• Amãna Bank PLC Blog Detail - Main Visual

அமானா வங்கி உயிர்களைக் காப்பதற்காக 1990 சுவ செரிய நோயாளர் காவு வண்டியை (அம்புலன்ஸ்) பொறுப்பேற்றுள்ளது

அமானா வங்கி June 15, 2023

அமானா வங்கி, இலங்கை மக்களுக்கு ஆதரவளிப்பதற்கான தனது அர்ப்பணிப்பின் அங்கமாக, தேசிய தேவையை கவனத்தில் கொண்டு, 1990 சுவ செரிய நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) ஒன்றைப் பொறுப்பேற்றுள்ளது. இதனூடாக வங்கியின் மக்களுக்கு நட்பான வங்கியியல் செயற்பாடுகள் மேலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பாராளுமன்ற சட்டத்தின் பிரகாரம் நிறுவப்பட்டு, 297 நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) வண்டிகளுடன் இயங்கும் 1990 சுவ செரிய சேவை, நாடு முழுவதிலும் இலவசமாக அனைத்து இலங்கையர்களுக்கும் வைத்தியசாலை அனுமதிக்கு முன்னரான அவசர சேவையாக வழங்கப்படுகின்றது. எண்ணற்ற உயிர்களைக் காப்பாற்றும் இச் சேவையின் சராசரி சேவை வழங்கல் நேரம் 11.30 நிமிடங்களாக அமைந்துள்ளது. வரையறைகளற்ற வாழ்வுகளை பாதுகாப்பதில் 1990 சுவசெரிய நோயாளர் அவசர வண்டிச் சேவையினூடாக பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், பல மருத்துவ அவசர நிலைகளின் போது சேவைகளை வழங்கியதில் முன்நிலையில் திகழ்வதுடன், கொவிட்-19 தொற்றுப் பரவலின் போதும் பெரும் சேவைகளை மக்களுக்கு ஆற்றியிருந்தது.

நாடு எதிர்நோக்கியுள்ள சமூக-பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக 1990 சுவ செரிய சேவையும் பெரும் நிதி நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த நிலையில், அமானா வங்கியினால் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நன்கொடையினூடாக, நோயாளர் அவசர வண்டி பராமரிப்பு, எரிபொருள், மருத்துவ சாதனப் பராமரிப்பு, ஊழியர்களுக்கு பயிற்சிகள் வழங்கல், ஊழியர் சீருடைகள் கொள்வனவு மற்றும் ஊழியர் பாதுகாப்பு சாதனங்கள் கொள்வனவு போன்றன அடங்கலாக அதன் செயற்பாட்டு செலவுகளை நிவர்த்தி செய்து கொள்ளக்கூடியதாக இருக்கும்.

1990 சுவ செரிய நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) வண்டிச் சேவையை பொறுப்பேற்றமை தொடர்பில் அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையர்களின் வாழ்க்கைக்கு வளமூட்டி கைகொடுப்பது எனும் எமது ஈடுபாட்டின் அடிப்படையில், அனைத்து இலங்கையர்களுக்கும் அர்த்தமுள்ள வகையிலமைந்த செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க அமானா வங்கியைச் சேர்ந்த நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். தரமான சுகாதார பராமரிப்பை பெற்றுக் கொள்வது என்பது அடிப்படை உரிமை என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். உயிர்களைக் காப்பதுடன், தேவையானவர்களுக்கு நிவாரணமளிக்கும் செயற்திட்டத்துக்கு அனுசரணையளிப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். 1990 சுவ செரிய நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) சேவை என்பது, முக்கியத்துவம் வாய்ந்த மருத்துவ பராமரிப்பு வளமாக அமைந்துள்ளதுடன், அதன் வினைத்திறனான செயன்முறைகளின் காரணமாக பெருமளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் கோரிக்கைக்கு நாம் செவிமடுத்துள்ளதுடன், அனைத்து இலங்கையர்களுக்கும் இலவசமாக வைத்தியசாலை அனுமதிக்கு முன்னரான மருத்துவப் பராமரிப்பு சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கின்றோம்.” என்றார்.

அமானா வங்கியின் இச் செயற்பாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 1990 சுவ செரிய மையத்தின் தவிசாளர் துமிந்திர ரத்நாயக்க கருத்துத் தெரிவிக்கையில், ““நோயாளர் நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) ஒன்றை பொறுப்பேற்கவும்” எனும் எமது கோரிக்கையை அமானா வங்கி முன்வந்து ஏற்றுள்ளமைக்கு நன்றி தெரிவிக்கின்றேன். எமது நோயாளர் அவசர வண்டிச் சேவையின் சுமூகமான செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்காக ஏனைய கம்பனிகளினால் அமானா வங்கி இணைந்துள்ளமை பாராட்டுதலுக்குரியது. நாம் வழங்கும் சேவைகளுக்கு கூட்டாண்மை துறையினால் காண்பிக்கப்படும் நன்றியின் அடையாளமாக இந்தப் பங்களிப்பு அமைந்துள்ளது.” என்றார்.

இலங்கை மக்களுக்கான தனது அர்ப்பணிப்பின் அங்கமாக, பல்வேறு சுகாதாரப் பராமரிப்புத் திட்டங்களில் அமானா வங்கி பங்களிப்பு வழங்கியுள்ளது. 2006 ஆம் ஆண்டு முதல், கொழும்பு தெற்கு (களுபோவில) போதனா வைத்தியசாலையின் சிறுவர் பராமரிப்பு சிகிச்சை நிலையத்தின் பராமரிப்பு பணிகளுக்கு வங்கி ஆதரவளிக்கின்றது. அரசாங்கத்தின் கொவிட்-19 சுகாதாரப் பராமரிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்துக்கும் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை செய்துள்ளது. முன்னணி அரச வைத்தியசாலைகளுக்கு மருத்துவ சாதனங்கள் மற்றும் மருந்துப் பொருட்களை வழங்குகின்றது. அத்துடன் UNDP அவசர மருத்துவ நிவாரணத் திட்டத்துடனும் கைகோர்த்து செயலாற்றுகின்றது.

ஸ்தாபக அனுசரணையாளராக ‘OrphanCare’ திட்டத்துக்கு அமானா வங்கி தொடர்ந்தும் ஆதரவளிக்கின்றது. இந்தத் திட்டத்தினூடாக, அநாதரவான சிறுவர்களின் கவனிப்பாரற்ற முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அநாதரவான சிறுவர்கள் 18 வயதை பூர்த்தி செய்ததும், அநாதை இல்லப் பராமரிப்பை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள அவர்களுக்கு தமது வாழ்க்கையின் எதிர்காலத்தை வழியமைத்துக் கொள்வதற்கு உதவும் வகையில் இந்தத் திட்டத்தினால் பங்களிப்பு வழங்கப்படுகின்றது. இதுவரையில் நாடு முழுவதையும் சேர்ந்த 90 அநாதரவு இல்லங்களிலிருந்து 3100க்கும் அதிகமானவர்கள் OrphanCare உடன் இணைந்துள்ளனர். அவர்களின் கணக்குகளுக்கு 15 தடவை நிதிப் பகிர்ந்தளிப்பு பங்களிப்பையும் மேற்கொண்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.

OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.

Featured

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo