இலங்கை பட்டயக் கணக்காளர் கல்வியகத்துடன் (CA ஸ்ரீ லங்கா) புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் அமானா வங்கி அண்மையில் கைச்சாத்திட்டிருந்தது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம், கல்வியகத்தின் மாணவர்களுக்கு மடிக்கணனிகளை வங்கியின் மக்கள் சிநேகித இலகுவான தவணை முறை கட்டனை திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யக்கூடிய வசதி வழங்கப்படும். 30000 க்கும் அதிகமான மாணவர்கள் மற்றும் 6000 க்கும் அதிகமான அங்கத்தவர்களைக் கொண்ட இலங்கையின் மாபெரும் நிபுணத்துவ கணக்கியல் அமைப்பாக CA ஸ்ரீ லங்கா திகழ்கின்றது. புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், CA ஸ்ரீ லங்கா மாணவர்களுக்கு மடிக் கணனியை கொள்வனவு செய்வதற்காக ரூ. 150,000 வரையான நிதி வசதியை பெற்றுக் கொள்ள முடியும். 48 மாதங்கள் வரை விசேட தவணைமுறை அடிப்படையில் மீளச் செலுத்தலுக்கமைய இந்த வசதியை பெற்றுக் கொள்ள முடியும். மாணவர்களுக்கு தமது கற்கைகளை தடங்கல்களின்றி ஒன்லைனில் முன்னெடுத்துச் செல்வதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. வருமானமீட்டாத மாணவர்கள், தமது வருமானமீட்டும் பெற்றோர்களுடன் இணைந்து இந்த வசதிக்காக விண்ணப்பிக்க முடியும்.
இந்த கைகோர்ப்பு தொடர்பாக CA ஸ்ரீ லங்கா பிரதம நிறைவேற்று அதிகாரி துலானி பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “எமது மாணவர் சமூகத்துக்கு இந்த கைகோர்ப்பு பெரிதும் பயனுள்ளதாக அமைந்திருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். கல்வி பயில்வதற்கு நாட்டம் கொண்டிருந்த போதிலும், நிதி நெருக்கடி நிலைமைகள் காரணமாக ஒன்லைனில் கல்வியை தொடர்வதற்கான வசதிகளை பெற்றுக் கொள்வதில் அவர்களுக்கு சிக்கல்கள் காணப்படுகின்றன. தமது சொந்த மடிக்கணனியை கொண்டிருப்பது என்பது அவர்களின் உற்பத்தித்திறனை ஊக்குவிப்பதுடன், தொற்றுப் பரவல் காலப்பகுதியில் விரிவுரைகள் மற்றும் பரீட்சைகள் போன்ற அனைத்தும் மெய்நிகரான முறையில் இடம்பெறும் நிலையில், வினைத்திறன் வாய்ந்த பயிலல் முறைகளை உறுதி செய்கின்றது. இந்த நிதி வசதித் திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு அமானா வங்கி முன்வந்திருந்தமைக்காக நாம் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், எதிர்பார்ப்புகள் நிறைந்த ஆயிரக் கணக்கான பட்டயக் கணக்காளர்களுக்கு பெருமளவில் அனுகூலமளிப்பதாக இருக்கும்.” என்றார்.
இந்தப் பங்காண்மை தொடர்பில் அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “கற்றல் செயற்பாடுகளை தடங்கல்களின்றி தொடர்வதற்கு மடிக்கணனி ஒன்றைக் கொண்டிருப்பது என்பது கட்டாயமாகியுள்ள நிலையில், இவ்வாறான செயற்திட்டமொன்றுக்காக CA ஸ்ரீ லங்கா உடன் கைகோர்த்துள்ளமைக்காக நாம் மகிழ்ச்சியடைகின்றோம். வரையறைகளற்ற வாய்ப்புகளை வழங்குவதில் உறுதியான கல்வி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். அவ்வாறான நிலையை எய்துவதற்கு இது போன்ற விசேடத்துவம் வாய்ந்த நிதி வசதித் திட்டங்களினூடாக மாணவர்களுக்கு உதவ அமானா வங்கி தயாராகவுள்ளது.” என்றார்.
இந்த நிதி வசதியை பெற்றுக் கொள்வதில் ஆர்வம் செலுத்தும் CA ஸ்ரீ லங்கா மாணவர்கள், https://www.amanabank.lk/ca-students-laptop-financing.html எனும் இணையத்தளத்துக்கு விஜயம் செய்து ஒன்லைனில் விண்ணப்பிக்க முடியும் என்பதுடன், இந்தச் சலுகை தொடர்பான முழு விவரங்களையும் பெற்றுக் கொள்ளலாம். தமது தொடர்பாடல் தகவல்களை பதிவு செய்வதனூடாக, உறவு பேண் அதிகாரிகள் தொடர்பு கொண்டு, இந்த வசதியைப் பெற்றுக் கொள்வதற்கான உதவிகளை வழங்குவார்கள்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2020 ஒக்டோபர் ஃபிட்ச் ரேட்டிஸ் ஸ்ரீ லங்காவினால் வங்கியின் தேசிய நீண்ட கால தரப்படுத்தலான BB+(lka) உறுதியான நிலை என்பதை வழங்கியிருந்தது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.