இலங்கையின் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு தமது தொழில் நடவடிக்கைகளைக்கு முன்னெடுக்க கைகொடுத்து உதவும் வகையில் அமானா வங்கி பெண்களுக்கான நடைமுறைக் கணக்கொன்றை அறிமுகம் செய்துள்ளது. முதல் இலவச காசோலை புத்தகம், இலவச டெபிட் அட்டை போன்ற பல அனுகூலங்களைக் கொண்டுள்ள இந்தக் கணக்கினூடாக, பெண்களுக்கு பிரத்தியேகமான வங்கி நிலையங்கள், 900க்கும் அதிகமான பண வைப்பு இயந்திர வலையமைப்பு, இணைய வங்கிச் சேவை, SMS விழிப்பூட்டல்கள்;, E-கூற்றுகள் மற்றும் பல விசேட அம்சங்களை அணுகும் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. அமானா வங்கியின் பெண்களுக்கான நடைமுறைக் கணக்கினூடாக, பெண்களுக்கு தடையற்ற கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்பதுடன், தமது வியாபாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடியதாகவும் அமையும்.
பெண்களுக்கான நடைமுறைக் கணக்கின் அறிமுகம் தொடர்பில் வங்கியின் வைப்புகளுக்கான தலைமை அதிகாரி அர்ஷத் ஜமால்தீன் கருத்துத் தெரிவிக்கையில், “அண்மைக் காலத்தில் தமது வீடுகளிலிருந்தவாறு சிறியளவில் தமது சொந்த வியாபாரத்தை ஆரம்பித்த பெருமளவான பெண் தொழில்முயற்சியாளர்களை; அவதானிக்க முடிகின்றது. எமது பெண்களுக்கான நடைமுறைக் கணக்கில் காணப்படும் அனுகூலங்களினூடாக, அவர்களின் சிறிய வியாபாரத்தை பெரியளவில் கொண்டு செல்ல முடியும் என நாம் கருதுகின்றோம்” என்றார்.
வங்கியின் பெண்களுக்கான நடைமுறை கணக்கை பெற்றுக் கொள்ள விரும்பும் வாடிக்கையாளர்கள், நாடு முழுவதிலும் காணப்படும் 32 கிளைகளை நாடுவதன் மூலம் அல்லது வங்கி உத்தியோகத்தர் ஒருவரை வரவளைப்பதன் மூலம் பெண்கள் நடைமுறை கணக்கை ஆரம்பிக்கலாம்;. வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தின் இலக்கமான 011 7 756 756 உடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
உலகலாவிய ரீதியில் வளர்ந்துவரும் வட்டி சாராத இஸ்லாமிய வங்கி முறையுடன் முற்றிலும் இணங்கி செயற்படும் இலங்கையின் முதலாவது அங்கீகாரம் பெற்ற வர்த்தக வங்கியாக அமானா வங்கி திகழ்கின்றது. வளர்ச்சிக்கு துணைபுரிந்து, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் தொலைநோக்குடன் அமானா வங்கி வளர்ந்து வரும் கிளை வலையமைப்புடனும், 4500 இற்கும் மேற்பட்ட யுவுஆ இயந்திரங்கள் மூலமாகவும், 850+ Pay&Go இயந்திரங்களினூடாகவும் தமது வாடிக்கையாளர்களுடன் நெருங்கியுள்ளது. இணையத்தள மற்றும் கையடக்கத் தொலைபேசி வங்கிச் சேவை, வாரத்தில் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்தியேக வங்கிப் பிரிவுகள் போன்ற பல சௌகரியமான சேவைகளையும் வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும்.
இலங்கை மத்திய வங்கியினால் அனுமதி அளிக்கப்பட்ட அமானா வங்கி பி.எல்.சி.; கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட ஒரு தனி நிறுவனமாகும். ஜித்தாவில் தலைமையகத்தைக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (ISDB) குழுமம் பிரதான பங்குதாரர் என்ற முறையில் அமானா வங்கியில் 29.97% பங்குளைக் உரிமம் கொண்டுள்ளது. ISDB குழுமம் என்பது ‘AAA’ தரப்படுத்தலைப் பெற்ற பல்துறை அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கிக்கு எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் கிடையாது. அதன் பிரத்தியேகமான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான அனாதை பராமரிப்பு நம்பிக்கை நிதியை ‘OrphanCare’ Trust ஐ மாத்திரமே பேணி வருகின்றது.