• Amãna Bank PLC Blog Detail - Main Visual

நாடளாவிய ரீதியில் ஈடுபாட்டு செயற்பாடுகளுடன் அமானா வங்கி சிறுவர் தினத்தை கொண்டாடியது

அமானா வங்கி December 1, 2023

2023 சர்வதேச சிறுவர் தினத்தை நாடளாவிய ரீதியில் பல்வேறு சிறுவர்களுக்கான விசேட ஈடுபாட்டு நிகழ்வுகளுடன் அமானா வங்கி கொண்டாடியது. தனது கிளை வலையமைப்பினூடாக, பாடசாலைகள், முன்பள்ளிகள், அநாதை இல்லங்கள் மற்றும் பொது இடங்களில் இந்த செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தது. அமானா வங்கியின் கிளைகள் அமைந்திருக்கும் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்களுடன் களிப்பூட்டும் தின நிகழ்வுகள், விளையாட்டுகள் மற்றும் பரிசுகளை வழங்கி கொண்டாடியது.

களிப்பூட்டும் அம்சங்களுக்கு மேலாக, சிறுவர்கள் மத்தியில் சேமிப்பின் முக்கியத்துவத்தையும் அமானா வங்கி உணர்த்தியிருந்தது. உறுதியான நிதிசார் அடித்தளம் என்பது, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அத்தியாவசியமானது எனும் நம்பிக்கையின் அடிப்படையில், சிறுவர்கள் மத்தியில் சேமிப்பின் பெறுமதியை உணர்த்துவதற்கும், பொறுப்பு வாய்ந்த நிதிசார் முகாமைத்துவத்தை கொண்டிருப்பது பற்றிய தெளிவுபடுத்தல்களையும் வழங்கியிருந்தது.

சிறுவர் தின செயற்பாடுகள் தொடர்பாக வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் கூட்டாண்மை தொடர்பாடல்கள் தலைமை அதிகாரி அசீம் ராலி கருத்துத் தெரிவிக்கையில், “எமது கிளை சமூகத்துடன் தொடர்புகளை ஏற்படுத்தி, ஒன்றுக்கு மேற்பட்ட சிறுவர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தையிட்டு அமானா வங்கி மகிழ்ச்சியடைகின்றது. களிப்பூட்டும் வகையில் இந்த நிகழ்வுகள் அமைந்திருப்பது மாத்திரமன்றி, அறிவூட்டுவதற்கும் ஏதுவாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக நாட்டின் சிறுவர்கள் மத்தியில் நிதிசார் நலனை ஊக்குவிப்பதற்கு நாம் எம்மை அர்ப்பணித்துள்ள நிலையில், இவ்வாறான நிகழ்வுகள் உதவியாக அமைந்துள்ளன.” என்றார்.

அமானா வங்கியின் சிறுவர் சேமிப்பு கணக்கினூடாக, சிறுவரின் சேமிப்பு பழக்கம் இளம் வயது முதல் ஊக்குவிக்கப்படுகின்றது. புதிதாக பிறந்த குழந்தையின் பெற்றோர்களுக்கு ரூ. 1000 பெறுமதியான சேமிப்பு வவுச்சர்களை வழங்குவது, Daraz உடன் இணைந்து உங்களின் கணக்கு மீதி வளர்ச்சியடைவதற்கேற்ப வெகுமதிகள், போனஸ் நிலையான ஆணை வெகுமதிகள் மற்றும் கல்விசார் சிறந்த பெறுபேறுகளின் அடிப்படையில் வெகுமதிகள் போன்றன அடங்கலாக பல வெகுமதிகளையும் வழங்குகின்றது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. 2023 ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட தேசிய நீண்ட கால தரப்படுத்தலில் BB+(lka) எனும் உறுதியான தோற்றத்தை வழங்கியிருந்தது.

OrphanCare அமைப்பின் ஸ்தாபக அனுசரணையாளர் என்பதற்கு அப்பால், எவ்விதமான துணை, இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.

Featured

விண்ணப்பியுங்கள்
Financing Calculator
Chat on WhatsApp
govpay
logo