• Amãna Bank PLC Blog Detail - Main Visual

மாணவர்களுக்கு நெகிழ்ச்சியான நிதிவசதியளிப்பினூடாக வலுவூட்டுவதற்கு Bristol Institute உடன் அமானா வங்கி கைகோர்ப்பு

அமானா வங்கி January 23, 2025

மக்களுக்கு நட்பான கல்வி நிதிவசதியளிப்பு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்காக அமானா வங்கி Bristol Institute of Business Management (BIBM) உடன் கைகோர்த்துள்ளது. அதன் மூலமாக, ஐக்கிய இராஜ்ஜியத்தின் West of England (UWE) பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளை தொடர்வதற்கு இந்த வசதியை பெற்றுக் கொள்ள முடியும். கல்விசார் மற்றும் நிபுணத்துவ சிறப்பை நாடும் மாணவர்களின் பரந்தளவு தேவைகளை நிவர்த்தி செய்வதற்கு நெகிழ்ச்சியான மற்றும் சகாயமான நிதிசார் உதவியை வழங்கி தரமான கல்வியை பெற இந்த கைகோர்ப்பு பங்களிப்பு வழங்கும்.

இந்தப் பங்காண்மையின் பெறுபேறாக, மாணவர்களுக்கு தமது MBA, MSc, LLM மற்றும் பட்டப்படிப்பை தொடர்வதற்கு BIBM இல் இணைந்து கொள்ள அமானா வங்கியின் கல்வி நிதிவசதியளிப்பை ரூ. 5 மில்லியன் வரை பெற்றுக் கொள்ள முடியும். ஐந்து வருடங்கள் வரை நெகிழ்ச்சியான மீளச் செலுத்தும் தவணைகளுடன், போட்டிகரமான தவணைகள் மற்றும் மாணவர்களுக்கு தமது பெற்றோருடன் இணைந்து மீளச் செலுத்தும் தெரிவு போன்ற பல வசதிகளை வழங்குகின்றது.

இந்தப் பங்காண்மை தொடர்பில் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக் அக்பர் கருத்துத் தெரிவிக்கையில், “Bristol Institute உடன் கைகோர்த்து, மாணவர்களுக்கு தமது கல்விசார் இலக்குகளை எய்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம். நெகிழ்ச்சியான மற்றும் சகாயமான நிதிவசதி தீர்வுகளினூடாக தரமான கல்வியை பெற்று அடுத்த தலைமுறை நிபுணர்களை ஏற்படுத்துவதற்கான வலுவூட்டலாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது.” என்றார்.

Bristol Institute இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி தில்ஷாத் ஜிஃப்ரி கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கியுடனான இந்த பங்காண்மையினூடாக, எமது மாணவர்களுக்கு நிதிச் சுமை தொடர்பில் கவலையின்றி தமது கல்வியை தொடர்வதில் கவனம் செலுத்துவதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. கல்விசார் மற்றும் நிபுணத்துவ வெற்றியை ஏற்படுத்திக் கொடுப்பதில் நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கு கிடைத்த சாதகமான அம்சமாக இது அமைந்துள்ளது.” என்றார்.

சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தகைமைகளுடன் தமது தொழில் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்க்கும் மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு தற்போது இந்த பிரத்தியேகமான கல்வி நிதிவசதியளிப்பு தீர்வை பெற்றுக் கொள்ள முடியும். வங்கியின் ஒன்லைன் நிதிவசதியளிப்பு போர்டலானhttps://www.amanabank.lk/personal/financial-support/education-finance.html ஊடாக வாடிக்கையாளர்களுக்கு விண்ணப்பிக்க முடியும் அல்லது எந்தவொரு அமானா வங்கிக் கிளைக்கும் விஜயம் செய்து அல்லது BIBM பிரதிநிதி ஒருவருடன் உரையாடி பெற்றுக் கொள்ள முடியும்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

பட தலைப்பு : அமானா வங்கி மற்றும் Bristol Institute of Business Management (BIBM) ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை பரிமாற்றம்

இடமிருந்து: ரியாஸ் நூர் – அமானா வங்கியின் நிதியளிப்பு பிரிவின் தலைமை அதிகாரி, தில்ஷாத் ஜிஃப்ரி – பிரதம செயற்பாட்டு அதிகாரி Bristol Institute, யாதவ் பிரசாத் – முகாமையாளர் (விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல்) Bristol Institute.

Featured

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo