A- A A+
தேடுதல்
  • Amãna Bank PLC Blog Detail - Main Visual

அமானா வங்கி சாதனை மிகுந்த அரையாண்டு நிதி வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

அமானா வங்கி August 22, 2024
  • வரிக்கு முந்திய இலாபத்தில் 68% வளர்ச்சி மற்றும் வரிக்கு பிந்திய இலாபத்தில் 82% வளர்ச்சியையும் பதிவு
  • முற்பணங்கள் மற்றும் வைப்புகள் ஆகியன 10% இனால் உயர்வு

அமானா வங்கி, 2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு நிதிப் பெறுபேறுகளில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2023 ஆம்ஆண்டின் முதல் அரையாண்டில் பதிவாகியிருந்த நிதிப் பெறுபேறுகளுடன் ஒப்பிடுகையில் பிரதான பிரிவுகளான இலாபம், முற்பணங்கள், வைப்புகள் மற்றும் மொத்த சொத்துகள் ஆகிய பிரதான பிரிவுகளில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பதிவு செய்யப்பட்டிருந்தது. தொழிற்துறையின் சராசரி பெறுமதிகளை விட சிறந்த CASA மற்றும் நிலை 3 மதிப்பிறக்க விகிதங்களையும் பேணியிருந்தது.

2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில், வங்கி வரிக்கு முந்திய இலாபமாக (PBT) ரூ. 1.35 பில்லியனை பதிவு செய்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 68% வளர்ச்சியாகும். வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 763.4 மில்லியனாக பதிவாகியிருந்தது. கடந்த ஆண்டில் பதிவாகியிருந்த ரூ. 419.6 மில்லியனுடன் ஒப்பிடுகையில் இது 82% வளர்ச்சியாகும். இரண்டாம் காலாண்டில் மாத்திரம், வங்கியின் வரிக்கு முந்திய இலாபம் மற்றும் வரிக்கு பிந்திய இலாபம் ஆகியன 63% மற்றும் 72% வளர்ச்சியை பதிவு செய்து, முறையே ரூ. 616.9 மில்லியன் மற்றும் ரூ. 341.1 மில்லியனை எய்தியிருந்தன.

ஆரோக்கியமான நிதி வசதியளிப்பு எல்லைப் பெறுமதியான 4.3% ஐ பேணியிருந்ததுடன், தேறிய நிதி வசதியளிப்பு வருமானம் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5% இனால் அதிகரித்திருந்தது. 2023 ஜுன் 30 ஆம் திகதியன்று ரூ. 3.6 பில்லியனை எய்தியிருந்தது. இரண்டாம் காலாண்டில் மாத்திரம் இந்தப் பெறுமதி 9% எனும் குறிப்பிடத்தக்களவு உயர்வை எய்தியிருந்தது. முதல் அரையாண்டு காலப்பகுதியில், வங்கியின் தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம் 9% இனால் அதிகரித்து ரூ. 519.0 மில்லியனாகவும், மொத்த தொழிற்பாட்டு வருமானம் 1% இனால் வீழ்ச்சியடைந்து ரூ. 4.4 பில்லியனாகவும் பதிவாகியிருந்தன. அந்நியச் செலாவணி ப்ரீமியம்களில் தொடர்ச்சியான வீழ்ச்சி காரணமாக தேறிய வியாபார வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி இதில் தாக்கம் செலுத்தியிருந்தது. முன்னேற்றகரமான வியாபார சூழ்நிலைகள் மற்றும் தொழிற்படா முற்பணங்களை சிறந்த வகையில் நிர்வகித்திருந்தமை போன்றன காரணமாக, குறைந்த மதிப்பிறக்க கட்டணங்களை பதிவு செய்திருந்ததன் பின்னர், வங்கியின் தேறிய தொழிற்படு வருமானம் 34% இனால் உயர்ந்து ரூ. 4.1 பில்லியனாக பதிவாகியிருந்தது. 2023 ஆம் ஆண்டின் முதல் அரையைாண்டு காலப்பகுதியில் ரூ. 3.0 பில்லியனாக பதிவாகியிருந்தது.

தொழிற்படு செலவுகளில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி காணப்பட்ட போதிலும், வங்கி தொடர்ந்தும் ஆரோக்கியமான அரையாண்டு வருமானத்துக்கான செலவு விகிதமான 51% ஐ பேணியிருந்தது. நிதிச் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரிக்கு முன்னதான தொழிற்படு இலாபம் 48% வருடாந்த வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 1.8 பில்லியனை எய்தியது. வங்கியின் திரண்ட வரி பங்களிப்பு சுமார் 1.1 பில்லியனாக காணப்பட்டதுடன், வங்கியின் வரிக்கு முந்திய தொழிற்படு இலாபத்தில் 58% பங்களிப்பை செலுத்தியிருந்தது. காலப்பகுதிக்கான மொத்த திரண்ட வருமானம் ரூ. 755.3 மில்லியனாகும். முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 95% வளர்ச்சியை எய்தியிருந்தது.

சந்தையில் நிதிவசதியளிப்புக்கான தொடர்ச்சியான போட்டி மற்றும் வைப்பு வீதங்களின் வீழ்ச்சி போன்றன காணப்பட்ட போதிலும், வங்கியின் மக்களுக்கு நட்பான வங்கியியல் மாதிரிக்கு அதிகளவு வரவேற்பு காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இதனூடாக வாடிக்கையாளர் வைப்புகளில் 10% எனும் வளர்ச்சியை பதிவு செய்யப்பட்டதுடன், 2024 முதல் அரையாண்டை ரூ. 146.3 பில்லியன் இருப்புகளுடன் நிறைவு செய்ய முடிந்தது. CASA விகிதம் 40% எனும் உயர்ந்த நிலையில் காணப்பட்டது. மேலும், அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட வங்கியின் வழிமுறையினூடாக, வாடிக்கையாளர் முற்பணங்களும் 10% இனால் உயர்ந்து ரூ. 98.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. தொழிற்துறையின் குறைந்த நிலை 3 மதிப்பிறக்க நிதியளிப்பு விகிதமான 1.7% ஐ பேணியிருந்தது. வங்கி முதல் அரையாண்டு காலப்பகுதியை ரூ. 173.6 பில்லியன் பெறுமதியான சொத்துகளுடன் நிறைவடையச் செய்திருந்தது.

2024 ஜுன் 30 ஆம் திகதியன்று, அமானா வங்கியின் பங்கொன்றின் தேறிய சொத்து பெறுமதி ரூ. 4.08 ஆக காணப்பட்டது. 2024 ஜுலை மாதத்தில் முன்னெடுக்கப்பட்ட 10க்கு 1 எனும் ஒருமுகப்படுத்தலைத் தொடர்ந்து, இந்தப் பெறுமதி பங்கொன்றுக்கு ரூ. 40 எனும் நிலையை வெளிப்படுத்தியுள்ளது. ஆறு மாத காலப்பகுதியில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ள நிலையில், வங்கியின் ROE மற்றும் ROA ஆகியன முறையே 7.0%மற்றும் 1.6% வளர்ச்சியை பதிவு செய்திருந்தன. 2023 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதிகள் முறையே 5.8%மற்றும் 1.1% வளர்ச்சியை பதிவு செய்திருந்தன. 2024 ஜுன் 30 ஆம் திகதியன்று, அமானா வங்கியின் பொது பங்கு நிலை 1 மற்றும் மொத்த மூலதன விகிதங்கள் போன்றன முறையே 15.4% மற்றும் 18.1% ஆக பதிவாகியிருந்தன. ஆகக்குறைந்த ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடான 7% மற்றும் 12.5% என்பதை விட உயர்ந்த நிலையில் காணப்பட்டன.

வங்கியின் அரையாண்டு நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் தவிசாளர் அஸ்கி அக்பராலி கருத்துத் தெரிவிக்கையில், "2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் அமானா வங்கியின் துரிதமான வளர்ச்சி என்பது, சவால்கள் நிறைந்த சூழலிலும் எமது உறுதியான வினைத்திறனை வெளிப்படுத்தியுள்ளது. கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பொதுப் பட்டியலிடப்பட்டு ஒரு தசாப்த காலத்தை எய்தியுள்ள நிலையில், கடந்த ஆண்டின் பிற்பகுதியில் மேற்கொண்ட மூலதனமிடலுடன், இந்த ஆண்டின் பங்குகள் ஒருமுகப்படுத்தல் போன்றவற்றினூடாக, எமது பங்குதாரர்களுக்கு பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான வங்கியின் உறுதியான அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. எமது சகல பெறுமதி வாய்ந்த பங்காளர்களுக்கும், இந்தப் பயணத்தில் ஆதரவளிக்கின்றமைக்காக நாம் நன்றியை தெரிவிப்பதுடன், மேலும் வளர்ச்சியை எய்துவதற்கு எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

வங்கியின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “2024 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் பதிவு செய்திருந்த எமது நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் நாம் மிகவும் திருப்தியடைகின்றோம். உறுதியான நிதிப் பெறுபேறுகளினூடாக எமது அணியினரின் உறுதியான பணி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியன பிரதிபலிக்கப்பட்டுள்ளன. எமது மூலோபாய இலக்குகள் தொடர்பில் நாம் தொடர்ந்தும் எம்மை அர்ப்பணித்துள்ளதுடன், வளர்ச்சியை தொடர்ந்தும் எய்துவது மற்றும் எமது பங்காளர்களுக்கு பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பிலும் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம். சிறந்த அரையாண்டு நிதிப் பெறுபேறுகள் என்பது வங்கியின் உறுதித் தன்மை மற்றும் மீண்டெழுந்தன்மைக்கான எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. உங்களின் வங்கியின் வளர்ச்சியில் ஒப்பற்ற ஆதரவு மற்றும் நம்பிக்கையை வைத்துள்ளமைக்காக தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை, நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன். வருடத்தின் எஞ்சியிருக்கும் காலப்பகுதியிலும் நாம் உறுதியான பயணத்தை எதிர்பார்ப்பதுடன், அதில் அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட மக்களுக்கு நட்பான வங்கியியல் வழிமுறையினூடாக உறுதியான வளர்ச்சி அம்சங்கள் பங்களிப்பு செலுத்தும்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

படத்தின் தலைப்பு:

Asgi Akbarally – Chairman

Mohamed Azmeer – Managing Director/CEO

Featured

Hajj 2025

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp