• Amãna Bank PLC Blog Detail - Main Visual

ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் நாமமாக தெரிவாகியதையிட்டு அமானா வங்கி தனது ஊழியர்களை கௌரவிக்கின்றது

அமானா வங்கி December 22, 2021

அண்மையில் World HRD Congress இனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாம விருதுகள் வழங்கும் நிகழ்வில், ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமங்களில் ஒன்றாக அமானா வங்கி தெரிவாகியிருந்தது. இலங்கையின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமங்களில் ஒன்றாக தெரிவு செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, பிராந்திய ரீதியிலான இந்த கௌரவிப்பு அமானா வங்கிக்கு வழங்கப்பட்டிருந்தது. ஆசிய பிராந்தியத்தைச் சேர்ந்த மேலும் பல முன்னணி கூட்டாண்மை மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் மத்தியிலிருந்து அமானா வங்கி இந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தமை விசேட அம்சமாகும். ஒன்லைன் கட்டமைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் அமானா வங்கிக்கான இந்த விருதை வங்கியின் செயற்பாடுகளுக்கான உப தலைவர் இம்தியாஸ் இக்பால் பெற்றுக் கொண்டார்.

இந்த விருது தொடர்பாக வங்கியின் மனித வளங்கள் பிரிவின் தலைமை அதிகாரி பர்ஹான் ரிஃபாய் கருத்துத் தெரிவிக்கையில், “ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமம் எனும் விருதைப் பெற்றுக் கொண்டதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். ஊழியர்களின் சிறந்த தெரிவுக்குரிய நிறுவனம் எனும் வங்கியின் நிலைக்கு மேலும் வலுச்சேர்க்கப்பட்டுள்ளது. அதிகளவு ஈடுபாடுகளைப் பேணும் அணியின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்காக நாம் நன்றி தெரிவிப்பதுடன், இந்த வெற்றிகரமான சாதனைகளுக்கு அவர்கள் பிரதான காரணியாக அமைந்துள்ளனர்.” என்றார்.

இந்த விருதைப் பெற்றுக் கொண்டமை தொடர்பாக வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமமாக அமானா வங்கியை World HRD congress தெரிவு செய்தமைக்காக நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். சவால்கள் நிறைந்த சூழலில், 800க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு நாம் இயங்குவதுடன், மீண்டெழுந்திறனை வெளிப்படுத்தி செயலாற்றுகின்றோம். வளர்ச்சிக்கு கைகொடுத்து வாழ்வுக்கு வளமூட்டுவது எனும் எமது நோக்கத்துக்கமைய இவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றுகின்றனர். அனைத்து ஊழியர்களுக்காகவும் இந்த விருதை நான் சமர்ப்பிக்கின்றேன்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2021 செப்டெம்பர் மாதத்தில் ஃபிட்ச் ரேட்டிங் ஸ்ரீ லங்காவினால் BB+ (lka) உறுதியான தோற்றப்பாட்டை கொண்டுள்ளதாக தரப்படுத்தியிருந்தது. அமானா வங்கி வேறு எவ்வித துணை நிறுவனங்களையோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களையோ கொண்டிருக்கவில்லை.

படம்: ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமத்துக்குரிய வெற்றிக் கிண்ணத்தையும், சான்றிதழையும் அமானா வங்கியின் மனித வளங்கள் பிரிவின் தலைமை அதிகாரி பர்ஹான் ரிஃபாய், வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் அவர்களிடம் கையளிப்பதையும், அருகில் வங்கிச் செயற்பாடுகளுக்கான உப தலைவர் இம்தியாஸ் இக்பால் காணப்படுவதையும் காணலாம்.

Featured

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo