ஐக்கிய இராஜ்ஜியத்தின் புகழ்பெற்ற “குளோபல் பாங்கிங் அன்ட் ஃபினான்ஸ் ரிவுயு” சஞ்சிகையினால் “இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் வங்கி” எனும் விருது அமானா வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக, இலங்கையின் சிறப்பாக செயலாற்றும் வங்கிகளில் ஒன்றாக அமானா வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், வெளிநாடுகளில் பணியாற்றும் மற்றும் வசிக்கும் இலங்கையர்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்கின்றமைக்காக, “இலங்கையின் சிறந்த புலம்பெயர் வங்கிச் சேவைகள்” எனும் விருதையும் தனதாக்கிக் கொள்ள ,Expat Gold வாடிக்கையாளர் சேவைகள் வழிவகுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உலக நோய்த் தொற்றுக்கு மத்தியிலும், அமானா வங்கியின் சிறந்த சமூக அற்பணிப்புத் திட்டமான OrphanCare ஊடாக , 3000 இற்கும் அதிகமான அநாதரவானகள் பயன் பெறுவதை கௌரவித்து "இலங்கையின் சிறந்த சமூக சேவை வங்கி" எனும் விருதும் வழங்கப்பட்டுள்ளது .
அமானா வங்கி வெற்றியீட்டியிருந்த மூன்று விருதுகள் தொடர்பில் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் போட்டிகரமான வங்கியியல் துறையில் இந்த மூன்று விருதுகளை வெற்றியீட்டியுள்ளமை என்பது எமது நிலையை மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளதுடன், பெருமையையும் சேர்த்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக நாம் முன்னெடுத்திருந்த செயற்பாடுகளின் பிரதிபலிப்பதாக இந்த விருதுகள் அமைந்துள்ளன. இந்த காலப்பகுதியில் பல சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்தது. இவற்றை வங்கி வெற்றிகரமாக முகங்கொடுத்திருந்தது. வெளிநாடுகளில் அயராது உழைத்து, நாட்டுக்கு அவசியமான அந்நியச் செலாவணிப் பங்களிப்பை வழங்கும் எம் நாட்டவர்கள் பயன்படுத்தும் எமது பிரத்தியேகமான புலம்பெயர் வங்கிச் சேவைகளுக்கும் கௌரவிப்பு கிடைத்துள்ளமையையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். எமது OrphanCare திட்டத்துக்கு தொடர்ந்தும் கௌரவிப்புகள் கிடைப்பதை நான் மகிழ்ச்சியடைகின்றேன். நாட்டின் 80 க்கும் அதிகமான அநாதை இல்லங்களைிலுள்ள 3000க்கும் அதிகமான அநாதரவானவர்களுக்கு நேர்த்தியான பங்களிப்பை வழங்கியுள்ளதுடன், அவர்கள் 18 வயது நிரம்பியதும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் திட்டம் அமைந்துள்ளது.” என்றார்.
2020 ஆம் ஆண்டில் அமானா வங்கி மொத்த சொத்துக்கள் 100 பில்லியன் ரூபாய் எனும் பிரதான இலக்கை கடந்து சாதனை புரிந்திருந்தது. 9 வருட கால சேவையை பூர்த்தி செய்துள்ள வங்கி எனும் வகையில் இது உண்மையில் மிகவும் பாராட்டப்பட வேண்டிய சாதனையாக அமைந்துள்ளது. குறுகிய காலப்பகுதியில் வங்கியின் துரிதப்படுத்தப்பட்ட வளர்ச்சியை இது பிரதிபலிப்பதுடன், சந்தை சூழல்கள் சாதகமாக அமைந்திருக்காத நிலையில், ஆரோக்கியமான ஐந்தொகையை பேணியிருந்தது. வாடிக்கையாளர் வைப்புகளில் வங்கி தொடர்ச்சியாக உறுதியான வளர்ச்சியை பேணியிருந்ததுடன், 2020 ஆம் ஆண்டை 83.5 பில்லியன் ரூபாய் இருப்புடன் பூர்த்தி செய்திருந்தது. இது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17 சதவீத வளர்ச்சியாகும். 2020 ஆம் ஆண்டில் முற்பணங்கள் 8 சதவீத வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், தனியார் துறை வளர்ச்சியான 6.5 சதவீதம் என்பதை விட இது உயர்வானதாக அமைந்திருந்தது.
உலகளாவிய ரீதியில் வேகமாக வளர்ந்து வரும் வட்டிசாராத மக்களுக்கு நட்பான வங்கியியல் மாதிரியை பின்பற்றி முழுமையாக செயலாற்றும் இலங்கையின் முதலாவதும் ஒரே அங்கீகாரம் பெற்ற வணிக வங்கியாக அமானா வங்கி திகழ்கின்றது. வளர்ச்சியை செயற்படுத்துவது மற்றும் வாழ்க்கைக்கு வளமூட்டுவது எனும் நோக்கத்துடன், வங்கி தனது பரந்த கிளை வலையமைப்பு மற்றும் சுய வங்கிச் சேவை நிலையங்கள் போன்றவற்றினூடாகவும், பண மீளப் பெறுகைகளை இலகுவாக மேற்கொள்வதற்காக 4500க்கும் அதிகமான ATMகளையும் கொண்டிருப்பதுடன், உடனடி பண வைப்புகளுக்காக 850க்கும் அதிகமான Pay&Go களையும் கொண்டு, வாடிக்கையாளர்களை சென்றடைகின்றது. இணைய மற்றும் மொபைல் வங்கியியல் சேவைகள், 24x7 பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் பெண்களுக்கான பிரத்தியேகமான வங்கி அலகுகள் போன்றவற்றினூடாக வாடிக்கையாளர் மேலும் பல அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜெத்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களை, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களைக் கொண்டிருக்கவில்லை.