• Amãna Bank PLC Blog Detail - Main Visual

டெபிட் அட்டை விலைக்கழிவுகளை வழங்குவதற்காக சொஃப்ட்லொஜிக் Glomark உடன் அமானா வங்கி கைகோர்ப்பு

அமானா வங்கி May 11, 2021

டெபிட் அட்டைகளைப் பயன்படுத்தி சொஃப்ட்லொஜிக் Glomark இல் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் கொள்வனவுகள் மீது விலைக்கழிவுகளை பெற்றுக் கொடுப்பதற்காக சொஃப்ட்லொஜிக் Glomark உடன் அமானா வங்கி கைகோர்த்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் தவிர்ந்த ரூ. 4000 க்கு அதிகமான கட்டணப் பட்டியல்களின் மீது அமானா வங்கி டெபிட் அட்டைகள் 10% விலைக்கழிவை பெற்றுக் கொள்வதற்கான தகைமையைப் பெறும்.

இந்த விசேட சலுகை தொடர்பில் வங்கியின் கூட்டா தொடர்பாடல்கள் மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் அசிம் ராலி கருத்துத் தெரிவிக்கையில், “சொஃப்ட்லொஜிக் புடழஅயசம உடன் இணைந்து எமது வாடிக்கையாளர்களுக்கு பண்டிகைக் காலப்பகுதியில் ஒரு மாத காலத்துக்கு இந்த சலுகையைப் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளதையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். இந்த சலுகையினூடாக சொஃப்ட்லொஜிக் புடழஅயசம க்கும் பெறுமதி சேர்க்கப்படும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அமானா வங்கியின் சகல டெபிட் அட்டைதாரர்களுக்கும் பயனளிப்பதாகவும் அமைந்திருக்கும்.” என்றார்.

இந்தப் பங்காண்மை தொடர்பில் சாஃப்ட்லோஜிக் சூப்பர் மார்க்கெட் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைவர் கயான் கல்தேரா கருத்துத் தெரிவிக்கையில், “அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு தனித்துவமான மற்றும் கவனம் செலுத்தும் பிரசாதத்துடன் உலகத் தரம் வாய்ந்த பல்பொருள் அங்காடி அனுபவத்தை உருவாக்கும் நோக்கத்துடன ;செயல்படும் நாம் ,வரவிருக்கும் ரமலான் பண்டிகையை கருத்தில் கொண்டு இது சரியான நேரத்தில் உருவாக்கப்பட்ட கூட்டாண்மை என்று புடழஅயசம கண்டறிந்துள்ளது.” என்றார்.

உலகின் சகல பாகங்களிலிருந்தும் சிறந்த நிறுவனங்களிடமிருந்து உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக புகழ்பெற்றுள்ள Glomark , தனது தரமான தயாரிப்புகளினூடாக, அனைவருக்கும் நிலைபேறான உணவை பெற்றுக் கொள்வதற்கு வழியேற்படுத்தியுள்ளது. GLOMARK standard format விற்பனை நிலையங்கள் மற்றும் Glomark Essential சௌகரியமான விற்பனை நிலையங்களினூடாக புதிய நுகர்வோர் போக்குகளுக்கு பங்களிப்பு வழங்குவதற்கு Glomark எதிர்பார்த்துள்ளது.

அமானா வங்கியின் டெபிட் அட்டைகள் Visa PayWave தொடுகை அற்ற உள்ளம்சத்தைக் கொண்டுள்ளன. பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக உலகளாவிய ரீதியில் மில்லியன் கணக்கான விற்பனை மற்றும் சேவை நிலையங்களில் பயன்படுத்த முடியும். ஒன்லைன் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கும் பாதுகாப்பான முறையில் பயன்படுத்த முடியும். உள்நாட்டில் LankaPay வலையமைப்பினூடாக 4500 க்கும் அதிகமான ATMகள் மற்றும் உலகளாவிய ரீதியில் 200க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த 2 மில்லியனுக்கும் அதிகமான செயற்படுத்தப்பட்ட ATMகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களுக்கு தமது அட்டையைப் பயன்படுத்தி கணக்குகளை அணுக முடியும்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘Orphancare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.

Featured

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo