உயர் கட்டண வீதங்கள் மற்றும் மீளச் செலுத்துவதற்கு குறைந்த காலம் போன்ற காரணிகளுடன், நிதித் தீர்வுகள் போதியளவு கிடைக்காமையினால் தமது நிதித் தேவைகளை காலம் தாழ்த்த வேண்டிய கட்டாய சூழலுக்கு பல மக்கள் முகங்கொடுத்துள்ள நிலையில், அமானா வங்கி கவர்ச்சிகரமான நிதித் தீர்வை வழங்க முன்வந்துள்ளது.
இந்தச் சலுகையுடன், வங்கியின் பிரத்தியேகமான மக்களுக்கு நட்பான சேவை உள்ளம்சங்களுடன், வட்டிசாராத வங்கிச் சேவைகளை வாடிக்கையாளர்கள் பெற்று அனுகூலமடையலாம்.
அமானா வங்கியினால் கவர்ச்சிகரமான கட்டணத்தில் சந்தையில் சிறந்த விலையிடலுடன், நீண்ட காலம் வரை மீளச் செலுத்தும் வசதியில் நிதிச் சேவைகள் வழங்கப்படுகின்றன. வாடிக்கையாளர்களின் சகாயத் தன்மையை மேம்படுத்துவதில் இந்த இரு காரணிகளும் முக்கிய பங்காற்றும்.
வாடிக்கையாளர் தற்போது வாகன நிதியளிப்பு வசதியை 7 வருடங்கள் வரை மீளச் செலுத்தக்கூடிய வகையில் பெற்றுக் கொள்ளலாம். ரூ. 100,000 தொகைக்கு மாதாந்த வாடகைத் தொகை ரூ. 2345 எனும் குறைந்த தொகையில் அமைந்துள்ளது. 8 வருடங்கள் வரை மீளச் செலுத்தும் வகையில் சூரியப் படல்களை பொருத்திக் கொள்வதற்கான நிதி வசதியையும் வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். இதனூடாக புதுப்பிக்கத்தக்க வலுவை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். பிரத்தியேகச் சொத்துக்களையும், வீட்டுப் பாவனைப் பொருட்களையும் கொள்வனவு செய்ய எதிர்பார்க்கும் அரசாங்க சேவையாளர்கள், வைத்தியர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு வங்கியின் இலகு கொடுப்பனவுத் திட்டத்தினூடாக 10 வருடங்கள் வரை மீளச் செலுத்தும் வசதி வழங்கப்படுகின்றது.
வாடிக்கையாளர்களுக்கு தமது நிதித் தேவைகளை விண்ணப்பிக்கக்கூடிய ஒன்லைன் கட்டமைப்பொன்றையும் வங்கி www.amanabank.lk/#financing-support இல் தன்வசம் கொண்டுள்ளது. தமது நிதித் தேவைகளை சௌகரியமான முறையில் பெற்றுக் கொள்வதற்காகவும், மேலும் தொடர்புகளை பேணுவதற்காக, பிரத்தியேகமான உறவு பேண் முகாமையாளரை இவ் இணையத்தளக் கட்டமைப்பு ஏற்படுத்திக் கொடுக்கும்.
அமானா வங்கியினால் வழங்கப்படும் இந்தச் சலுகை தொடர்பில் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவின் உப தலைவர் சித்தீக் அக்பர் கருத்துத் தெரிவிக்கையில், “சந்தையில் சிறந்த கட்டணத்தில் எமது வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். நீடித்த காலப்பகுதியில் அவர்களால் மீளச் செலுத்தக்கூடிய வசதியுடன் சேவைகளை பெற்றுக் கொடுப்பதால், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கு உதவியாக அமைந்திருக்கும். கடந்த சில ஆண்டுகளில் நிலவிய நெருக்கடியான பொருளாதாரச் சூழலிலும், அவதானமான முறையில் செயற்பாடுகளை முன்னெடுத்ததன் பயனாக, வங்கியின் உறுதித்தன்மை, வலிமை மற்றும் மீண்டெழுந்திறன் ஆகியவற்றின் காரணமாக, எம்மால் இந்த கவர்ச்சிகரமான வழங்கலை எம்மால் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது. எமது பிரத்தியேகமான மற்றும் மக்களுக்கு நட்பான வங்கிச் சேவைகளின் பயனைப் பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து இலங்கையர்களையும் நாம் அழைக்கின்றோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியின் முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் வகையில், உலகின் சிறந்த 100 உறுதியான இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கியை ஏசியன் பாங்கர் இனால் தெரிவு செய்யப்பட்டிருந்தது. அமானா வங்கி எந்தவொரு துணை நிறுவனங்கள் அல்லது இணை நிறுவனங்களையும் கொண்டிருக்கவில்லை.