அமானா வங்கியின் குருநாகல் பிராந்திய சேவைகள் பரகஹாவெனிய SBC ஊடாக மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
அமானா வங்கி தனது மக்களுக்கு நட்பான வங்கிச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் வகையில், தனது 42ஆவது சுய வங்கிச் சேவை நிலையத்தை (SBC) பரகஹாவெனிய பகுதியில் நிறுவியுள்ளது. குருநாகல் மாவட்டத்தில் விவசாய, வர்த்தக மற்றும் குடியிருப்பு சமூகங்களுக்கு முக்கிய நகராக விளங்கும் இப்பகுதியில் வங்கிச் சேவைகளை எளிதாக அணுகும் வசதி இதன் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இல. 192, கண்டி வீதி, பரகஹாவெனிய என்ற முகவரியில் அமைந்துள்ள இந்நிலையம் 24/7 அடிப்படையில் அத்தியாவசிய வங்கிச் சேவைகளை வழங்குகிறது. இது தனிநபர்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கு அதிக நெகிழ்வுத்தன்மையையும் வசதியையும் வழங்குகிறது. பரகஹாவெனிய சமூகத்திடமிருந்து இந்நிலையத்திற்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது.
பரகஹாவெனிய SBC மூலம் பணம் பெறுதல், பணம் வைப்பு, காசோலை வைப்பு மற்றும் கணக்கு மீதியை பரிசோதித்தல் உள்ளிட்ட முக்கிய வங்கிச் சேவைகளை 24 மணிநேரமும் மேற்கொள்ளலாம். இதன் மூலம் பாரம்பரிய வங்கிச் சேவை நேரங்களுக்கு மட்டுப்படாமல் எந்நேரத்திலும் பாதுகாப்பாக நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.
திறப்பு நிகழ்வில் அமானா வங்கியின் வணிக வங்கியியல் சிரேஷ்ட உப தலைவர் இர்ஷாத் இக்பால், மத்திய பிராந்தியம் மற்றும் வணிக பிரிவு உதவி உப தலைவர் அசாம் அமீர், சில்லறை விற்பனை மற்றும் சேனல் கைப்பற்றல் தலைவர் மொஹமட் அஸ்மில் மற்றும் குருநாகல் கிளை முகாமையாளர் ரினோஸ் கலாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், மாவத்தகம பிரதேச சபை தலைவர் டி. துஷார விஜேசேகர, பிரதேச செயலாளர் டி.பி.எஸ். குமார, காவல் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பிரதேச வணிக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரையாற்றிய இர்ஷாத் இக்பால், “பரகஹாவெனிய SBC நிறுவப்பட்டதன் மூலம் பிராந்திய சமூகங்களின் நிதி அணுகலை மேம்படுத்தும் எங்கள் அர்ப்பணிப்பு மேலும் வலுப்பெறுகிறது. விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்களின் நிதி தேவைகளை எளிதாக்கும் வகையில் இது பெரும் ஆதரவாக இருக்கும்,” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதியுடன் இயங்கும் மற்றும் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாக அமானா வங்கி பிஎல்சி செயல்படுகிறது. அதன் முக்கிய பங்குதாரரான IsDB குழுமம் ‘AAA’ தரப்படுத்தலுடன் 57 நாடுகளில் செயற்படும் பன்முக அபிவிருத்தி நிதி நிறுவனம் ஆகும். வட்டி இல்லா வங்கியியல் முறையில் செயல்படும் அமானா வங்கி, உலகின் முன்னணி இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அமானா வங்கிக்கு துணை அல்லது இணை நிறுவனங்கள் இல்லை என்பதுடன், OrphanCare அறக்கட்டளையின் நிறுவனர் அனுசரணையாளராகவும் செயல்படுகிறது.
Image 1, Caption: அமானா ெங்கியின் சிசரஷ்ட உப ெவைெர் இர்ஷாத் இக்பால், உெவி உப ெவைெர் அோம் அமீர் மற்றும் இெர விருந்தினர்கள் பரகஹாவெனிய சுய ெங்கிச் சேவெ நிவைய ஆரம்ப நிகழ்வில் காணப்படுகின்றனர்.