சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அமானா வங்கியினால் ‘Breaking the Bias’ எனும் தலைப்பில் மெய்நிகர் குழுநிலை(ஒன்லைன்) கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் Women in Management (WIM) சர்வதேச அமைப்பின் தலைமை செயற்பாட்டாளர் கலாநிதி. சுலோச்சனா செகெரா, CIMA ஸ்ரீ லங்காவின் இலங்கைக்கான முகாமையாளர் சஹரா அன்சாரி ஆகியோர் பங்கேற்றிருந்தனர். தொழில்நிலையில் காணப்படும் பெண்களின் தற்போதைய மற்றும் எதிர்கால நிலைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்திருந்ததுடன், உலகளாவிய ரீதியில் காணப்படும் பெண்களின் பங்களிப்பை கொண்டாடி மகிழ்வதற்கு வாய்ப்பளிப்பதாக இந்நிகழ்வு அமைந்திருந்தது. இவர்கள் மாற்றத்துக்கு வழிகோலுவதுடன், அதிகம் நிலைபேறான எதிர்கால பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் ஏதுவாக அமைந்துள்ளனர். இந்த நிகழ்வின் தொகுப்பாளராக வங்கியின் டெபிட் கார்ட் மற்றும் பெறுமதி சேர் சேவைகள் பிரிவின் உதவி முகாமையாளர் முஹாரா ரஸாக் செயலாற்றினார்.
கலாநிதி. சுலோச்சனா செகெரா கருத்துத் தெரிவிக்கையில், “ஆண்கள் அல்லது பெண்கள் எவருக்கும் தலைமைத்துவம் என்பது ஒரு திறனாக அமைந்திருப்பதுடன், தலைமைத்துவத்தில் ஏதேனும் பாரிய பாலின வேறுபாடுகள் காணப்படுவதில்லை. இந்தப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இவ்வாறான அமர்வொன்றை ஏற்பாடு செய்திருந்தமைக்காக அமானா வங்கிக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.
சஹாரா அன்ஸாரி கருத்துத் தெரிவிக்கையில், “பக்கசார்பு, பாகுபாடு மற்றும் ஓரங்கட்டல் போன்றன இல்லாத உலகத்தில் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் உள்ளடக்கம் போன்றன காணப்படும். பாகுபாடுகளுக்கு பெறுமதியளிக்கப்பட வேண்டும் என்பதுடன், அவை கொண்டாடப்பட வேண்டியதுடன், தினசரி - எமது சிந்தனைகள் மற்றும் செயற்பாடுகளுக்கு நாம் பொறுப்பாளிகளாக இருக்க வேண்டியதும் முக்கியமானதாகும். அப்போது தான் எம்மால் சமூகங்களில், பணியிடங்களில், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் காணப்படும் பாகுபாடுகளை ஒன்றாக அகற்றக்கூடியதாக இருக்கும். அமானா வங்கியின் இந்த சர்வதேச மகளிர் தின அமர்வுகளில் பங்கேற்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். இந்த அமர்வில் பங்கேற்றிருந்த இளம் பெண்களின் ஈடுபாடு மற்றும் விருப்புகள் திருப்திகரமானவையாக அமைந்திருந்தன. அனைவருக்கும் நல்வாழ்த்துகள்!” என்றார்.
வங்கியின் செயற்திட்டம் தொடர்பாக பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “சமூகத்திலும் பொருளாதாரத்திலும் பெண்கள் ஆற்றும் பங்களிப்பை அமானா வங்கி கௌரவிக்கின்றது. எமது அனுபவம் வாய்ந்த வளவாளர்களின் வெற்றிகரமான கதைகள் பற்றி எம் இளம் தலைமுறையினருக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்று அனுகூலம் பெற்ற அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.
UNSDG இன் பாலின சமத்துவம் தொடர்பான இலக்கு 5 இன் பிரகாரம், பெண்களுக்காக பிரத்தியேகமான சேவைகளை வழங்கும் இலங்கையின் ஒரே வங்கியாக அமானா வங்கி திகழ்கின்றது. இதில் தலைமையகத்தில் பெண்களுக்கான பிரத்தியேகமான பெண்கள் கிளை அமைந்திருப்பதுடன், தெரிவு செய்யப்பட்ட கிளைகளில் பிரத்தியேகமான பெண்கள் அலகுகள் காணப்படுகின்றன. வங்கியினால் பிரத்தியேகமான பெண்கள் சேமிப்புக் கணக்குகள், பெண்கள் நடைமுறைக் கணக்குகள், பெண்கள் தொழில்முயற்சியாண்மைக்கான நிதியளிப்புகள் மற்றும் ஒன்லைன் கொடுக்கல் வாங்கல் வசதி மற்றும் வருடம் முழுவதுக்குமான சலுகைகளுடனான பிரத்தியேகமான பெண்கள் டெபிட் அட்டை போன்றன வழங்கப்படுகின்றன.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2021 செப்டெம்பர் மாதத்தில் அமானா வங்கியின் நீண்ட கால தரப்படுத்தலை BB+(lka) உறுதியான தோற்றப்பாட்டுடன் வழங்கியிருந்தது. அமானா வங்கி வேறு எவ்வித துணை நிறுவனங்களையோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களையோ கொண்டிருக்கவில்லை.