A- A A+
தேடுதல்
  • Amãna Bank PLC Blog Detail - Main Visual

LankaPay Technnovation Awards இல் அமானா வங்கிக்கு ‘சிறந்த பொது ATM செயற்படுத்துநர்’ விருது வழங்கி கௌரவிப்பு

அமானா வங்கி July 12, 2024

அமானா வங்கிக்கு சிறந்த பொது செயற்பாட்டாளர் (பிரிவு C) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது. தேசிய LankaPay கொடுப்பனவு வலையமைப்பை செயற்படுத்தும் LankaClear Limited இனால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த LankaPay Technnovation Awards நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. இலத்திரனியல் கொடுப்பனவுகளை ஊக்குவிப்பது மற்றும் தொழினுட்ப புத்தாக்கங்களினூடாக வாடிக்கையாளர் சௌகரியத்தை மேம்படுத்துவதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தும் நிதிசார் தொழினுட்ப புத்தாக்கங்களுக்கு இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்த கௌரவிப்பு தொடர்பில் அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “புத்தாக்கம் மற்றும் தொழினுட்பம் போன்றவற்றினூடாக நிதிசார் உள்ளடக்கம் வாடிக்கையாளர் சென்றடைவு மற்றும் சௌகரியம் ஆகியவற்றில் நாம் தொடர்ச்சியாக காண்பிக்கும் முயற்சிகளுக்கு மீண்டும் ஒரு முறை LankaPay இனால் கௌரவிக்கப்பட்டுள்ளோம். எமது டிஜிட்டல் செயற்படுத்தப்பட்ட சுய வங்கிச் சேவை நிலைய வலையமைப்பை விஸ்தரிப்பதற்கான முதலீட்டின் மூலமாக தற்போது நாடளாவிய ரீதியில் 29 பகுதிகளில் இந்நிலையங்களைக் கொண்டுள்ளோம். இவற்றினூடாக, பின்தங்கிய பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் இலகுவான முறையில் வங்கிக் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் வசதியை வழங்குகின்றோம். அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் டிஜிட்டல் எதிர்காலத்தை நோக்கி இலங்கையை கொண்டு செல்லல் போன்றவற்றை நோக்கி எமது சேவைகளை மேம்படுத்துவதில் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

படத்தின் தலைப்பு: Technovation Awards 2024 இல், அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி – இம்தியாஸ் இக்பால் மற்றும் உதவி உப தலைவர் (வைப்புகள் பரவலாக்கம்) – அர்ஷாத் ஜமால்தீன் ஆகியோர் அணியினருடன் விருதைப் பெறுகின்றனர்.

Featured

Open Online Account
My Hajj
2026
விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp