கொவிட்-19 தொற்றுப் பரவல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, அரசாங்கத்தின் மீள ஆரம்பிப்பு நடவடிக்கைகளின் போது உதவிகளை வழங்கும் வகையில், அமானா வங்கியின் தங்கச் சான்றிதழ் நிதியளிப்புத் திட்டத்தினூடாக அவசரப் பணத்தேவைகளுக்கு தற்போது உயர்ந்தளவு முற்பணம் வழங்கப்படுகின்றது. 22 கெரட் தங்கத்துக்கு வாடிக்கையாளர்கள் ரூ. 70000 வரை பெற்றுக் கொள்ள முடியும். பாரம்பரிய அடகு பிடிக்கும் முறைக்கு மாறாக வட்டியில்லாத திட்டமாக அமானா வங்கியினால் அறிமுகம் செய்யப்பட்ட விருதை வென்ற தங்கச் சான்றிதழ் நிதி வசதித் தீர்வு என்பது, சந்தையில் காணப்படும் வங்கிச் சேவைகளை நாடாத, வங்கிச் சேவைகள் சென்றடையாத பிரிவுகளை சென்றடைவது எனும் வங்கியின் கொள்கை நோக்கத்துக்கமைவாக காணப்படுகின்றது. நாட்டின் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் அமைந்திருப்பதுடன், விவசாயம் மற்றும் இதர சிறுதொழிற்துறைகளுக்கு நிதித் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள, சௌகரியமான கடன் வசதிகளைப் பெற்றுக் கொடுப்பதாகவும் அமைந்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தமது தங்க பாதுகாப்பு வைப்பு சான்றிதழை பிணையாக வைத்து, 12 மாதங்கள் வரை மீளச் செலுத்தக்கூடிய மேலதிக செலவுகள் எதுவுமற்ற கடனைப் பெற்றுக் கொள்ளலாம். முதிர்வின் போது, வாடிக்கையாளர் தாம் கடனாகப் பெற்ற தொகையை மாத்திரம் எவ்விதமான மேலதிக கொடுப்பனவுகளுமின்றி செலுத்த வேண்டியிருக்கும். இந்த நிதித் தீர்வு பற்றிய மேலதிக தகவல்களைப் பெற, வாடிக்கையாளர்கள் bit.ly/AB_EmergenceyCash_T எனும் காணொளியேய் பார்க்கலாம்.
இந்தத் தீர்வு தொடர்பான அமானா வங்கியின் நுகர்வோர் - நிதி யுதவி பிரிவின் தலைமை அதிகாரி ராமகிருஷ்ணன் கிருபாகரன் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த நெருக்கடியான சூழலில், பலர் கஷ்டங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். மக்களுக்கு நட்பான வங்கி எனும் வகையில், அவர்களின் நிலைமையை புரிந்து கொண்டு, எமது தங்கச் சான்றிதழ் நிதியளிப்பு அவசர பணத் தொகையினூடாக வழங்கப்படும் முற்பணத் தொகையை நாம் அதிகரித்துள்ளோம். அதனூடாக அவர்களின் அவசர நிதித் தேவைகளை சுலபமாக பூர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
உலகளாவிய ரீதியில் வேகமாக வளர்ந்து வரும் வட்டிசாராத மக்களுக்கு நட்பான வங்கியியல் மாதிரியை பின்பற்றி முழுமையாக செயலாற்றும் இலங்கையின் முதலாவதும் ஒரே அங்கீகாரம் பெற்ற வணிக வங்கியாக அமானா வங்கி திகழ்கின்றது. வளர்ச்சியை செயற்படுத்துவது மற்றும் வாழ்க்கைக்கு வளமூட்டுவது எனும் நோக்கத்துடன், வங்கி தனது பரந்த கிளை வலையமைப்பு மற்றும் சுய வங்கிச் சேவை நிலையங்கள் போன்றவற்றினூடாகவும், பண மீளப் பெறுகைகளை இலகுவாக மேற்கொள்வதற்காக 4500க்கும் அதிகமான ATMகளையும் கொண்டிருப்பதுடன், உடனடி பண வைப்புகளுக்காக 850க்கும் அதிகமான Pay&Go களையும் கொண்டு, வாடிக்கையாளர்களை சென்றடைகின்றது. இணைய மற்றும் மொபைல் வங்கியியல் சேவைகள், 24x7 பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்தியேகமான வங்கி அலகுகள் போன்றவற்றினூடாக வாடிக்கையாளர் மேலும் பல அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜெத்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களை, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களைக் கொண்டிருக்கவில்லை.