2020 ஒக்டோபர் மாதம் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் ஸ்ரீ லங்கா முன்னெடுத்திருந்த தரப்படுத்தல் மீளாய்வின் போது, அமானா வங்கியின் தேசிய நீண்ட கால தரப்படுத்தலான BB+ மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2020 ஜுன் மாதத்தில் வங்கி பெற்றுக் கொண்ட உயர்ந்த தரப்படுத்தலை இது மேலும் உறுதி செய்துள்ளது. இத் தரப்படுத்தல் உறுதியான நிலைப்பாட்டில் (Stable Outlook) உள்ளது.
இந்த தரப்படுத்தலை மேம்படுத்திக் கொள்வது அல்லது மேலும் நேர்த்தியான நிலைக்கு உயர்த்திக் கொள்வது தொடர்பில் மேற்கொள்ளக்கூடிய விடயங்கள் தொடர்பில் ஃபிட்ச் குறிப்பிட்டிருந்ததில் முக்கியமாக வங்கியின் நிதிக் கோவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்றங்களை தக்க வைத்துக் கொள்வதற்கான தேவை மற்றும் அதன் வர்த்தக நாமத்தை மேம்படுத்துவது பற்றியும் குறிப்பிட்டுள்ளது.
இந்த தரப்படுத்தல் மீள் உறுதி செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “கொவிட்-19 தொற்றுப்; பரவும் நிலையிழும் வங்கி சவால்களுக்குஇ மத்தியில் இயங்கும் நிலையில் இந்த தரப்படுத்தல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அமானா வங்கியின் நெகிழ்ச்சி மற்றும் நிலைத்திருக்கும் திறன் ஆகியவற்றை இந்த தரப்படுத்தல் வெளிப்படுத்தியுள்ளதுடன், கடந்த 18 மாதங்களில் எழுந்த எதிர்பாராத சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுத்துள்ளதையும எடுத்துக்காட்டுகின்றது. வங்கித் துறையுடன் ஒப்பிடுகையில் குறைந்தளவு தொழிற்படா முற்பணங்களுடன் சிறந்த சொத்துக்கள் தரத்தை வங்கி தொடர்ச்சியாகப் பேணுகின்றது. வங்கியின் நிலையான வளர்ச்சியிலஇ; பங்களிப்பு வழங்கியிருந்த ஏனைய விடயங்களுடன் இந்த தரப்படுத்தல்; கிடைப்பதற்கு, பொது மக்கள் மத்தியில்இ அமானா வங்கியின் பிரத்தியேகமான வங்கியியல் முறைக்கான வரவேற்பும் காரணமாக அமைந்துள்ளது” என்றார்.
இலங்கை மத்திய வங்கியினால் அனுமதி அளிக்கப்பட்ட அமானா வங்கி பி.எல்.சி.; கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட ஒரு தனி நிறுவனமாகும். ஜித்தாவில் தலைமையகத்தைக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (IsDB) குழுமம் பிரதான பங்குதாரர் என்ற முறையில் அமானா வங்கியில் 29.97% பங்குளைக் உரிமம் கொண்டுள்ளது. IsDB குழுமம் என்பது ‘AAA’ தரப்படுத்தலைப் பெற்ற பல்துறை அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கிக்கு எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் கிடையாது. அதன் பிரத்தியேகமான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான அனாதை பராமரிப்பு நம்பிக்கை நிதியை ‘OrphanCare’ Trust ஐ மாத்திரமே பேணி வருகின்றது.