சர்வதேச MSME தினத்தை முன்னிட்டு மத்திய மாகாண – வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ENRICH MSME வணிக அமர்வில் அமானா வங்கி கைகோர்த்திருந்தது. கண்டியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், 100 க்கும் அதிகமான நுண், சிறு மற்றும் நடுத்தரளவு வணிக முயற்சியாண்மைகள் பங்கேற்றிருந்தன. அதில் அவற்றின் பணிப்பாளர்கள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் போன்றவர்கள் அடங்கியிருந்தனர். ஒரு நாள் முழுவதும் அர்த்தமுள்ள தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வாக இந்த அமர்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மனித வளங்கள் முகாமைத்துவம், சந்தைப்படுத்தல், தொழில்னுட்பம் மற்றும் திறமை மற்றும் பிரத்தியேகமான வணிக அமர்வு போன்ற நான்கு தலைப்புகளில் இந்த அமர்வு முன்னெடுக்கப்பட்டது. ஒவ்வொரு பிரிவிலும் குறித்த விடயம் தொடர்பான விளக்கவுரை நிபுணரால் வழங்கப்பட்டதுடன், குழுநிலை கலந்துரையாடலும் முன்னெடுக்கப்பட்டது. இந்த குழுவில் பிராந்தியத்தின் முன்னணி தொழில்முயற்சியாளர் மற்றும் உயர் பதவி வகிக்கும் அரசாங்க அதிகாரி அடங்கலாக மூன்று நிபுணர்களை இந்த குழுக்கள் கொண்டிருந்தன.
மத்திய மாகாண ஆளுனர் சரத் பி.எஸ். அபயகோன் பிரதம அதிதியாக இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன், இந்தியாவின் உதவி உயர் ஸ்தானிகர் வி.எஸ்.சரண்யா மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர். டெரன்ஸ் மதுஜித் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர். வர்த்தக மற்றும் தொழிற்துறை சம்மேளனங்களின் தவிசாளர் தேசமான்ய ஜகத் திசாநாயக்க, பணிப்பாளர் சபை அங்கத்தவர்களும் இந்த நிகழ்வில் பிரசன்னமாகியிருந்தனர்.
இந்நிகழ்வில் அமானா வங்கியின் வணிக பிரிவு மற்றும் மத்திய மாகாண உதவி உப தலைவர் அசாம் அமீர் கருத்துத் தெரிவிக்கையில், “பிராந்தியத்தின் தொழில்முயற்சியாளர்களுக்கு வளர்ச்சி, புத்தாக்கம் மற்றும் புதிய வாய்ப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் அமைந்துள்ள, ENRICH MSME அமர்வுடன் அமானா வங்கி கைகோர்த்துள்ளதையிட்டு மிகவும் பெருமை கொள்கிறது. இலங்கையில் வட்டிசாராத மாதிரியில் முழுமையாக இயங்கும் அங்கீகாரம் பெற்ற முதலாவதும் ஒரே வங்கியாகவும் திகழும் அமானா வங்கி, MSMEகளுக்கு வலுவூட்டுவதில் தன்னை ஆழமாக அர்ப்பணித்துள்ளது. எமது மக்களுக்கு நட்பான, அபிவிருத்தியில் கவனம் செலுத்தும் வழிமுறையானது, எமது தேசத்தின் எதிர்கால செயற்பாடுகளில் கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது.” என்றார்.
இந்த அர்ப்பணிப்புக்கு ஆதரவளிக்கும் வகையில், அமானா வங்கியினால் Business Plus எனும் பிரத்தியேகமான வங்கியியல் கட்டமைப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிறிய, நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளின் அதிகரித்துச் செல்லும் தேவைகளுக்கு பொருத்தமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த பிரிவினூடாக, நிதிச் செயற்பாடுகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், தொழில்முயற்சியாளர்களுக்கு வளர்ச்சி மற்றும் வெற்றிகரமான செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வதில் கவனம் செலுத்தப்படுகிறது. இதனூடாக வழங்கப்படும் பிரதான அனுகூலங்களில், பிரத்தியேகமான உறவு பேண் முகாமையாளர், தெரிவுக்குரிய மற்றும் துரிதமான நிதிவசதியளிப்புகள், payroll ஆதரவு, POS மற்றும் QR கொடுப்பனவு தீர்வுகள், விசேட தவணை முதலீட்டு வீதங்கள், இலவச காசோலை புத்தகங்கள் மற்றும் ஒன்லைன் வங்கிச் சேவை அணுகல்கள் போன்றன அடங்கியுள்ளன.
அமீர் மேலும் குறிப்பிடுகையில், “Business Plus என்பது ஒரு சேவை மட்டுமல்ல – எமது பொருளாதாரத்தின் உண்மையான நிதிசார் பங்காளராக திகழ்வதற்கான எமது அர்ப்பணிப்பாக அமைந்துள்ளது. அவர்களுக்கு அளவீடு, புதிய சந்தைகளை அணுகல் மற்றும் இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உறுதியான பங்களிப்பை ஏற்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக அமைந்திருக்கும். SMEகளை ஊக்குவிப்பதனூடாக, எமது தேசத்தின் வளர்ச்சி மற்றும் மீட்சி ஆகியவற்றுக்கு நேரடியாக ஆதரவளிக்க முடியும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 25 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.
படத்தின் தலைப்பு:
கண்டியில் நடைபெற்ற Enrich MSME அமர்வில் பங்கேற்றவர்கள்
அமானா வங்கியின் வியாபார பிரிவு மற்றும் மத்திய பிராந்திய உதவி உப தலைவர் அசாம் அமீர் அமர்வில் உரையாற்றுகிறார்.