A- A A+
தேடுதல்
  • Amãna Bank PLC Blog Detail - Main Visual

தொடர்மனை நிதிவசதியளிப்பை பெற்றுக் கொடுப்பதற்கான மரீனா ஸ்குயார் அப்டவுன் கொழும்பு உடன் அமானா வங்கி கைகோர்ப்பு

அமானா வங்கி November 26, 2024

மக்களுக்கு நட்பான தொடர்மனை நிதிவசதியளிப்பு தீர்வை பெற்றுக் கொடுக்க ஹார்பர் விலேஜ் (பிரைவட்) லிமிடெட் உடன் அமானா வங்கி பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன் பிரகாரம், மரீனா ஸ்குயார் – அப்டவுன் கொழும்பு தொடர்மனைத் திட்டத்தில் முதலீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்படும். இலங்கையில் சொகுசு தொடர்மனை வாழிட அனுபவத்தை மேம்படுத்துவதற்கான அனுமதிப்பதற்கான அமானா வங்கியின் அர்ப்பணிப்பு இந்த மூலோபாய பங்காண்மையினூடாக உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், உள்நாட்டு ரியல் எஸ்டேட் சந்தையின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதையும் உறுதி செய்துள்ளது.

கொழும்பு துறைமுகம் மற்றும் போர்ட் சிற்றி ஆகியவற்றை அண்மித்து அமைந்துள்ள த மரீனா ஸ்குயார், உயர் வருமதிகளுடன் பெருமளவான முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகின்றது. இலங்கையில் காணப்படும் மாபெரும் துறைமுகத்தை முகப்பாக கொண்ட கலப்பு அபிவிருத்தித் திட்டமாக இந்த தொடர்மனைத் திட்டம் அமைந்திருக்கும். இதனை அக்சஸ் என்ஜினியரிங் பிஎல்சி மற்றும் சைனா ஹார்பர் என்ஜினியரிங் கம்பனி ஆகியன நிர்மாணிக்கின்றன.

கொள்வனவு விலையில் 70% வரையான நிதி வசதியுடன், 15 வருடங்கள் வரை மீளச் செலுத்தும் காலம் மற்றும் வருமானத்துக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளத்தக்க மீளச் செலுத்தும் திட்டங்கள் போன்ற பல்வேறு அனுகூலங்களை வழங்கும் அமானா வங்கியின் நிதியளிப்பு தீர்வினூடாக, மூன்று தினங்களுக்குள் துரித கடன் அனுமதி வழங்கப்படுவதுடன், நிர்மாணிக்கும் காலப்பகுதியில் மேலதிக கட்டணங்கள் எதுவுமின்றி முற்பணத்தை மீளச் செலுத்தும் வசதியும் காணப்படுகின்றது.

5 ஏக்கர் பரப்பில் காணப்படும் மரீனா ஸ்குயார் – அப்டவுன் கொழும்பில் நடைபாதை பகுதிகள் மற்றும் ஜொகிங் திடல்கள், 2 ஏக்கர் பகுதியில் திறந்த வெளி பகுதிகள் மற்றும் வரையறையில்லாத நீச்சல் தடாகம், க்ளப் ஹவுஸ், விளையாட்டு அறை, சிறுவர் விளையாட்டு பகுதி, சகல வசதிகளையும் கொண்ட ஜிம்னாசியம் மற்றும் வணிக பகுதிகள் போன்ற பெருமளவு வசதிகள் காணப்படுகின்றன. கொழும்பின் பிரதான வியாபார மாவட்டத்தை அண்மித்த அமைவிடம், முன்னணி ஷொப்பிங் மோல்கள் மற்றும் போக்குவரத்து வலையமைப்புகள் போன்றன காரணமாக சிறந்த வதிவிட முதலீட்டு தெரிவாக அமைந்துள்ளது.

இந்த பங்காண்மை தொடர்பில் அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “கொழும்பு மரீனா ஸ்குயார் அப்டவுன் உடன் அமானா வங்கி கைகோர்ப்பதையிட்டு பெருமை கொள்வதுடன், அதனூடாக, இலங்கையின் வளர்ந்து வரும் ரியல் எஸ்டேட் சந்தையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க முடிந்துள்ளது. இந்த பங்காண்மையினூடாக, எமக்கு பிரத்தியேகமான தீர்வுகளை பெற்றுக் கொடுத்து, நவீன தொடர்மனையின் உரிமையாளராவதற்கான வசதியையும் பெற்றுக் கொடுக்க முடியும்.” என்றார்.

அமானா வங்கியின் தொடர்மனை நிதியளிப்பு தீர்வு தொடர்பான மேலதிக தகவல்களுக்கு www.amanabank.lk எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும் அல்லது 011 7 756 756 எனும் தொடர்பு நிலையத்துடன் தொடர்பு கொள்ளவும்.

இந்த பங்காண்மை தொடர்பில் மரீனா ஸ்குயார் சார்பில், ஹார்பர் விலேஜ் (பிரைவட்) லிமிடெட்டின் பணிப்பாளர் கோசல விக்ரமசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “வீட்டு உரிமையாளர்களுக்கு சொகுசான வாழ்க்கை முறையை பெற்றுக் கொடுக்கும் வகையில் மரீனா ஸ்குயார் எப்போதும் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், ஒவ்வொரு நவீன வீட்டு உரிமையாளரின் தேவைகளுக்கு பொருந்தும் வகையில் விசேடமாக வடிவமைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பரந்தளவு வசதிகள் போன்றன அடங்கியிருக்கும். அமானா வங்கியுடனான இந்த பங்காண்மையினூடாக, வீட்டு உரிமையாளர்களுக்கு நகர வாழ்க்கை முறை கனவை நனவாக்குவதற்கு எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

படத்தின் தலைப்பு - புரிந்துணர்வு உடன்படிக்கையில் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடும் நிகழ்வில் அமானா வங்கியின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் மற்றும் ஹார்பர் விலேஜ் (பிரைவட்) லிமிடெட் பணிப்பாளர் கோசல விக்ரமசிங்க ஆகியோர் கைச்சாத்திடுவதை காணலாம்.

Featured

Hajj 2025

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp