உலக HRD காங்கிரஸ் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கைக்கான சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகள் 2020 நிகழ்வில் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமத்துக்கான விருது அமானா வங்கிக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த விருதுக்காக விண்ணப்பித்திருந்த பெருமளவு இதர முன்னணி நிறுவனங்கள் மற்றும் குழும நிறுவனங்கள் மத்தியில் அமானா வங்கி இந்த விருதை வென்றிருந்தமை சிறப்பம்சமாகும்.
அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி இந்த விருதை வெற்றியீட்டியமை தொடர்பில் மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்தப் பெருமைக்குரிய விருது அமானா வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளமையானது உண்மையில் பெரும் கௌரவமாக அமைந்துள்ளது. ஊழியர்களை ஈடுபாட்டுடன் பேணுவதற்காக வங்கியினால் முன்னெடுக்கப்படும் மூலோபாயத் திட்டங்களை உறுதி செய்வதாக இந்த கௌரவிப்பு அமைந்துள்ளது. நிபுணத்துவம் வாய்ந்த வகையில் தயார்ப்படுத்தப்பட்டு, ஈடுபடுத்தப்பட்டு மற்றும் பொது இலக்குகளை நோக்கி ஊழியர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றனர். வங்கியில் பணியாற்றும் 900 க்கும் அதிகமான ஊழியர்களுக்காக இந்த விருதை சமர்ப்பிக்க நான் விரும்புகின்றேன். வளர்ச்சியுடனான வாழ்க்கைக்கு வளமூட்டும் எமது பயணத்தில் முக்கிய பங்கை எமது ஊழியர்கள் வகிக்கின்றனர்.” என்றார்.
வங்கியின் மனித வளங்கள் பிரிவின் தலைமை அதிகாரி பர்ஹான் ரிபாய் தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்ட போது, “எமது அர்ப்பணிப்பான ஊழியர்களின் அதீத ஈடுபாடு மற்றும் பங்களிப்புக்கு இந்த விருது சான்றாக அமைந்துள்ளது. இந்த நெருக்கடியான சூழலிலும், எமது வாடிக்கையாளர்களின் நலனுக்காக எமது ஊழியர்கள் தன்னலமின்றி அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர். இவ்வாறான ஊழியர்களைக் கொண்டிருப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியினால் அனுமதி அளிக்கப்பட்ட அமானா வங்கி பி.எல்.சி.; கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட ஒரு தனி நிறுவனமாகும். ஜித்தாவில் தலைமையகத்தைக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (ISDB) குழுமம் பிரதான பங்குதாரர் என்ற முறையில் அமானா வங்கியில் 29.97% பங்குளைக் உரிமம் கொண்டுள்ளது. ISDB குழுமம் என்பது ‘AAA’ தரப்படுத்தலைப் பெற்ற பல்துறை அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கிக்கு எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் கிடையாது. அதன் பிரத்தியேகமான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான அனாதை பராமரிப்பு நம்பிக்கை நிதியை ‘OrphanCare’ Trust ஐ மாத்திரமே பேணி வருகின்றது.

அமானா வங்கியின் மனித வளங்கள் பிரிவின் தலைமை அதிகாரி பர்ஹான் ரிபாய்
அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர்