தமது சிறுவர் சேமிப்புக் கணக்குக்கு பெறுமதி சேர்ப்பை மேம்படுத்தும் வகையில், Bata ஸ்ரீ லங்கா உடன் அமானா வங்கி கைகோர்த்துள்ளது. இதனூடாக அமானா வங்கியில் சிறுவர் சேமிப்புக் கணக்கைக் கொண்டிருப்போருக்கு ‘B.first’வர்த்தக நாமம் பொறிக்கப்பட்ட பாதணிகளை கொள்வனவு செய்யும் போது 15% விலைக்கழிவைப் பெற்றுக் கொள்ள முன்வந்துள்ளது. தொற்றுப் பரவல் காரணமாக கடந்த ஐந்து மாத காலமாக பாடசாலைகள் மூடப்பட்டு, தற்போது மீளத் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த விசேட விலைக்கழிவை பெற்றுக் கொடுக்க அமானா வங்கியும், Bata நிறுவனமும் முன்வந்துள்ளன.
இந்த விசேட சலுகை தொடர்பாக வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவர் சித்தீக் அக்பர் கருத்துத் தெரிவிக்கையில், “Bata உடனான எமது பங்காண்மை பொருத்தமான காலப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நீண்ட இடைவேளையின் பின்னர் பாடசாலைகள் மீளத் திறக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கைகோர்ப்பை ஏற்படுத்தியுள்ளோம். எமது சிறுவர் சேமிப்பு கணக்குதாரர்களுக்கு மிகவும் பெறுமதி சேர்க்கும் அங்கமாக இந்த விலைக்கழிவு அமைந்திருக்கும் என நான் கருதுவதுடன், இதற்காக எம்முடன் கைகோர்த்தமைக்கு Bata ஸ்ரீ லங்கா நிறுவனத்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.
இந்தப் பங்காண்மை தொடர்பாக Bata ஸ்ரீ லங்காவின் முகாமைத்துவ பணிப்பாளரும் இலங்கைக்கான முகாமையாளருமான க்ளைவ் ரொட்ரிகோ கருத்துத் தெரிவிக்கையில், “அமானா வங்கியின் சிறுவர் சேமிப்புக் கணக்குதாரர்களுக்கு விசேட விலைக்கழிவுகளை பெற்றுக் கொடுப்பதற்காக அமானா வங்கியுடன் கைகோர்த்துள்ளமை என்பது எமக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. 1950 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வாடிக்கையாளர்களுக்கு Bata ஸ்ரீ லங்கா சேவைகளை வழங்குவதுடன், எப்போதும் உயர் தரம் வாய்ந்த பாதணிகளை வழங்கும் பொறுப்பை நாம் கொண்டிருப்போம்.” என்றார்.
அமானா வங்கியின் சிறுவர் சேமிப்புக் கணக்கு என்பது அதன் பெறுமதி சேர்க்கப்பட்ட உள்ளம்சங்களுக்காக புகழ்பெற்றுள்ளது. தமது பிள்ளைகள் மத்தியில் சிறுபராயம் முதல் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதற்கு பெருமளவான அனுகூலங்களை வழங்குகின்றது. 2 வயதுக்கு குறைந்த பிள்ளைகளுக்கு புதிததாக ஆரம்பிக்கப்படும் கணக்குகளுக்கு ரூ. 1000 ஐ ஏற்கனவே வைப்புச் செய்யப்பட்ட மீதியாக வழங்குகின்றது. அத்துடன், மாதாந்தம் நிலையான ஆணை ஊடாக சிறுவர் சேமிப்புக் கணக்கில் வைப்புச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு போனஸ் கொடுப்பனவாக ரூ. 10,000 வரையான தொகையை வருட நிறைவில் வழங்குகின்றது.
தோற்றம், சௌகரியம் மற்றும் நீடித்த உழைப்பு போன்றவற்றுக்காக புகழ்பெற்ற ‘B.first’ பாடசாலை பாதணிகள், சிறுவர்கள் மத்தியில் புகழ்பெற்ற தெரிவாக அமைந்துள்ளது. கறுப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் இவை கிடைக்கின்றன. இவற்றை lace அல்லது Velcro strap தெரிவில் கொள்வனவு செய்ய முடியும்.
உலகளாவிய ரீதியில் வேகமாக வளர்ந்து வரும் வட்டிசாராத மக்களுக்கு நட்பான வங்கியியல் மாதிரியை பின்பற்றி முழுமையாக செயலாற்றும் இலங்கையின் முதலாவதும் ஒரே அங்கீகாரம் பெற்ற வணிக வங்கியாக அமானா வங்கி திகழ்கின்றது. வளர்ச்சியை செயற்படுத்துவது மற்றும் வாழ்க்கைக்கு வளமூட்டுவது எனும் நோக்கத்துடன், வங்கி தனது பரந்த கிளை வலையமைப்பு மற்றும் சுய வங்கிச் சேவை நிலையங்கள் போன்றவற்றினூடாகவும், பண மீளப் பெறுகைகளை இலகுவாக மேற்கொள்வதற்காக 4500க்கும் அதிகமான ATMகளையும் கொண்டிருப்பதுடன், உடனடி பண வைப்புகளுக்காக 850க்கும் அதிகமான Pay&Go களையும் கொண்டு, வாடிக்கையாளர்களை சென்றடைகின்றது. இணைய மற்றும் மொபைல் வங்கியியல் சேவைகள், 24x7 பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்தியேகமான வங்கி அலகுகள் போன்றவற்றினூடாக வாடிக்கையாளர் மேலும் பல அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜெத்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களை, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களைக் கொண்டிருக்கவில்லை.