போதும் உற்பத்தி செய்யப்பட வேண்டியது சார்ந்ததாக அமைந்திருக்கும்.
    • உற்பத்தி செய்யப்பட வேண்டிய தயாரிப்பின் வகை, தரம் மற்றும் அளவு போன்றவற்றின் முழுமையான விளக்கம், உற்பத்தியாளருக்கு வழங்கப்பட்டிருப்பதுடன், அதை தயாரிக்க/நிர்மாணிக்க அவசியமான நிதியும் வழங்கப்பட்டிருக்கும் பட்சத்தில், உற்பத்தியாளர் குறித்த சொத்தை நிர்மாணித்து பூர்த்தி செய்யும் கடப்பாட்டைக் கொண்டிருப்பதுடன், ஒரு முகமாக ஒப்பந்தத்தை இடைநிறுத்த முடியாது.

Click here to view the Key Fact Document

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo