• Expat Gold 01
  • Expat Gold 02
  • Expat Gold 03

Gold Gold Gold

அமானா வங்கி எக்ஸ்பட் கோல்ட்

Apply Now

4 3 2 1

மேலோட்டம்

மேலோட்டம்

இலகுவாக்கப்பட்ட வங்கிச் சேவைகள் வெளிநாட்டில் தொழில் புரியும் உங்களுக்காக!

கைநிறைய சம்பளம், மனதிற்கு இனிய தொழில், பாதுகாப்பான எதிர்காலம் என்பன நீங்கள் வெளிநாட்டில் தொழில் செய்யும்போது உங்களுக்குக் கிடைக்கும் நன்மைகளாகும். இருந்தபோதிலும், இலங்கையிலுள்ள உங்கள் குடும்பத்தினரைப் பிரிந்து வெளிநாட்டில் வசிப்பது எவ்விதத்திலும் இலகுவானதல்ல.

விசேட சலுகைகள் மற்றும் தரமுயர்ந்த சேவைகளுடன் உங்களுக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள அமானா வங்கியின் எக்ஸ்பட் கோல்ட் திட்டம், வெளிநாட்டில் தொழில் புரியும் உங்களின் தனித்துவமான மற்றும் வெவ்வேறு நிதித் தேவைகளை நிறைவேற்றுவதற்குச் சிறந்த வழியாகும்.

அமானா வங்கியின் எக்ஸ்பட் கோல்ட் உலகிற்கு உங்களை வரவேற்கின்றோம்!

உங்களுக்கான விசேட சேவைகள்

உங்களுக்கான விசேட சேவைகள்

வெளிநாட்டில் இருக்கும் உங்களுக்கு தேவையான வங்கியியல் தேவைகளை நாங்கள் புரிந்திருக்கின்றோம். அதன் அடிப்படையில் உங்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறான வங்கியியல் வசதிகளை வழங்குகின்றோம்.

  • உங்கள் சகல வங்கித் தேவைகளையும் மன ஆறுதலுடன் நிறைவேற்றிக்கொள்வதற்கு வசதியையும் இரகசியத் தன்மையையும் பேணுவதற்காக, உங்கள் சேவைக்கென்றே ஒரு தனிப்பட்ட முகாமையாளரை நாம் ஒதுக்கியுள்ளோம்
  • நீங்கள் இலங்கைக்கு வருகை தந்தபோது சகல அமானா வங்கிக் கிளைகளிலும் முன்னுரிமையான சேவை
  • உங்கள் கனவுகளை நனவாக்குவதற்கு, முன்னுரிமையான செயற்படுத்தல் மற்றும் சலுகை முறையிலான கட்டணங்களுடன் வீடமைப்புக்கான நிதி வசதி உள்ளிட்ட பல்வேறு நிதித் தீர்வுகளை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்..
  • பணம் வைப்புச் செய்யப்பட்ட இலவச சிறுவர் சேமிப்பு வவுச்சர்*
  • இலவச விமான நிலைய போக்குவரத்துச் சேவை*
  • இலவச சர்வதேச VISA  டெபிட் கார்ட்
  • இணையத்தள மற்றும் மொபைல் வங்கிச் சேவை
  • 24 x 7 உதவிச் சேவை: உங்கள் அவசர வங்கிச் சேவைகளைக் கவனிக்க இரவும் பகலும் செயற்படும் அழைப்பு நிலையம்.
  • பிரத்தியேக சலுகைகள்

அங்கத்துவம்

அங்கத்துவம்

அமானா வங்கி எக்ஸ்பட் கோல்ட் திட்டத்தின் பிரத்தியேக அங்கத்தவராகச் சேர்ந்து, விசேட சலுகைகளைப் பெறுதவற்கு நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்: USD 10,000 க்கு மேற்பட்ட தொகையை அல்லது இலங்கை ரூபாயில் அல்லது வேறொரு குறித்துரைக்கப்பட்ட நாணயத்தில் அதற்குச் சமமான தொகையை உங்கள் கணக்கில் பேணுங்கள்.

அமானா வங்கி எக்ஸ்பட் கோல்ட் திட்டம் பற்றியும் அதில் பிரத்தியேக அங்கத்துவம் பெறும் வழி பற்றியும் மேலதிக விபரங்களைத் தெரிந்துகொள்ள,

அர்ப்பணிக்கப்பட்ட ஹாட்லைன் : +94 11 7 756 757

மின்னஞ்சல் : [email protected] 

Apply Now

Get Membership

We have received your inquiry and will get back to you in due course.

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo