• Amãna Bank PLC Blog Detail - Main Visual

இலங்கை உலகக் கிண்ண சம்பியன் பட்டம் வென்று 25 வருட பூர்த்தியை அமானா வங்கி கொண்டாடியது அர்ஜுன ரணதுங்கவும் பங்கேற்பு

Amana Bank April 1, 2021

தேசத்துக்கு பெருமை சேர்த்த அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில், 1996 ஆம் ஆண்டு கிரிக்கட் உலகக் கிண்ணத்தை வெற்றியீட்டியிருந்ததன் 25 வருட பூர்த்தியை அமானா வங்கி கொண்டாடியிருந்தது. உலகக் கிண்ண வெற்றியை கொண்டாடும் வகையில், வங்கியினால் புதிர் போட்டியொன்று சமூக வலைத்தளங்களினூடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன் போது உலகக் கிண்ணப் போட்டிகளில் இலங்கை அணியின் பெறுபேறுகள் தொடர்பான வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. இந்த வினாக்கள் அனைத்துக்கும் சரியான பதிலளித்திருந்த கவிஷா சேனாவீர, உஸ்மான் கௌஸ் மற்றும் இஷ்ரத் இம்தியாஸ் ஆகியோர் வெற்றியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

உலகக் கிண்ண வெற்றியை கொண்டாடும் வகையில், உலகக் கிண்ணம் வென்ற இலங்கை கிரிக்கட் அணித் தலைவரான அர்ஜுன ரணதுங்கவின் பங்கேற்பில் வங்கியின் வளாகத்தில் விசேட வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வங்கியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலகக் கிண்ண வெற்றியை கொண்டாடும் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கு பரிசுகளை அர்ஜுன பகிர்ந்தளித்திருந்தார். இந் நிகழ்வுக்கு வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர், பிரதம இடர் அதிகாரி எம் எம் எஸ் குவைலித், பிரதம தொழில்நுட்ப அதிகாரி ரஜித திசாநாயக்க, செயற்பாடுகளுக்கான உப தலைவர் இம்தியாஸ் இக்பால், நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக் அக்பர் மற்றும் சட்டப் பிரிவின் தலைமை அதிகாரி சுலானி தயாராட்ன ஆகியோரும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வின் போது, இலங்கைக்கு வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொடுப்பதில் அணிக்கு சிறந்த தலைமைத்துவமளித்திருந்த அர்ஜுன ரணதுங்கவை பாராட்டி விசேட நினைவுச்சின்னமொன்றையும் வங்கி அன்பளிப்புச் செய்திருந்தது.

இந்த நிகழ்வில் அர்ஜுன ரணதுங்க கருத்துத் தெரிவிக்கையில், “25 வருடங்களுக்கு முன்னர் எமது புகழ்பெற்ற வெற்றி தொடர்பில் பொது மக்கள் காண்பிக்கும் உணர்வுபூர்வமான வரவேற்பு பெரும் கௌரவமாகவும் மகிழ்ச்சியாகவும் அமைந்துள்ளது. பல சவால்களுக்கு முகங்கொடுத்து, இந்த வெற்றியினூடாக எம்மால் நாட்டுக்கு பெருமை சேர்க்க முடிந்தது. முழு நாட்டையும் ஒருமைப்படுத்த முடிந்தது. இந்த வெற்றியை கொண்டாடுவதற்கு அமானா வங்கிக்கு நான் நன்றி தெரிவிக்கின்றேன். எமது உலகக் கிண்ண ஊக்குவிப்புத் திட்டத்தில் வெற்றியீட்டியிருந்த 3 வெற்றியாளர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகின்றேன்” என்றார்.

வங்கியின் முன்னணி சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான OrphanCare தொடர்பில் ரணதுங்க குறிப்பிடுகையில், “அநாதரவானவர்களுக்கு உதவிகளை வழங்க வேண்டும் என்பதில் நான் அதிகளவு ஈடுபாட்டைக் கொண்டுள்ளேன். வங்கியின் OrphanCare ஊடாக அநாதரவான சிறுவர்களின் எதிர்காலத்துக்காக உதவிப் பங்களிப்பு வழங்கப்படுகின்றமை தொடர்பில் நான் மிகவும் வியப்படைகின்றேன். இந்தத் திட்டத்துடன் கைகோர்த்து இயங்க நான் எதிர்பார்க்கின்றேன். 20 மில்லியன் மக்களை ஒன்றிணைத்த கிரிக்கட் போன்று, பொது மக்கள் மத்தியிலும் மற்றும் சர்வதேச மட்டத்தில்; இந்த தகவலைக் கொண்டு செல்வதற்குஇ இத் திட்டமானது சிறந்ததொரு ஊடகமாக அமைந்திருக்கும் எனக் கருதுகின்றேன்.” என்றார்.

இந்நிகழ்வில் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “1996 உலகக் கிண்ண ஞாபகார்த்த புதிர் போட்டியின் வெற்றியாளர்களுக்கு வெகுமதிகளை வழங்கும் இன்றைய தினத்தில் அர்ஜுன ரணதுங்கவை நாம் இங்கு சந்திப்பதையிட்டு மிகவும் பெருமை கொள்கின்றோம். கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒவ்வொரு இலங்கையரின் உள்ளங்களிலும் ஆழமாகப் பதிந்துள்ளதை , எமது சமூக வலெய்தளத்தினுடாக நடத்தப்படட புதிர் போட்டிக்கு கிடேக்கபெற்ற பாரிய வரவேற்புனுடாக அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அவரின் அனுபவப் பகிர்வைத் தொடர்ந்து, பெறுமதி வாய்ந்த தலைமைத்துவத்தினூடாக வெற்றியீட்டியமை தொடர்பில் அறிந்து கொள்ளக்கிடைத்தமை எம்மை ஊக்குவிப்பதாக அமைந்துள்ளது. இவ்வாறான தலைமைத்துவத்திலிருந்து பல விடயங்களை எம் ஒவ்வொருவராலும் பயிலக்கூடியதாக இருக்கும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். எமது OrphanCare திட்டம் தொடர்பில் அர்ஜுனவின் ஊக்கமளிக்கும் கருத்துகளுக்கும் நாம் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், இந்தத் திட்டத்துக்கு அவரின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

நிகழ்வின் முடிவில் பொது உலகக் கிண்ண வரலாறு குறித்து எழுதிய புத்தகத்தை அமானா வங்கியின் ஊழியரான மர்ஷாத் பரி, அர்ஜுன ரணதுங்கவிடம் கையளித்ததுடன்.

Featured

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo