• Amãna Bank PLC Blog Detail - Main Visual

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் மாவட்டத்தில் சிறந்த தரப்படுத்தலைப் பெற்ற சிறுவர் சேமிப்புக் கணக்கை கொண்டிருக்கும் மாணவருக்கு அமானா வங்கி கௌரவிப்பு

Amãna Bank January 5, 2022

2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மாவட்டத்தில் (கேகாலை) முதலாம் தரப்படுத்தலைப் பெற்ற சிறுவர் சேமிப்புக் கணக்கை கொண்டிருக்கும் வாடிக்கையாளரை அண்மையில் அமானா வங்கி கௌரவித்திருந்தது. மாவனெல்லை சாஹிரா கல்லூரியில் பயிலும் எம்.என்.ஏ. ஆபித் கேகாலை மாவட்டத்தில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் தமிழ் மொழி மூல மாணவர்கள் மத்தியில் இரண்டாமிடத்தையும் பெற்றிருந்தார். ஆபித் உயர் கல்வியை தொடர்வதற்கு ஊக்கமளிக்கும் வகையில், அமானா வங்கி மடிக் கணனி ஒன்றை பரிசாக வழங்கியது.

இந்த கௌரவிப்பு தொடர்பாக அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக் அக்பர் கருத்துத் தெரிவிக்கையில், “எமது சிறுவர் சேமிப்புக் கணக்கை வைத்திருக்கும் வாடிக்கையாளர் ஒருவர் இந்தக் கௌரவிப்பைப் பெற்றுக் கொண்டதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம். சிறுவர்களுக்கு ஊக்கமளித்து, வெகுமதியளிப்பதனூடாக அவர்களை தமது எதிர்காலத்தில் உயர்ந்த ஸ்தானத்துக்கு செல்வதற்கு ஊக்குவிக்கக்கூடியதாக இருக்கும் என்பதில் நாம் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.

சிறுவர்கள் மத்தியில் இள வயது முதல் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் பெற்றோரின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு கணக்கு ஆரம்பிக்கப்படும் போது 1000 ரூபாயை வைப்புச் செய்து கணக்கொன்றை அமானா வங்கி வழங்குகின்றது. மேலும், மாதாந்த நிலையான கட்டளையினுடாக, தொடர்ச்சியாக சேமிக்கும் பழக்கத்தை பெற்றோர் மத்தியில் ஊக்குவிப்பதற்காக வருட நிறைவில் நிலையான கட்டளைப் பெறுமதிக்கு நிகரான தொகையை போனஸ் கொடுப்பனவாக வங்கி வழங்கும்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. 2021 செப்டெம்பர் மாதத்தில் ஃபிட்ச் ரேட்டிங் ஸ்ரீ லங்காவினால் BB+ (lka) உறுதியான தோற்றப்பாட்டை கொண்டுள்ளதாக தரப்படுத்தியிருந்தது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.

Featured

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo