A- A A+
தேடுதல்
  • Amãna Bank PLC Blog Detail - Main Visual

அமானா வங்கி விருதுகள் 2024 இல் சிறந்த செயற்பாட்டாளர்களை அமானா வங்கி கௌரவித்தது

அமானா வங்கி November 26, 2024

அமானா வங்கி அண்மையில் தனது பெருமைக்குரிய அமானா வங்கி விருதுகள் 2024 நிகழ்வை “சிறப்புக்கு வெகுமதியளித்தல்” ('Rewarding Excellence') எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்திருந்தது. ஊழியர்களின் சிறந்த வெற்றிகரமான செயற்பாடு மற்றும் பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு அமைந்திருந்தது. இந்த நிகழ்வு கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பிரதான பங்காளர்கள், ஊழியர்கள் மற்றும் விசேட விருந்தினர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இவர்களின் வங்கியின் அர்ப்பணிப்பான ஊழியர்களின் சிறந்த செயற்பாடுகளை பாராட்டியிருந்தனர்.

அமானா வங்கி விருதுகள் 2024 நிகழ்வு, அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பராலி, IsDB Group பணிப்பாளர்களான மொஹமட் அதாவுர் ரஹ்மான் சௌத்ரி மற்றும் மொஹமட் ஹாஸன் ஆகியோரின் பங்கேற்புடனும், இதர பணிப்பாளர்களான திஷான் சுபசிங்க, தில்ஷான் ஹெட்டியாரச்சி, மொஹமட் ஆதமலி, கைருல் முஸமெல் பெரேரா, டெல்வின் பெரேரா மற்றும் அஸரின் சஹிர் ஆகியோருடன், வங்கியின் இரண்டாவது மாபெரும் பங்காளர்களான கலாநிதி. ரி. செந்தில்வேல் மற்றும் நந்தன் செந்தில்வேல் ஆகியோரின் பங்கேற்புடனும் நடைபெற்றது.

நீண்ட கால அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசம் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், வங்கியில் பத்து வருட கால சேவையை பூர்த்தி செய்திருந்த 180 ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு விசேட கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.

தமது பிரதான விருதுகளின் அங்கமாக, 30 விருதுகள் பிரிவில் 70 ஊழியர்கள் கௌரவிக்கப்பட்டிருந்தனர். இந்த நிகழ்வின் விசேட அம்சமாக, பிரதம நிறைவேற்று அதிகாரி விருது வழங்கப்பட்டமை அமைந்திருந்தது. தமது வழமையான பணிகளுக்கு அப்பால் சிறந்த அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்திய செயலாற்றியிருந்தவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது. இந்த விருதை தசுன் சமரசிங்க (முகாமையாளர் – IT உட்கட்டமைப்பு கட்டமைப்புகள்), மஸ்னவி ரூமி (முகாமையாளர் – மூலோபாயம் மற்றும் நிலைபேறாண்மை), ஹிலுஃபா அகீஸ் (முகாமையாளர் – நிறுவனசார் விருத்தி மற்றும் தொழில் நிலை முன்னேற்றம்) மற்றும் ஷாகிர் நவாஸ் (முகாமையாளர் - நிதியியல்) ஆகியோர் பெற்றுக் கொண்டனர். கிளை விருதுகள் பிரிவில் வங்கியின் புறக்கோட்டை கிளை சிறந்த விருதுக்கான தங்க விருதை சுவீகரித்தது. இதனை கிளை முகாமையாளர் நிஷாத் நவாஸ் பெற்றுக் கொண்டார். மாத்தளை கிளை வெள்ளி விருதை சுவீகரித்தது. இதனை கிளையின் முகாமையாளர் இஃபாம் இன்திசார் பெற்றுக் கொண்டார்.

தமது ஆரம்ப உரையின் போது முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “எமது ஊழியர்கள் பெறுமதி வாய்ந்த சொத்தாக அமைந்துள்ளனர். அவர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளினூடாக அமானா வங்கியை முன்நோக்கி கொண்டு செல்ல முடிந்துள்ளது. அவர்களின் அதிசிறந்த அர்ப்பணிப்பு மற்றும் சேவை போன்றவற்றை கொண்டாடும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு அமைந்திருப்பதுடன், சவால்கள் நிறைந்த சூழல்களில் எமது திரண்ட ஆற்றலை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இன்று நாம், தனிநபர் சாதனைகளை மாத்திரம் கௌரவிக்காமல், மொத்த மாதிரியின் வெற்றிகரமான செயற்பாட்டையும் கௌரவிக்கின்றோம். சகல பிரேரிப்பாளர்களுக்கும் வெற்றியாளர்களுக்கும் நல்வாழ்த்துகள் – உங்களின் சிறந்த செயற்பாடு வெற்றிகரமான பயணத்தில் புதிய அத்தியாயங்களை தொடர்ந்தும் பதிய எமக்கு உதவுவதாக அமைந்துள்ளது. எம்முடன் 10 வருட காலத்தை பூர்த்தி செய்துள்ள 180 ஊழியர்களுக்கு நான் வாழ்த்துகளுடன் நன்றியை தெரிவிக்கின்றேன். உங்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஈடுபாடு உண்மையில் பாராட்டுதலுக்குரியது.” என்றார்.

வங்கியின் பிரதான பங்குதாரரான IsDB குரூப் சார்பாக, நிறைவேற்று அதிகாரமற்ற, சுயாதீனமற்ற பணிப்பாளர் மொஹமட் அதாவுர் ரஹ்மான் சௌத்ரி, ஒன்றுகூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய போது, அமானா வங்கியின் தற்போதைய வெற்றிகரமான செயற்பாட்டுக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றும் சகல ஊழியர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்திருந்தார். உலகளாவிய ரீதியில் இஸ்லாமிய வங்கிச் சேவைகளை ஊக்குவிப்பதில் அமானா வங்கி வெற்றிகரமான முன்னுதாரணமாக அமைதிருப்பதுடன், தமது வெற்றிகரமான முதலீட்டுக்கான வங்கிகளில் ஒன்றாகவும் அமைந்திருப்பதாக குறிப்பிட்டார். மேலும், ஒரு முதலீட்டாளர் எனும் வகையில், அமானா வங்கியின் சாதனை தொடர்பில் தாம் பெருமை கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

தவிசாளர் அஸ்கி அக்பராலி கருத்துத் தெரிவிக்கையில், “எமது வங்கியின் வலிமை என்பது எமது அணியின் திறமையான செயற்பாடுகளில் தங்கியிருப்பதுடன், தனிநபர் ஒவ்வொருவரினதும் செயற்பாடுகள் வங்கியின் வெற்றிகரமான செயற்பாட்டில் பெருமளவு பங்களிப்பை மேற்கொண்டுள்ளன. துரித வளர்ச்சிக்கு தன்னை நிலை நிறுத்துவதற்கு அவசியமான சகல அம்சங்களையும் வங்கி தன்வசம் கொண்டுள்ளதுடன், அர்ப்பணிப்பான மற்றும் சிறந்த அணியுடன் தனது சென்றடைவு விரிவாக்கத்தை மேற்கொள்ளக்கூடிய வகையில் தந்திரோபாய ரீதியில் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. சில சாதனைகளை விருதுகளினூடாக கௌரவித்த போதிலும், ஒவ்வொரு நபரின் பங்களிப்புகளும் எமது முன்னேற்றத்துக்கும் அவை வருடாந்தம் உத்தரவாதமளிப்பதாக அமைந்துள்ளன. முன்னரை விட நாம் உயர்ந்த நிலையை எதிர்பார்க்கும் சந்தர்ப்பத்தில் இந்நிலை தொடர வேண்டுமென கருதுகின்றோம்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

படத்தின் தலைப்பு - இடமிருந்து:

அஸ்கி அக்பராலி தவிசாளர் – அமானா வங்கி

மொஹமட் அஸ்மீர் முகாமைத்துவ பணிப்பாளர் /பி.நி.அ. அமானா வங்கி

மொஹமட் அதாவுர் ரஹ்மான் சௌத்ரி நிறைவேற்று அதிகாரமற்ற, சுயாதீனமற்ற பணிப்பாளர் – அமானா வங்கி

அமானா வங்கியின் பிரதம பங்காளர், கலாநிதி. செந்தில்வேல், விருதொன்றை கையளிக்கின்றார்

பிரதம நிறைவேற்று அதிகாரி விருது வெற்றியாளர்கள் தவிசாளர் அஸ்கி அக்பராலி மற்றும் முகாமைத்துவ பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் ஆகியோருடன் காணப்படுகின்றனர். இடமிருந்து: தசுன் சமரசிங்க (முகாமையாளர் – IT உட்கட்டமைப்பு கட்டமைப்புகள்), மஸ்னவி ரூமி (முகாமையாளர் – மூலோபாயம் மற்றும் நிலைபேறாண்மை), மொஹமட் அஸ்மீர் (அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் /பி.நி.அ.), அஸ்கி அக்பராலி (அமானா வங்கியின் தவிசாளர்), ஹிலுஃபா அகீஸ் (முகாமையாளர் – நிறுவனசார் விருத்தி மற்றும் தொழில் நிலை முன்னேற்றம்) மற்றும் ஷாகிர் நவாஸ் (முகாமையாளர் - நிதியியல்).

Featured

Open Online Account
My Hajj
2026
விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp