A- A A+
தேடுதல்
  • Amãna Bank PLC Blog Detail - Main Visual

தேசிய பரா தடகள தங்கப் பதக்க வெற்றியாளர் காலித் ஒஸ்மானுக்கு அமானா வங்கி அனுசரணை

அமானா வங்கி November 26, 2024

பல சவால்களை எதிர்கொண்டு, இலங்கையின் விளையாட்டு சமூகத்தில் பலருக்கும் முன்மாதிரியானவராக திகழும் பார்வை குறைபாட்டைக் கொண்ட தடகள வீரரான காலித் ஒஸ்மானுக்கு தமது அனுசரணையை நீடித்துள்ளதாக அமானா வங்கி அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் காலித்தின் உத்தியோகபூர்வ பயிற்சி அனுசரணையாளராக கைகோர்த்திருந்த அமானா வங்கி, அவரின் சிறந்த பயணத்துக்கான தமது ஆதரவை மேலும் தொடர்வதற்கு தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.

26 வயது கண் பார்வையை இழந்த காலித் ஒஸ்மான், அநாதரவாக வளர்ந்திருந்தார். இவர் பல சவால்களை வாழ்வில் எதிர்கொண்டு அனுபவம் பெற்றுள்ளார். தடைகளை கண்டு சளைக்காமல், அனைவருக்கும் முன்மாதிரியானவராக தம்மை வளர்த்துக் கொண்டுள்ளார். பெருமைக்குரிய போட்டிகளில் போட்டியிட்டும், உள்ளடக்கம் மற்றும் வலுவூட்டலையும் உறுதி செய்துள்ளார். தேசிய பரா தடகள போட்டிகள் 2024 இல் 100 மீற்றர் குறுவிரையோட்டத்தில் (sprint) தங்கப் பதக்கத்தை வென்றுள்ளமை, பார்வை குறைந்தவர்களுக்கான குத்துச் சண்டையில் தங்கப் பதக்கம் மற்றும் இந்தியாவில் நடைபெற்ற 4ஆவது சர்வதேச தெற்காசிய விளையாட்டு போட்டிகளில் 5 கிலோமீற்றர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் போன்றன இவரின் சாதனைகளில் சிலவாகும். அத்துடன் வியட்னாம், இந்தியா மற்றும் இலங்கையில் பல Ironman 70.3 போட்டிகளையும் இவர் பூர்த்தி செய்துள்ளார். பல தேசிய மற்றும் சர்வதேச மரதன் ஓட்டப் போட்டிகளிலும் இவர் பங்கேற்றுள்ளதுடன், பார்வை குறைபாட்டை கொண்டவர்களுக்கான T20 உலகக் கிண்ணப் போட்டிகள் 2017 மற்றும் 2022 ஆகியவற்றில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.

அமானா வங்கியின் ஆதரவு தொடர்பில் தனது நன்றியை தெரிவிக்கும் முகமாக காலித் ஒஸ்மான் கருத்துத் தெரிவிக்கையில், “எனது பயிற்சி அனுசரணையாளராக அமானா வங்கி வழங்கும் இணையற்ற ஆதரவுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். எனது பயணத்தில் அவர்களின் அர்ப்பணிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருப்பதுடன், எனது பயிற்சியில் கவனம் செலுத்தவும், உயர் நிலைகளை போட்டியிடவும் அவர்களின் அர்ப்பணிப்பு பக்கபலமாக அமைந்துள்ளது. சவால்களை எதிர்கொள்வதற்கும், இலக்குகளை எய்துவதற்கும் அவசியமான உறுதித்தன்மை மற்றும் ஊக்குவிப்பை வங்கி வழங்கியுள்ளது. இந்தப் பங்காண்மை என்பது வெறும் நிதிசார் அனுசரணை மட்டுமல்ல. எனது ஆற்றல்களில் நம்பிக்கை கொண்டு, எம்மால் இணைந்து ஏற்படுத்தக்கூடிய நேர்த்தியான தாக்கம் என்பதாக அமைந்துள்ளது. அநாதரவாக வளர்ந்து, அவர்களுக்கு காணப்படும் சவால்களை புரிந்து கொண்டுள்ள நான், அமானா வங்கியின் ஸ்தாபக அனுசரணையில் முன்னெடுக்கப்படும் OrphanCare திட்டம் தொடர்பில் மகிழ்ச்சியடைகின்றேன். இந்தத் திட்டத்தினூடாக, அநாதரவான சிறுவர்கள் 18 வயதை பூர்த்தி செய்ததும், தமது பராமரிப்பு இல்லங்களிலிருந்து வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப்படுவதில் கவனம் செலுத்தும் திட்டமாக அமைந்துள்ளது.” என்றார்.

வங்கியின் பங்களிப்பு தொடர்பில் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல்கள் பிரிவின் தலைமை அதிகாரி அசீம் ராலி கருத்துத் தெரிவிக்கையில், “காலித் ஒஸ்மானின் சாதனைகளை நேரடியாக காணக் கிடைத்திருந்ததை தொடர்ந்து, அவரின் பயணம் விடாமுயற்சி மற்றும் குறிக்கோளைக் கொண்டதாக அமைந்துள்ளது என்பதை என்னால் உறுதியாக குறிப்பிட முடியும். விளையாட்டு உலகில் அவர் தடைகளைத் தகர்த்து, புதிய சாதனைகளை படைக்கும் போது, அவரின் அருகாமையில் மீண்டும் நாம் இருப்பதையிட்டு பெருமை கொள்கின்றோம். எமது OrphanCare திட்டத்தில் காலித் அங்கம் வகிக்கின்றமை தொடர்பிலும் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அவரின் உத்வேகமான கதையுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாக இது அமைந்துள்ளது. நேர்த்தியான மாற்றத்தை முன்னெடுக்கும் நபர்களுக்கு வலுவூட்டுவதற்கான எமது பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்த பங்காண்மை பிரதிபலித்துள்ளதுடன், காலித்தின் சகல முயற்சிகளும் வெற்றிகரமானதாக அமைய நல்வாழ்த்துகளை தெரிவிக்கின்றோம்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

படத்தின் தலைப்பு: அமானா வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல் தலைமை அதிகாரி அசீம் ராலி, விசேட மேற்சட்டையை, காலித் ஒஸ்மானுக்கு வழங்குகிறார்.

Featured

Hajj 2025

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp