அமானா வங்கி தனது பண வைப்பு இயந்திர (CDM) வலையமைப்பை விஸ்தரித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன் பிரகாரம் தனது கிளை வளாகத்தில் 8 புதிய CDM களை நிறுவியுள்ளது. அக்கறைப்பற்று (இல. 102, பிரதான வீதி, அக்கறைப்பற்று), பதுளை (இல. 18/1, லோவர் கிங்ஸ் வீதி, பதுளை), தெமட்டகொட (இல. கென்ட் வீதி, தெமட்டகொட, கொழும்பு 9), சம்மாந்துறை (ஹாஜியார் பெலஸ், ஹிஜ்ரா சந்தி, அம்பாறை வீதி, சம்மாந்துறை), நிந்தவூர் (இல. 40/5, பிரதான வீதி, நிந்தவூர்), ஏறாவூர் (இல. 108/5, புன்னகுடா வீதி, ஏறாவூர்), கிண்ணியா (இல. 264, பிரதான வீதி, கிண்ணியா) மற்றும் கதுருவெல (இல. 379, பிரதான வீதி, கதுருவெல) ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள கிளைகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த CDM விரிவாக்க செயற்பாட்டினூடாக வங்கியினால் அதன் கிளைகள் மற்றும் சுய-வங்கிச்சேவை நிலையங்கள் போன்ற வலையமைப்பு காணப்படும் 55 பகுதிகளில் 24x7நேரமும் பண வைப்புச் செய்யும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விரிவாக்கம் தொடர்பில் அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “எமது வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற மற்றும் சௌகரியமான வங்கியியல் அனுபவத்தை பெற்றுக் கொடுப்பதற்கான எமது முயற்சிகளின் ஒரு அங்கமாக அமானா வங்கியின் CDM விஸ்தரிப்பு நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. புதிய ஸ்தாபிப்புகளுடன், அப்பிரதேசங்களைச் சேர்ந்த தனிநபர் வாடிக்கையாளர்கள் மற்றும் வியாபாரங்களுக்கு எந்நேரத்திலும் பணத்தை வைப்புச் செய்யும் வசதியை அமானா வங்கி ஏற்படுத்தியுள்ளது.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. 2023 ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட தேசிய நீண்ட கால தரப்படுத்தலில் BB+(lka) எனும் உறுதியான தோற்றத்தை வழங்கியிருந்தது.
OrphanCare அமைப்பின் ஸ்தாபக அனுசரணையாளர் என்பதற்கு அப்பால், எவ்விதமான துணை, இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.
படம் - நிந்தவூர் கிளையில் வாடிக்கையாளர் ஒருவர் CDM இயந்திரத்தை பயன்படுத்துகின்றார்