• Amãna Bank PLC Blog Detail - Main Visual

சிறந்த 100 பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் வரிசையில் அமானா வங்கி 14 ஸ்தானங்கள் முன்னேறியது

அமானா வங்கி July 31, 2023

LMD பிரான்ட் ஃபினான்ஸ் இலங்கையின் சிறந்த 100 பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் தரப்படுத்தல் வரிசையில் அமானா வங்கி 14 ஸ்தானங்கள் முன்னேறியிருந்தது. ஒரு வருட காலப்பகுதியினுள் 81 ஆம் இடத்திலிருந்து 67ஆம் இடத்துக்கு முன்னேறியிருந்ததனூடாக, அமானா வங்கியின் அதிகரித்துச் செல்லும் கீர்த்தி நாமம் மற்றும் உறுதியான வர்த்தக நாம ஏற்றுக் கொள்ளல் போன்றன மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

சவால்கள் நிறைந்த ஆண்டில், மாற்றமடைந்த சந்தை நிலைகளுக்கமைய தமது செயற்பாடுகளையும் மாற்றியமைத்து மீண்டெழுந்திறனை வெற்றிகரமாக வெளிப்படுத்தியிருந்த அமானா வங்கி, நேர்த்தியான வர்த்தக நாம பெறுமதி வளர்ச்சியை பதிவு செய்திருந்த சில வர்த்தக நாமங்களில் ஒன்றாக திகழ்ந்து. சிறந்த வினைத்திறனை வெளிப்படுத்தியிருந்ததிலும் கவனம் செலுத்தியிருந்தது. வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகள் மற்றும் மாற்றமடைந்து வரும் சந்தை நிலைகளை பின்பற்றும் திறன் போன்றன அமானா வங்கியின் வர்த்தக நாம பெறுமதியை அதிகரிக்கச் செய்வதிலும், சந்தை நிலையிலும் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தன.

LMD பிரான்ட் ஃபினான்ஸ் “மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் தரப்படுத்தல்” என்பது சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற வர்த்தக நாம மதிப்பிடல் ஆலோசனை அமைப்பான பிரான்ட் ஃபினான்ஸ் உடன் இணைந்து முன்னெடுக்கப்பட்டது. இந்த தரப்படுத்தல் செயன்முறையில் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் நிதித் தரவுகளை பகுப்பாய்வு செய்தல் மற்றும் தனியார் நிறுவனங்களிடமிருந்து தரவுகளை பெற்றுக் கொள்ளல் போன்றன அடங்கியுள்ளன. Bloomberg தரவுகளின் அடிப்படையில் சந்தை நிலைகள் கணிப்பீடு செய்யப்படுவதுடன், 2500 பதிலளிப்போரின் கருத்துக் கணிப்புகளினூடாக நுகர்வோர் உணர்நிலைகள் அளவீடு செய்யப்படுகின்றன. மேலும், வங்கியியல் மற்றும் தொலைத்தொடர்பாடல் தொழிற்துறைகளில் வியாபாரத்துக்கு வியாபாரம் (B2B) அடிப்படையிலான மேலதிக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு, கூட்டாண்மை தீர்மானமெடுப்போரின் வியாபார உணர்வுகள் புரிந்து கொள்ளப்பட்டுகின்றன.

இந்த தரப்படுத்தல் தொடர்பில், அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவர் சித்தீக் அக்பர் கருத்துத் தெரிவிக்கையில், “LMD பிரான்ட் ஃபினான்ஸ் மிகவும் பெறுமதி வாய்ந்த வர்த்தக நாமங்கள் தரப்படுத்தலில் அமானா வங்கியின் முன்னேற்றத்தை காண்பதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். எமது முழு அணியினரின் அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றின் பிரதிபலிப்பாக இது அமைந்துள்ளது, இவர்கள் உறுதியான வர்த்தக நாமத்தை கட்டியெழுப்புவதில் தொடர்ச்சியாக தமது உயர்ந்த பங்களிப்பை வழங்கியுள்ளனர்” என்றார்.

அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “எம்மில் வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்காக நாம் மகிழ்ச்சியடைவதுடன், அவர்களுக்கு புத்தாக்கமான மற்றும் நட்பான நிதித் தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதனூடாக, அவர்களின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்குவதிலும், வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்கு ஆதரவளிப்பதிலும் அர்ப்பணிப்பான சேவைகளை வழங்க எம்மை தொடர்ந்தும் ஈடுபடுத்தியுள்ளோம். எமது வர்த்தக நாம மூலோபாயத்தின் பிரதான அங்கமாக இது அமைந்துள்ளது.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.

Featured

விண்ணப்பியுங்கள்
Financing Calculator
Chat on WhatsApp
govpay
logo