மீண்டெழுந்திறன் மற்றும் உறுதித் தன்மை ஆகியவற்றை வெளிப்படுத்தி, கடந்த சில ஆண்டுகளாக சிறந்த நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்ததைத் தொடர்ந்து, ஊழியர் பங்கு தெரிவு திட்டத்தை (ESOP) அமானா வங்கி அறிவித்துள்ளது. வெற்றிகரமான செயற்பாட்டுக்கு பங்களிப்பு வழங்கியிருந்த வங்கியின் அர்ப்பணிப்பான மற்றும் ஈடுபாடுடைய ஊழியர்களை கௌரவித்து வெகுமதிகளை வழங்கும் வகையில் ESOP அமைந்திருக்கும்.
2022 நிதியாண்டில், வங்கி அதன் சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்தது. வரிக்கு முந்திய இலாபம் ரூ. 1.21 பில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இது 12% வளர்ச்சியாகும். தனது வினைத்திறன் போக்கை தொடர்ந்து பேணவும், அதன் வளர்ச்சிப் போக்கை தொடர்ந்து முன்னெடுப்பதை உறுதி செய்வதற்கும் வங்கி தன்னை அர்ப்பணித்துள்ளது.
அண்மையில் நடைபெற்ற வங்கியின் பங்குதாரர்களுக்கிடையிலான அதிவிசேட பொது கூட்டத்தின் போது கிடைத்திருந்த அனுமதியைதை் தொடர்ந்து, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் முறையான வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்ததையடுத்து, ESOP தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டது. வங்கியின் பங்கு உரிமையாண்மையில் பங்கேற்பதற்கு ஊழியர்களுக்கு தகைமையை வழங்குவதாக ESOP அமைந்திருக்கும் என்பதுடன், வங்கியின் வளர்ச்சி மற்றும் வெற்றிகரமான செயற்பாட்டினூடாக பயன்பெறுவதற்கு வாய்ப்பளிப்பதாகவும் அமைந்திருக்கும்.
ESOP க்கு முன்னதாக வழங்கப்பட்டிருந்த பங்குகளின் எண்ணிக்கையில் 3% க்கு நிகரான 83,518,485 சாதாரண வாக்குரிமை பங்குகள் ESOP இனூடாக வழங்கப்படும்.
அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் /பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கி தொடர்ச்சியாக சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, கடந்த சில வருடங்களில் சவால்கள் நிறைந்த சூழல்களை கடந்து, சகல பங்காளர்களினதும் நன்மதிப்பை பெற்றுள்ளது. எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளினூடாக இதனை எம்மால் எய்த முடிந்தது. ஊழியர் பங்கு தெரிவு திட்டத்தின் அறிமுகத்தினூடாக, வங்கியின் வெற்றிகரமான செயற்பாடுகளை எமது ஊழியர்களுடனும் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருக்கும். எமது ஊழியர்களின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, ஈடுபாடு மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றின் பெறுபேறாக வங்கியினால் வெற்றிகரமான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்ய முடிகின்றது. உரிமையாண்மை மற்றும் பொறுப்புக்கூரல் ஆகிய கலாசாரப் பண்புகளை ஊக்குவிப்பதற்கான வங்கியின் அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக இந்தத் திட்டம் அமைந்திருக்கும்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.