• Amana Bank WhatsApp Banking

    உங்கள் பெறுமதியை பொருட்களை

4 3 2 1

அமானா வங்கி WhatsApp வங்கிச் சேவை

WhatsApp இல் “Hi” எனப் பதிவிடுவதன் மூலம் உங்களது WhatsApp வங்கிச் சேவையை ஆரம்பியுங்கள். எங்கும், எந்நேරமும் உங்களது நிதி நடவடிக்கைகளை நிர்வகிக்க பாதுகாப்பான மற்றும் இலகுவான வழியை அனுபவியுங்கள்.

இச்சேவை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கிடைக்கப்பெறுவதுடன், நீங்கள் விரும்பிய மொழியில் தனிப்பயனாக்கப்பட்ட சேவையை வழங்குகின்றது.

கிடைக்கக்கூடிய வசதிகள்

கிடைக்கக்கூடிய வசதிகள்
  1. கணக்கு மீதியைப் பரிசோதித்தல்: உங்களது நடைமுறை கணக்கு, சேமிப்பு கணக்கு மற்றும் கால வைப்பு முதலீடுகளின் மீதிகளை உடனக்குடன் பார்வையிடலாம்.
  2. எனது வசதிகள் (My Facilities): வங்கியில் நீங்கள் பெற்றுள்ள தற்போதைய நிதி வசதிகள் பற்றிய விபரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
  3. நிதிப் பரிமாற்றம் / கட்டணக் கொடுப்பனவுகள்: நிதிப் பரிமாற்றங்கள், கட்டணக் கொடுப்பனவுகள் மற்றும் பலவற்றைச் செய்வதற்கு அமானா வங்கியின் டிஜிட்டல் வங்கித் தளத்திற்கான நேரடி இணைப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம்.
  4. டெபிட் கார்டு சலுகைகள்: பிரத்யேக டெபிட் கார்டு சலுகைகள், பங்குதாரர் தள்ளுபடிகள் மற்றும் பருவகால விளம்பரங்கள் பற்றிய அறிவிப்புகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

தகைமை

தகைமை
  • பதிவுசெய்யப்பட்ட கையடக்கத் தொலைபேசி இலக்கத்தைக் கொண்ட அனைத்து அமானா வங்கி வாடிக்கையாளர்களுக்கும் இச்சேவை கிடைக்கும்.
  • பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்த, உங்களது அமானா வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள கையடக்கத் தொலைபேசி இலக்கம் மூலம் மட்டுமே இச்சேவையைப் பயன்படுத்த முடியும்.

நன்மைகள்

நன்மைகள்
  • End-to-end என்க்ரிப்ட் செய்யப்பட்ட மெசேஜிங் மூலம் பாதுகாப்பான அணுகல்.
  • வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் உட்பட 24/7 கிடைக்கும்.
  • அத்தியாவசிய கணக்கு விபரங்களை விரைவாகவும் எளிதாகவும் பெற்றுக்கொள்ளலாம்.
  • இச்சேவையைப் பயன்படுத்த மேலதிக கட்டணங்கள் எதுவும் இல்லை.
  • டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகளுக்கான தடையற்ற இணைப்புகள்.
  • SMS மூலமான OTP மூலம் உறுதிப்படுத்தப்பட்ட பாதுகாப்பு.

ஆரம்பிப்பது எப்படி?

ஆரம்பிப்பது எப்படி?
    •  +94 70 775 6756 என்ற இலக்கத்தை உங்கள் தொடர்புகளில் சேமிக்கவும் அல்லது இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்: https://bit.ly/AmanaWAB
    • WhatsApp ஐத் திறந்து சேமிக்கப்பட்ட இலக்கத்திற்கு “Hi” என அனுப்பவும்.
    • திரையில் தோன்றும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும். ஆரம்ப அமர்வில் மொழித் தெரிவு மற்றும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, அடுத்தடுத்த அமர்வுகளில் அவை மீண்டும் கேட்கப்பட மாட்டாது.

Click here to view the Key Fact Document

Inquire Now

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo