நாடு முழுவதிலும் தனது சேவை வலையமைப்பை விரிவாக்கம் செய்வதையிட்டு அமானா வங்கி பெருமை கொள்கின்றது. அதன் பிரகாரம் தற்போது 55 பிரதேசங்களில் தனது வங்கிச் சேவைகளை வழங்கி வருகின்றது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லில், 33 முழுமையாக இயங்கும் வங்கிக் கிளைகள் மற்றும் 22 சுய வங்கிச் சேவை நிலையங்கள் போன்றன அடங்கியுள்ளன. பரந்தளவு வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான மற்றும் இலகுவில் அணுகக்கூடிய சேவைகளை பெற்றுக் கொடுக்கும் அர்ப்பணிப்புக்கமைய இவை அமைந்துள்ளன.
கல்ஹின்ன மற்றும் மடவல ஆகிய பகுதிகளில் அண்மையில் நிறுவப்பட்ட சுய வங்கிச் சேவை நிலையங்கள், அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர், பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால், உப தலைவர் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவு சித்தீக் அக்பர், பிரதேசத்தின் வியாபார பிரமுகர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் பங்கேற்புடன் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டிருந்தன.
இல. 226/3, பள்ளிவாசல் வீதி, கல்ஹின்ன எனும் முகவரியில் அமைந்துள்ள கல்ஹின்ன சுய வங்கிச் சேவை நிலையத்தினூடாக 24/7 நேரமும் பண மீளப் பெறுகைகள், பண வைப்புகள் மற்றும் காசோலை வைப்புகள் போன்ற வசதிகள் வழங்கப்படுவதுடன், அங்கு காணப்படும் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளினூடாக இதர வங்கிச் சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறான சேவைகளை, இல. 227/2/2 கண்டி வீதி, மடவல எனும் முகவரியில் உள்ள சுய வங்கிச் சேவை நிலையத்திலிருந்தும் பெற்றுக் கொள்ள முடியும். சிறந்த சேவையை உறுதி செய்யும் வகையில், மடவல மற்றும் கல்ஹின்ன சுய வங்கிச் சேவை நிலையங்களின் நிர்வாகச் செயற்பாடுகள் உயர் திறன் படைத்த மற்றும் வாடிக்கையாளர்களில் அக்கறை கொண்ட அமானா வங்கியின் அக்குரணை மற்றும் கட்டுகஸ்தோட்ட கிளைகளின் அணியினால் முன்னெடுக்கப்படும். இரு சுய வங்கிச் சேவை நிலையங்களும் AB Securitas (Pvt) Ltd. உடன் இணைந்து Brown Label Self Service Devise எனும் அடிப்படையில் நிறுவப்பட்டுள்ளன.
வலையமைப்பு விரிவாக்கம் குறித்து வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “எமது சுய வங்கிச் சேவை நிலையங்களை விரிவாக்கம் செய்வதையிட்டும், 55 அமைவிடங்களை சென்றடைந்துள்ளதையிட்டும் நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். மக்களுக்கு நட்பான வங்கி முறைமையினூடாக கல்ஹின்ன மற்றும் மடவல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கு அனுகூலமளிக்கும் வகையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்கின்றோம். ஆரம்ப கட்டமாக பின்தங்கிய பகுதிகளில் சுய வங்கிச்சேவை நிலையங்களை நிறுவியிருந்தமை தொடர்பில் எமக்கு கிடைத்திருந்த நேர்த்தியான சந்தை வரவேற்பினூடாக, அவ்வாறான சௌகரியமான அணுகல் வசதியை ஏற்படுத்தி மேலும் பல வாடிக்கையாளர்களுக்கு அனுகூலத்தைப் பெற்றுக் கொடுக்க நாம் எதிர்பார்த்தோம். இந்த அடிப்படையில், இவ்வாண்டில் மேலும் பல பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
பிரதம செயற்பாட்டு அதிகாரி இம்தியாஸ் இக்பால் கருத்துத் தெரிவிக்கையில், “எமது சுய வங்கிச் சேவை நிலையங்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிறுவியுள்ளதனூடாக, வாடிக்கையாளர்களுக்கும், பொது மக்களுக்கும் நிதிசார் உள்ளடக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சுய சேவை நிலையங்கள் நிறுவப்படுவதற்கு முன்னர், வாடிக்கையாளர் அல்லது பொது மக்கள் ATM போன்ற அடிப்படை வங்கிச் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய நிலை காணப்பட்டது. பண வைப்புகள், மீளப் பெறுகைகள் மற்றும் காசோலை வைப்புகளுக்கு மேலதிகமாக, இந்த சுய வங்கிச் சேவை நிலையங்களில் பிரத்தியேகமான வாடிக்கையாளர் சேவை முகவர்களை சேவைக்கு அமர்த்தியுள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு இதர வங்கிச் சேவைகளையும் அவர்களினூடாக பெற்றுக் கொள்ள முடியும் என்பதுடன், எம்முடன் அவர்களின் வங்கியியல் அனுபவத்தையும் மேம்படுத்திக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது.
OrphanCare இன் ஸ்தாபக அனுசரணையாளர் எனும் தனது ஈடுபாட்டுக்கு அப்பால், அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.