இஸ்லாமிய வங்கிக் கொள்கையின் பிரகாரம் சகல செயற்பாடுகளையும் முன்னெடுக்கும் இலங்கையின் அங்கீகாரம் பெற்ற முதலாவதும் ஒரே வர்த்தக வங்கியாக அமானா வங்கி திகழ்கின்றது. வட்டி அடிப்படையிலான கொடுக்கல் வாங்கல்களை முழுமையாக தவிர்த்துள்ளதுடன், முழு அளவிலான நுகர்வோர் வங்கிச் சேவை, SME வங்கிச்சேவை, கூட்டாண்மை வங்கிச்சேவை, திறைசேரி மற்றும் வியாபார நிதிச் சேவைகள் போன்றவற்றை வழங்குகின்றது.
வளர்ச்சியை ஊக்குவித்தல் மற்றும் வாழ்க்கைக்கு வளமூட்டல் எனும் தன்னேற்புத்திட்டத்தின் பிரகாரம், தனது வளர்ந்து வரும் 32 கிளை வலையமைப்பு மற்றும் 4000க்கும் அதிகமான ATM களினூடாக 300,000க்கும் அதிகமான நுகர்வோரை சென்றடைந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான இணைய மற்றும் மொபைல் வங்கிச்சேவை, ஒன்லைன் கணக்கு ஆரம்பித்தல், VISA டெபிட் கார்ட் மற்றும் SMS அலேர்ட்ஸ், 365 நாள் வங்கிச் சேவை, சனிக்கிழமை வங்கிச் சேவை, நீடித்த வங்கி நேரங்கள், 24x7பண வைப்பு இயந்திரங்கள், சுய வங்கிச் சேவை நிலையங்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்தியேகமான வங்கி அலகுகள் போன்றவற்றைக் கொண்டுள்ளது.
அமெரிக்காவின், வொஷிங்டன் DC இல் குளோபல் ஃபினான்ஸ் சஞ்சிகையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 18ஆவது வருடாந்த உலகின் சிறந்த வங்கிகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில், உலகின் சிறந்த வளர்ந்து வரும் இஸ்லாமிய வங்கியாக அமானா வங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. தெற்காசிய அறிமுக இஸ்லாமிய நிதி அமர்வு விருதுகள் வழங்கும் நிகழ்வில், வங்கிக்கு ”சிறந்த இஸ்லாமிய நிதிச் சேவை நிறுவனம்” எனும் கௌரவிப்பும் வழங்கப்பட்டிருந்தது. ஃபிட்ச் ரேட்டிங் இனால் அமானா வங்கிக்கு தேசிய நீண்ட கால BBB-(lka) தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
Amãna Bank PLC is a stand-alone institution licensed by the Central Bank of Sri Lanka and listed on the Colombo Stock Exchange with Jeddah based IDB Group being the principal shareholder having a 28.24%. stake of the Bank. The IDB Group is a ‘AAA’ rated multilateral development financial institution with a capital base of over USD 150 Billion which has a membership of 57 countries. Testifying its position as a leading practitioner of the non-interest based banking model, Amãna Banks continued to be recognized amongst the Top 100 Strongest Islamic Bank’s in the World by The Asian Banker.
We use cookies that help to increase the performance of our website to serve you better, to provide social media features and to analyse our traffic. Click accept to give your consent to accept cookies and go directly to the site or click on more information to see detailed descriptions of the Privacy Policy

