• Amãna Bank PLC Blog Detail - Main Visual

அமானா வங்கியின் கடன் தரப்படுத்தல் ஃபிட்ச் இனால் BBB-(lka) முதலீட்டு தரமாக உயர்த்தப்பட்டுள்ளது

அமானா வங்கி August 30, 2024
  • வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்கான பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது

2024 ஆகஸ்ட் மாதம் முன்னெடுக்கப்பட்ட பிந்திய தரப்படுத்தல் மீளாய்வில், ஃபிட்ச் ஸ்ரீ லங்காவினால், அமானா வங்கியின் தேசிய நீண்ட கால கடன் தரப்படுத்தலை BB+(lka) இலிருந்து உறுதியான தோற்றப்பாட்டுடன் BBB-(lka) எனும் முதலீட்டு தரத்துக்கு உயர்த்தியுள்ளது.

ஃபிட்ச் ரேட்டிங்ஸ் வெளியிட்டிருந்த அறிக்கையின் பிரகாரம், இந்த தரப்படுத்தல் மெருகேற்றத்தினூடாக, அமானா வங்கியின் நிதிசார் கோவை சிறந்த முன்னேற்றங்களை பதிவு செய்துள்ளதுடன், அதன் போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் சிறந்த தரப்படுத்தலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமானா வங்கியின் தொழிற்படு இலாபம்/இடர் சேர்க்கப்பட்ட சொத்துகள் விகிதம் (நான்கு ஆண்டு சராசரி 2%, 1H24: 2.9%) முன்னேற்றம் கண்டிருந்ததுடன், தொழிற்படு சூழல் சவால்கள் நிறைந்ததாக அமைந்திருந்ததுடன், ஆரோக்கியமான நிகர நிதியளிப்பு எல்லைகள், அந்நியச் செலாவணி வியாபாரம் (நான்காண்டு சராசரி தொழிற்படு இலாபத்தின் 38% ஆக அமைந்திருந்தது) அளவான வர்த்தக வருமதியை பதிவு செய்திருந்ததுடன், குறைந்தளவு கடன் செலவுகளையும் கொண்டிருந்தது. இந்த முன்னேற்றகரமான இலாபகரத்தன்மை நடுத்தர கால அளவில் பதிவாகியிருக்கும் என்பதுடன், வங்கியின் முற்பண புத்தகங்கள் அதிகளவு விளைவுகளை வழங்கும் சிறிய நடுத்தரளவு தொழில் முயற்சியாண்மைகள் மற்றும் சில்லறை பிரிவுகளில் திருப்பத்தை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

வங்கியினால் அண்மையில் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட ‘Investor Connect’ வீடியோ, கடந்த தசாப்த காலப்பகுதியில் அதன் சொத்துக்களின் உறுதியான வளர்ச்சியை வெளிப்படுத்தியிருந்தது. 2013 ஆம் ஆண்டில் ரூ. 23 பில்லியனிலிருந்து, 2024 இரண்டாம் காலாண்டில் மொத்த சொத்துக்களின் எண்ணிக்கை ரூ. 174 பில்லியனாக உயர்ந்துள்ளது. இதனூடாக வருடாந்த வளர்ச்சி வீதம் (CAGR) 22% ஆக அமைந்துள்ளது. தொழிற்துறையின் சராசரியை பெருமளவு விஞ்சி காணப்படுகின்றது. வங்கியின் வரிக்கு முந்திய இலாபத்தில் இந்த வளர்ச்சி பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன், 2013 இல் மறை ரூ. 438 மில்லியனிலிருந்து, 2023 இல் நேர் ரூ. 2.3 பில்லியனாக உயர்ந்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், வங்கி ரூ. 1.4 பில்லியன் வரிக்கு முந்திய இலாபத்தை பதிவு செய்திருந்தது, இது 68% வருடாந்த வளர்ச்சியாகும்.

வங்கி பல்வேறு சந்தர்ப்பங்களில் மூலதனத்தை திரட்டியுள்ளதுடன், சவால்கள் நிறைந்த காலப்பகுதியில் இதனை மேற்கொண்டுள்ளது. அண்மையில் 2023 நவம்பர் மாதத்தில் வங்கி உரிமை பங்கு வழங்கலை முன்னெடுத்திருந்தது. இதற்கு வங்கியின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து பெருமளவு ஆதரவு கிடைத்திருந்ததுடன், வங்கியின் மூலதனம் ரூ. 6 பில்லியனால் அதிகரித்து ரூ. 20 பில்லியனை எய்தியிருந்தது.

அமானா வங்கியின் தரப்படுத்தல் தொடர்பில் வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பராலி கருத்துத் தெரிவிக்கையில், “முதலீட்டு தர தரப்படுத்தலுக்கான இந்த தர உயர்வு, அமானா வங்கியில் நாம் கட்டியெழுப்பியுள்ள உறுதியான அடித்தளங்களுக்கு சிறந்த ஆதாரமாக அமைந்துள்ளது. இதனூடாக வளர்ச்சி மற்றும் விரிவாக்கம் ஆகியவற்றுக்கு வாய்ப்புகளை தோற்றுவித்துள்ளதுடன், சகல பங்குதாரர்களுக்கும் பயனளிக்கும் வகையில் அமைந்திருக்கும்.” என்றார்.

இந்த தரப்படுத்தல் உயர்வு தொடர்பில் அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “பிந்திய ஃபிட்ச் மீளாய்வில் முதலீட்டு தர தரப்படுத்தலை நாம் பெற்றுள்ளதையிட்டு பெருமை கொள்கின்றோம். வங்கியின் உறுதித் தன்மை, மீண்டெழுந்திறன் ஆகியவற்றுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளதுடன், பிரதான குறிகாட்டிகளில் மேம்படுத்தப்பட்ட வினைத்திறனை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. உறுதியான மூலதன இருப்பு, நிதிப் பெறுபேறு போன்றவற்றுடன், உறுதியான வளர்ச்சியைக் கொண்ட ஐந்தொகை போன்றவற்றுடன் நாம் துரித வளர்ச்சியையும் விரிவாக்கத்தையும் எய்த தயாராகியுள்ளோம். எமது நிதிசார் வெற்றியில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தும். எமது வாடிக்கையாளர்களுக்கும், எமது பங்காளர்களுக்கும், அர்ப்பணிப்பான ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

படத்தின் தலைப்பு :

அஸ்கி அக்பராலி (தவிசாளர்) மொஹமட் அஸ்மீர் (முகாமை. பணிப்பாளர் /CEO)

மொஹமட் அஸ்மீர் (முகாமை.

Featured

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo