• Amãna Bank PLC Blog Detail - Main Visual

வெற்றிகரமான உரிமைப் பங்கு வழங்கலைத் தொடர்ந்து அமானா வங்கியின் மூலதனம் ரூ. 20 பில்லியனைக் கடந்தது

Amãna Bank November 22, 2023
  • சவால்கள் நிறைந்த சூழலிலும் ரூ. 6 பில்லியன் திரட்டல்
  • உறுதியான வெளிநாட்டு, கூட்டாண்மை மற்றும் HNW பங்குபற்றலை வெளிப்படுத்தியது

வங்கியியல் துறைக்கு வழங்கப்பட்டிருந்த ஒழுங்குபடுத்தல் வழிகாட்டுதல்களின் பிரகாரம் மேம்படுத்தப்பட்ட குறைந்த மூலதன தேவைப்பாட்டு இலக்குகளை வெற்றிகரமாக எய்தி ரூ. 6 பில்லியனை உரிமை பங்கு வழங்கலினூடாக திரட்டியுள்ளதாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனைக்கு அமானா வங்கி அறிவித்துள்ளது. இந்த உரிமைப் பங்கு வழங்கலின் போது வங்கியின் ஏற்கனவே காணப்படும் பங்குதாரர்கள் மற்றும் வெளிநாட்டு, கூட்டாண்மை மற்றும் HNW பங்கேற்புடனான புதிய முதலீட்டாளர்களும் ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த உரிமைப் பங்கு வழங்கலினூடாக சுமார் 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகள் கிடைத்திருந்ததுடன், பிரதான பங்குதாரரான AAA தரப்படுத்தலைக் கொண்ட IsDB குழுமத்தின் மொத்த முதலீட்டு பெறுமதியை 25 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிகமானதாக உயர்த்தியிருந்தது. இதனூடாக சவால்கள் நிறைந்த சூழலிலும், இலங்கையிலும் அமானா வங்கியிலும் கொண்டுள்ள தொடர்ச்சியான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்தது. நாட்டில் நிலவிய மிகவும் சவால்கள் நிறைந்த காலப்பகுதியிலும் வெளிநாட்டு முதலீடுகளைப் பெற்றிருந்தமைக்காக இலங்கை மத்திய வங்கியின் சர்வதேச வணிகச் சிறப்பு விருது வழங்கி அமானா வங்கி கௌரவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

2021 ஆம் ஆண்டு முதல் அமானா வங்கியின் பங்குகளை கையகப்படுத்தலை ஆரம்பித்திருந்த பன்முகப்படுத்தப்பட்ட ஈடுபாட்டைக் கொண்ட நன்மதிப்பைப் பெற்ற செந்தில்வேல் ஹோல்டிங்ஸ், உரிமைப் பங்கு வழங்கலிலும் உறுதியான பங்குபற்றலை வெளிப்படுத்தி, அமானா வங்கியின் 2ஆவது அதிகூடிய பங்குதாரர் எனும் தனது நிலையை மேலும் உறுதி செய்திருந்தது.

கடந்த சில வருடங்களில் பல்வேறு வெளியக சவால்களுக்கு மத்தியிலும் துரித மீட்சியை வெளிப்படுத்தியிருந்த அமானா வங்கி, தொடர்ச்சியாக உயர்வான பெறுபேறுகளை வெளிப்படுத்தியிருந்தது. இந்த நேர்த்தியான பெறுபேறுகளின் காரணமாக, அமானா வங்கி ஆறு தொடர்ச்சியான வருடாந்த பங்கிலாபங்களை வெளியிட்டு, பங்குதாரர்களுக்கு பெறுமதியை வழங்குவதற்கான அர்ப்பணிப்பை உறுதி செய்திருந்தது. 2022 ஆம் ஆண்டில் வங்கி தனது சிறந்த வருடாந்த வரிக்கு முந்திய இலாபத்தை பதிவு செய்திருந்தது. 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாத காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ஏற்கனவே அதிகரித்திருந்ததுடன், இந்த நிலை தொடரும் என வங்கி எதிர்பார்க்கின்றது.

அமானா வங்கியின் மக்களுக்கு நட்பான வங்கி மாதிரிக்கு தொடர்ச்சியாக கிடைத்திருந்த ஏற்றுக் கொள்ளலின் பிரகாரம், 2020 ஆம் ஆண்டில் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 100 பில்லியன் எனும் பெறுமதியை கடந்திருந்தது. இந்தப் பெறுமதியை வேகமாக எய்திய வங்கி எனும் பெருமையையும் அமானா வங்கி தன்வசம் கொண்டுள்ளது. தற்போது உரிமைப் பங்கு வழங்கலினூடாக திரட்டப்பட்ட தொகையுடன், ரூ. 150 பில்லியனுக்கு அதிகமானதாக அமைந்துள்ளது. மேலும், வட்டிசாராத மாற்று வங்கியியல் துறையில் தனது தலைமைத்துவத்தை மீள உறுதி செய்யும் வகையில், ஏசியன் பாங்கர் அமைப்பினால் உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது.

அதிகரித்துச் செல்லும் கீர்த்தி நாமம் மற்றும் உறுதியான வர்த்தக நாம ஏற்றுக் கொள்ளலுடன், அண்மையில் வெளியிடப்பட்டிருந்த LMD Brand Finance இன் இலங்கையின் சிறந்த 100 மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் வரிசையில் 81 ஆம் ஸ்தானத்திலிருந்து 67 ஆம் ஸ்தானத்துக்கு அமானா வங்கி முன்னேறியிருந்தது. தமது வர்த்தக நாம பெறுமதியில் நேர்த்தியான வளர்ச்சியை பதிவு செய்த சில வர்த்தக நாமங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.

அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பரலி கருத்துத் தெரிவிக்கையில், “சவால்கள் நிறைந்த பொருளாதார சூழலிலும் உரிமைப் பங்கு வழங்கலினூடாக ரூ. 6 பில்லியனை எமது பெறுமதி வாய்ந்த பங்குதாரர்களிடமிருந்து திரட்டிக் கொள்ள முடிந்ததையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். எமது நோக்கத்தில் அவர்களின் நம்பிக்கையினூடாக, ஆகக்குறைந்த மூலதன இருப்பு ஒழுங்குபடுத்தல் தேவைப்பாட்டை எம்மால் பூர்த்தி செய்ய முடிந்ததுடன், எமது மூலதன போதுமை நிலையை வலிமைப்படுத்த முடிந்துள்ளது. இந்த வெற்றிகரமான செயற்பாட்டுடன், அடுத்தகட்ட வளர்ச்சிக்கு அமானா வங்கி தன்னை தயார்ப்படுத்தியுள்ளதுடன், தனது பெறுமதி வாய்ந்த பங்குதாரர்களுக்கு வெகுமதிகளை வழங்கவும் தயார்ப்படுத்திய வண்ணமுள்ளது.” என்றார்.

அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “சவால்கள் நிறைந்த சந்தைச் சூழலில் வெற்றிகரமாக உரிமைப் பங்கு வழங்கலை பூர்த்தி செய்ய முடிந்தமையானது, எமது ஏற்கனவே காணப்படும் பங்குதாரர்களின் தளராத நம்பிக்கை மற்றும் ஆதரவை மேலும் உறுதி செய்துள்ளதுடன், புதிய முதலீட்டாளர்கள் எமது பிரத்தியேகமான மாதிரி மற்றும் பெறுபேறுகளில் கொண்டுள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த மூலதன உள்ளீட்டினூடாக, எதிர்கால வளர்ச்சிக்கு எமக்கு உறுதியான வழி ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், எமது பிரதான வியாபாரச் செயற்பாடுகளை விரிவாக்கம் செய்து, பங்குதாரர்களின் முதலீடுகளுக்கு கவர்ச்சிகரமான பெறுமதிகளை ஏற்படுத்திக் கொடுக்க எதிர்பார்க்கின்றோம். உரிமைப் பங்கு வழங்கல் இலக்குகளை வெற்றிகரமாக நிவர்த்தி செய்வதில், எமது ஒழுங்குபடுத்துநர்கள் வழங்கியிருந்த ஆதரவுக்கும், வழிகாட்டல்களுக்கும் இந்தத் தருணத்தில் நான் நன்றி தெரிவிக்கின்றேன்.” என்றார்.

அமானா வங்கி பற்றி

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2023 ஒக்டோபர் மாதம் வெளியிடப்பட்ட தேசிய நீண்ட கால தரப்படுத்தலில் BB+(lka) எனும் உறுதியான தோற்றத்தை வழங்கியிருந்தது.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது. சுயாதீன நம்பிக்கை நிதியாக அமைந்துள்ள இந்த காப்பகம், 18 வயது நிரம்பும் வரை அநாதரவு சிறுவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்கின்றது. சிறுவர் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மாநாட்டின் 2ஆம் ஆக்கத்தின் பிரகாரம், பாகுபாட்டை இல்லாமல் செய்யும் வகையில், OrphanCare இன் செயற்பாடுகள், சமூக சேவைகளில் உறுதியான ஈடுபாட்டைக் கொண்ட காப்பாளர் அணியினரால் நிர்வகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Featured

விண்ணப்பியுங்கள்
Financing Calculator
Chat on WhatsApp
govpay
logo