• Amãna Bank PLC Blog Detail - Main Visual

அமானா வங்கியின் 13 ஆவது வருடாந்த பொது ஒன்றுகூடல் முன்னெடுப்பு

அமானா வங்கியின் March 31, 2022

அமானா வங்கி தனது 13ஆவது வருடாந்த பொது ஒன்றுகூடலை (AGM) மெய்நிகர் கட்டமைப்பில் (ஒன்லைன்) வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. முன்னைய வருடாந்த பொது ஒன்றுகூடல்கள் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தொற்றுப் பரவலுடனான சூழ்நிலையில் மெய்நிகர் முறையில் இடம்பெற்றதைத் தொடர்ந்து, இம்முறையும் அதேமுறையில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

சகல பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் பங்கேற்புடன் 2022 மார்ச் 25ஆம் திகதி இடம்பெற்ற வருடாந்த பொது ஒன்றுகூடல், வங்கியின் பிரதான அலுவலக சந்திப்பு அறையிலிருந்து மெய்நிகர் அப்ளிகேஷன் ஊடாக நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. வங்கியின் பணிப்பாளர் சபைத் தலைவர் அஸ்கி அக்பரலியின் மேற்பார்வையில் இந்த ஒன்றுகூடல் இடம்பெற்றதுடன், சிரேஷ்ட பணிப்பாளர் ரஜீவ் நந்தலால் திவிவெடி மற்றும் வங்கியின் பிரதான பங்காளர்களான IsDB குழுமத்தை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த பணிப்பாளர் குழுவினர், மொஹம்மட் அதாவுர் ரஹ்மான் சௌத்திரி மற்றும் சையித் முஹம்மத் அசிம் ராஸா ஆகியோர் இந்த சந்திப்பில் வெளிநாடுகளிலிருந்து நேரடியாக விஜயம் செய்து பங்கேற்றனர்.  இந்த சந்திப்பில் பணிப்பாளர் ஆரன் ரஸல்-டேவிசன், பணிப்பாளர் மொஹமட் அதமலி, பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் மற்றும் வங்கியின் நிர்வாகக் குழு அங்கத்தவர்கள் ஆகியோருடன், வங்கியின் பணிப்பாளர்களான தில்ஷான் ஹெட்டியாரச்சி, கைருல் முஸம்மில் பெரேரா, போல் மேர்சர், ஒமர் காசிம் மற்றும் திஷான் சுபசிங்க ஆகியோர் இணைய வழியாக இணைந்து கொண்டனர். மெய்நிகர் கட்டமைப்பினூடாக இணைந்து கொண்ட பங்குதாரர்களுக்கு இந்த சந்திப்பில் ஈடுபாட்டை பேணுவதற்காக ஊக்குவிக்கப்பட்டனர் . வங்கியின் வெளியக கணக்காய்வாளர்களான ஏர்னஸ்ட் அன்ட் யங் (EY) ஐச் சேர்ந்த பங்காளர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர். 

வங்கியின் மெய்நிகர் வருடாந்த பொது ஒன்றுகூடல் பற்றி தவிசாளர் அஸ்கி அக்பரலி கருத்துத் தெரிவிக்கையில், “எமது புதிய வழமையில் மெய்நிகர் சந்திப்புகள் அங்கமாக அமைந்திருக்கும் நிலையில், எமது வருடாந்த பொது ஒன்றுகூடலையும் மெய்நிகர் தொழில்நுட்பத்தில் முன்னெடுக்க முடிந்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எம்முடன் எமது பங்காளர்கள் இணைந்து கொண்டமைக்கும், சந்திப்பு வெற்றிகரமாக அமைந்திருப்பதற்கு பங்களிப்பு வழங்கியிருந்தமைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2021 செப்டெம்பர் மாதத்தில் அமானா வங்கியின் நீண்ட கால தரப்படுத்தலை BB+(lka) உறுதியான தோற்றப்பாட்டுடன் வழங்கியிருந்தது. அமானா வங்கி வேறு எவ்வித துணை நிறுவனங்களையோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களையோ கொண்டிருக்கவில்லை.

Featured

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo