• Lulu-Exchange - Main Visual

லூலு எக்சேன்ஜ் (LuLu Exchange)

ஓமானிலுள்ள லூலு எக்சேன்ஜ் நிறுவனமானது அமானா வங்கியின் ஒத்துழைப்புடன் இலங்கைக்கு நிதிப்பரிமாற்றம் செய்யும் சேவையை தற்போது வழங்குகின்றது. 

கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த 34 இடங்களில் உள்ள லூலு எக்சேன்ஜ் கிளைகள் ஊடாக வழங்கப்படும் இந்த சேவையானது ஓமானிலுள்ள இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் சமூகத்தினருக்கு பாதுகாப்பான நிதிப்பரிமாற்ற சேவையினை வழங்குகின்றது. அத்தோடு புலம்பெயர் தொழிலாளர்களின் வசதிக்காக தெரிவுசெய்யப்பட்ட கிளைகள் வார இறுதிநாட்களிலும் சேவையினை வழங்குகின்றது. 

உடனடியாக அமானா வங்கிக் கணக்குக்கு வரவிலிடுவதற்கு பணம் அனுப்புதல்கள் இலங்கை ரூபாயிலும் அமெரிக்க டொலரிலும் அனுப்பப்பட முடியும். அதேவேளை அதேநாள் வரவிலிடுதல் வசதி இலங்கையிலுள்ள ஏனைய வங்கிகளிலுள்ள கணக்குகளுக்கும் வழங்கப்படுகின்றது. 

இலங்கையில் அமானா வங்கியின் 30 கிளைகள் கொண்ட வலைப்பின்னல் வசதியாக அமையப்பெற்றுள்ளதோடு அதன் நிதி பெறுவோர்கள் உடனடிச் சேவையை பெறுவதனை உறுதிசெய்கின்றது. அத்தோடு தெரிவுசெய்யப்பட்ட கிளைகள் நீடித்த வங்கி நேரம் மற்றும் 365 நாட்கள் சேவை என்ற சௌகரியத்தையும் வழங்குகின்றது. நிதி பெறுநர்கள் 24 மணித்தியாலங்களும் 365 நாட்களும் அவர்களுடைய கணக்குக்கு இணைப்பை ஏற்படுத்துவதை வங்கியின் 41 ATM களின் வலைப்பின்னல் உறுதிசெய்கின்றது. 

விண்ணப்பியுங்கள்
Financing Calculator
Chat on WhatsApp
govpay
logo