வாழ்க்கையில் வரையறைகளை விரிவாக்குவதில் முன்னேற்றம் காண்போருக்காக வடிவமைக்கப்பட்டுள்ள உயர் தர வங்கியியல் மற்றும் நிதிச் சேவைகளை வழங்கும் தீர்வாக அமானா வங்கி வான்டேஜ் அமைந்துள்ளது. உங்கள் பிரத்தியேக வளர்ச்சியை துரிதப்படுத்தும் வகையில் அமானா வங்கி வான்டேஜ் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், உங்களின் வெற்றிக்கான நிதிப் பங்காளராகத் திகழும் வகையிலும் அமைந்துள்ளது. எமது பிரத்தியேகமான வங்கியியல் மாதிரியினால் வலுவூட்டப்பட்டுள்ளதுடன், இலங்கையில் வட்டி வழங்கும் முறைமையிலிருந்து முற்றிலும் விடுபட்ட பிரத்தியேக வங்கிச் சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் சேவையாக அமைந்துள்ளது. தாமதிக்காமல், உங்கள் ஆற்றலை உச்சளவில் வெளிப்படுத்துங்கள்..
நிதிசார் தீர்மானங்களை மேற்கொள்வது இலகுவானதல்ல. எமது பிரத்தியேகமான உறவு பேணல் முகாமையாளரினூடாக, உங்கள் நிதி மூலங்களை அனுகூலமளிக்கும் வகையில் பயன்படுத்திக் கொள்வதற்கு அவசியமான வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொடுப்பார். அத்துடன், உங்கள் செல்வத்தை நிர்வகித்தல், கட்டியெழுப்பல் மற்றும் பாதுகாத்தல் தொடர்பான சேவைகளையும் வழங்குவார். எமது உறவு பேணல் முகாமையாளரை தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு, உங்களின் சகல வங்கித் தேவைகளையும் நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.
அமானா வான்டேஜ் உடன், உங்கள் நிதித் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் உச்ச முன்னுரிமையைப் பெறுகின்றன. இதன் காரணமாக எமது பிரத்தியேகமான உறவு பேணல் முகாமையாளர்கள், உங்களுக்கு பொருத்தமான நிதித் தீர்வுகளை இனங்கண்டு, வடிவமைத்து வழங்குகின்றனர். இவை உங்களுக்கு அடுத்த படியை முன்னெடுத்து வைக்க உதவியாக அமைந்திருக்கும்.
பின்வரும் பெருமளவு அனுகூலங்களை அனுபவியுங்கள்:
சேமிப்புக் கணக்கு மற்றும் தவணை முதலீட்டு கணக்கு ஆகியவற்றின் சிறந்த அனுகூலங்களை ஒன்றிணைத்து வழங்கும் கணக்காக அமைந்திருப்பதுடன், உங்கள் சேமிப்புகளை சௌகரியமாகவும், மதிநுட்பமாகவும் நிர்வகிக்க உதவியாக அமைந்துள்ளது.
தவணை முதலீட்டு கணக்கினூடாக, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேலதிக பணத்தை நேரடியாக, பண வைப்பு இயந்திரங்கள், பணப் பரிமாற்றங்கள் அல்லது வெளிநாட்டு பண அனுப்புகைகளினூடாக மேற்கொள்ள முடியும்.
அமானா வங்கி சேமிப்புத் திட்டத்தினூடாக, நீங்கள் விரும்பிய காலப்பகுதிக்கு எதிர்பார்க்கும் பணத்தை சேமித்துக் கொள்ளும் வசதியை வழங்கும் திட்டமாக அமைந்திருப்பதுடன், சேமிப்புப் பழக்கத்தை கட்டியெழுப்பிக் கொள்ளவும் ஏதுவாக அமைந்துள்ளது. அத்துடன், உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் உங்களின் நிதி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான அவசர இலவச ஆயுள் காப்புறுதியையும் வழங்குகின்றது.
எமது தவணை முதலீட்டு கணக்குகள் இலாபப் பகிர்வு எனும் கொள்கையின் பிரகாரம் அமைந்துள்ளன. எமது முதலீட்டு தொகுதியினூடாக கிடைக்கும் இலாபப் பங்கை உங்கள் முதலீட்டின் பிரகாரம் அமைந்துள்ளன. முதலீட்டு தொகுதி சிறந்த பெறுபேறுகளை பதிவு செய்யும் பட்சத்தில், உங்களுக்கு உயர் இலாபத்தை ஈட்ட முடியும்.
மில்லியன் ரூபாய்க்கு அதிகமான தவணை முதலீட்டு மீதியை பேணுவதனூடாக அல்லது ரூ. 75000 க்கு அதிகமான மாதாந்த சம்பளத் தொகையை வைப்புச் செய்வதனூடாக அமானா வங்கி வான்டேஜ் பிரத்தியேக அங்கத்துவத்தை அனுபவிக்கவும்.
We have received your inquiry and will get back to you in due course.
We use cookies that help to increase the performance of our website to serve you better, to provide social media features and to analyse our traffic. Click accept to give your consent to accept cookies and go directly to the site or click on more information to see detailed descriptions of the Privacy Policy

