A New Class of Banking
அமானா வங்கி ப்ரெஸ்டிஜ் வங்கிச் சேவை என்பது, அதி உன்னத வாடிக்கையாளர் சேவையை எதிர்பார்க்கும் எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமான வகையில் பராமரிப்பை பெற்றுக் கொடுப்பதுடன், அவர்களின் தினசரி வங்கியியல் மற்றும் நிதித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள ஏதுவாக அமைந்துள்ளது.
நாட்டில் காணப்படும் வட்டி வழங்கப்படாத உயர் தேறிய பெறுமதி வாய்ந்த வங்கிச் சேவை வழங்கலாக அமானா வங்கி ப்ரெஸ்டிஜ் வங்கியியல் அமைந்துள்ளதுடன், சிறந்த மொபைல் வங்கிச் சேவைக்கான முன்னுதாரணமாகவும், வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் சேவை வழங்கலை உறுதி செய்வதுடன், அவர்களின் நலனிலும் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது.
அமானா வங்கி ப்ரெஸ்டிஜ் வங்கிச் சேவையுடன் இணைந்ததும், உங்கள் செல்வத்தை நிர்வகித்து, கட்டியெழுப்பி பாதுகாப்பதற்கு எம்மாலான சிறந்த உன்னத சேவையை வழங்குகின்றோம். உங்களுக்காக ப்ரெஸ்டிஜ் உறவு பேணல் முகாமையாளர் இந்த சேவை உங்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வார்.
உங்களின் நிதித் தேவைகளை நிறைவேற்றுவதில் உங்கள் உறவு பேணல் முகாமையாளர் பங்களிப்பு வழங்குவதுடன், அவசியமான வங்கியியல் மற்றும் முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவார். மேலும், உங்களுக்கு சௌகரியமான வகையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கான உதவிகளையும் வழங்குவார்.
நேரம் மற்றும் சௌகரியம் ஆகியவற்றில் நீங்கள் கொண்டுள்ள அக்கறையை நாம் புரிந்து கொண்டுள்ளோம். நீங்கள் கொண்டிருக்கும் வேலைப்பளு நிறைந்த தினசரி செயற்பாடுகளுக்கு மத்தியில், எமது சகல சேவை நிலையங்களிலும் உங்களுக்கு முன்னுரிமை அடிப்படையிலான சேவையை வழங்குகின்றோம். எமது எந்தவொரு கிளைக்கு நீங்கள் விஜயம் செய்தவுடன், உங்கள் தேவைகள் மற்றும் விருப்பங்களுக்கு சகல சந்தர்ப்பங்களிலும் முன்னுரிமையளிக்கப்படும்.
எமது பிரதான கிளையில் பிரத்தியேகமான ப்ரெஸ்டிஜ் வங்கிச் சேவைப்பகுதி காணப்படுவதுடன், அதனூடாக உங்களுக்கு சௌகரியம், பிரத்தியேகத்தன்மை மற்றும் வசதி போன்றன சேர்க்கப்படுகின்றன.
நீங்கள் வேலைப்பளு நிறைந்த நிலையில் இருப்பின், உங்கள் வங்கிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்வதற்கு நீங்கள் வங்கிக்கு விஜயம் செய்ய வேண்டியதில்லை. மாறாக எமது வாயிலுக்கு விஜயம் செய்யும் வங்கிச் சேவையினூடாக, அழைப்பை மேற்கொண்டு உங்கள் வங்கித் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள முடியும். உங்கள் வீட்டிலிருந்தவாறு, அலுவலகத்திலிருந்தவாறு பரந்தளவு சேவைகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வசதியை நாம் வழங்குகின்றோம்.
Door to Door Visa சேவைகளுக்கு விலைக்கழிவுகள்
We have received your inquiry and will get back to you in due course.
We use cookies that help to increase the performance of our website to serve you better, to provide social media features and to analyse our traffic. Click accept to give your consent to accept cookies and go directly to the site or click on more information to see detailed descriptions of the Privacy Policy
