அமானா வங்கி தனது வாடிக்கையாளர் அமைவிடங்களை 66 ஆக அதிகரித்துள்ளது. தனது 33ஆவது சுய வங்கிச் சேவை நிலையத்தை, அம்பாறை மாவட்டத்தின், இறக்காமம் பகுதியில் திறந்துள்ளதனூடாக இந்த விஸ்தரிப்பை மேற்கொண்டுள்ளது. இறக்காமம் சுய வங்கிச் சேவை நிலையத்தின் அங்குரார்ப்பணமானது, வங்கியின் சேவை வழங்கல்களை விஸ்தரிப்பது மற்றும் முன்னர் வங்கிச் சேவைகளை அனுபவித்திருக்காதவர்களுக்கு நிதிசார் உள்ளடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற வங்கியின் இலக்குகளின் அடிப்படையில் அமைந்துள்ளது.
சுய வங்கிச்சேவை நிலையத்தை வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால், வைப்புகள் மற்றும் டிஜிட்டல் புத்தாக்கங்களுக்கான உதவி உப தலைவர் அர்ஷாத் ஜமால்தீன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்வில், அரச அதிகார தரப்பினர், கிழக்கு பிராந்திய கிளை முகாமையாளர்கள், வியாபார பிரதிநிதிகள், பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த நிலையம் இல. 90, அம்பாறை வீதி, இறக்காமம் எனும் முகவரியில் அமைந்துள்ளது. எந்நேரமும் பண வைப்பு, மீளப்பெறல் மற்றும் காசோலை வைப்பு சேவைகளை மேற்கொள்ள முடியும்.
நிலையத்தை அங்குரார்ப்பணம் செய்தமை தொடர்பில் வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “எமது சுய வங்கிச் சேவை நிலையத்தை இறக்காமம் பகுதியில் திறந்துள்ளதனூடாக, நிதிசார் உள்ளடக்கத்தை ஊக்குவிப்பது மற்றும் எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கும், சமூகத்தாருக்கும் பரந்தளவு வங்கிச் சேவைகளை இலகுவாக அணுகும் தன்மையை ஏற்படுத்திக் கொடுப்பது போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.
இடமிருந்து:இறக்காமம் சுய வங்கிச் சேவை நிலையத்தின் அங்குரார்ப்பண நிகழ்வில், இம்தியாஸ் இக்பால் (அமானா வங்கி பிரதம செயற்பாட்டு அதிகாரி), எம்.எஸ்.எம். ரசான் (பிரதேச செயலாளர் – இறக்காமம்) உள்ளூர் வியாபார பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பிரதேசவசாசிகளுடன், அமானா வங்கி ஊழியர்களும் காணப்படுகின்றனர்.