உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளது. ஐந்தொகை வலிமை மற்றும் சொத்துக்களின் அளவு போன்றவற்றின் அடிப்படையில் 2020 ஆம் ஆண்டுக்கான ஏசியன் பாங்கர் தரப்படுத்தலின் பிரகாரம் அமானா வங்கி இந்த உயர் நிலையை எய்தியுள்ளது.
உறுதியான இஸ்லாமிய வங்கிகளை மதிப்பாய்வு செய்யும் போது ‘த ஏசியன் பாங்கர்’ பரிபூரண மற்றும் கடுமையான அடையாள அட்டையை பின்பற்றியிருந்ததுடன், ஐந்தொகையில் ஆறு பகுதிகளை ஆராய்ந்திருந்தது. இதில் அளவிடக்கூடிய ஆற்றல், ஐந்தொகை வளர்ச்சி, இடர் கோவை, இலாபகரத்தன்மை, சொத்தின் தரம் மற்றும் திரள்வு தன்மை போன்றன இதில் அடங்குகின்றன. மதிப்பாய்வுக்கு பயன்படுத்தியிருந்த சில பிரதான குறிகாட்டிகளில் மொத்த சொத்துக்கள், முற்பணங்களில் வருடாந்த வளர்ச்சி மற்றும் வைப்புகள், வைப்புக்களின் மீதான முற்பண விகிதம், மூலதன போதுமை, தொழிற்படு இலாபத்தின் வருடாந்த வளர்ச்சி, சொத்துக்களின் மீதான வருமதி, வருமான விகிதத்தின் மீதான செலவீனம், NPA மற்றும் CASA விகிதம் போன்றன அடங்கியிருந்தன.
இந்த பெருமைக்குரிய கௌரவிப்பு தொடர்பில் அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “உலகின் சிறந்த 100 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக மத்திய கிழக்கு மற்றும் ஆசிய பசுபிக் பிராந்தியங்களின் மத்தியிலும் அமானா வங்கி தரப்படுத்தப்பட்டுள்ளமை என்பதையிட்டு நாம் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம். ஏசியன் பாங்கர் என்பது கடுமையான மதிப்பாய்வு விதிமுறைகளை பின்பற்றியிருந்ததனூடாக உறுதியான வங்கியாக தெரிவாகியிருந்தது. அதன் நிதிசார் பெறுபேறுகளில் வலிமை மற்றும் உறுதியான மீட்சியையும் வெளிப்படுத்தியிருந்தது. 2021 ஆம் ஆண்டில் வங்கி மக்களுக்கு நட்பான வங்கிச் சேவைகளை வழங்குவதில் 10 வருட பூர்த்தியை கொண்டாடும் நிலையில் இந்த கௌரவிப்புகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தனவாக உள்ளன. எமது ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், பங்காளர்கள் மற்றும் இதர பிரதான பங்குதாரர்கள் போன்ற தரப்பினரின் ஈடுபாடு மற்றும் நம்பிக்கையில்லாவிடின் இவ்வாறான உலகளாவிய தரப்படுத்தல்களை எம்மால் எய்த முடியாமல் போயிருக்கும். அதற்காக இவர்களுக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம். எதிர்வரும் ஆண்டுகளில் அமானா வங்கி, அதன் தரப்படுத்தலை இறைவன் அருளால் மேலும் உயர்ந்த நிலையை எய்தும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.” என்றார்.
அமானா வங்கி இலங்கையில் வேகமாக வளர்ந்து வரும் விற்பனை வங்கியாக குளோபல் பாங்கிங் அன்ட் ஃபினான்ஸ் விருதுகளில் இந்த ஆண்டில் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், இலங்கையின் சிறந்த வெளியக வங்கி மற்றும் சமூகப் பொறுப்பு வங்கியாகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.