அமானா வங்கியைச் சேர்ந்த நாம் வங்கியியலை வித்தியாசமான முறையில் அணுகுகின்றோம். எமது கொள்கைகளின் வழிகாட்டல்களுக்கமைய, வங்கிக் கொடுக்கல் வாங்கல்களில் கௌரவிப்பு, மனித நேயம், உறுதித் தன்மை மற்றும் தனித்துவத்தன்மை போன்றவற்றை எமது சகல வாடிக்கையாளர்களுக்கும் வழங்குகின்றோம்.
எமது நிதிக் கொடுக்கல் வாங்கல்களை பணத்துக்கு (வழங்கல் மற்றும் பெறல்) மட்டுப்படுத்தாமல், வர்த்தகம், குத்தகை, முதலீடுகள் போன்ற துறைசார் கொடுக்கல் வாங்கல்களுடன் ஒன்றிணைப்பதன் மீதான கவனம் செலுத்துவதன் பிரகாரம் எமது நிறுவன மாதிரியமைப்பின் பெறுமதி முன்மொழிவு திகழ்கின்றது. தனிநபர், நிறுவனசார் மற்றும் நாடு எனும் மட்டத்திலும் இந்த பிரத்தியேகமான வழிமுறையினூடாக நிதிசார் ஒழுக்கம் பேணப்பட்டு, உறுதித் தன்மையை தோற்றுவிக்க ஏதுவாக அமைகின்றது. எமது வருமதிகளின் அடிப்படையாக நிதிசார் ஒழுக்கமின்மைக்கு மாறாக, எமது வருமதிகளை திரட்டிக் கொள்வதற்கான அடிப்படையாக நிதிசார் ஒழுக்கத்தை எமது நிறுவன மாதிரியமைப்பு கருத்துரைக்கின்றது.
எந்தளவு இலாபகரமானதாக அமைந்திருந்த போதிலும், மது, சூது மற்றும் புகையிலை போன்ற சமூகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் துறைகளில் எம்மை அல்லது உங்களின் முதலீடுகளை நாம் ஈடுபடுத்தமாட்டோம். இந்த நாட்டு மக்களின் வளர்ச்சிக்கு ஏதுவாக அமைந்து வாழ்க்கைக்கு வளமூட்டுவதை எமது தன்னேற்புத்திட்டமாகக் கொண்டுள்ளோம்.
பாரம்பரிய வங்கியியல் மற்றும் எமது வட்டிசாராத பங்கேற்பு வங்கியியல் மாதிரி ஆகியவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் தொடர்பில் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான தகவல்களை வழங்கும் அனிமேஷன் வீடியோத் தொடரை நாம் அறிமுகம் செய்துள்ளோம். பல்வேறு வங்கித் தீர்வுகளினூடாக கிடைக்கும் மனிதாபிமானத்தை முதன்மையாகக் கொண்ட உள்ளம்சங்கள் தொடர்பான மேலதிக விடயங்களை அறிந்து கொள்வதற்கு கீழே தரப்பட்டுள்ள இந்த வீடியோத் தொடரை பார்வையிடவும்.
Sign up with your name and email to explore exclusive insights and refreshing learning experience through an innovative and unparalleled platform with latest learning resources from our Knowledge Centre.
We use cookies that help to increase the performance of our website to serve you better, to provide social media features and to analyse our traffic. Click accept to give your consent to accept cookies and go directly to the site or click on more information to see detailed descriptions of the Privacy Policy

