• Amãna Bank PLC Blog Detail - Main Visual

ஏறாவூர் பற்று பகுதியில் 49ஆவது சுய வங்கிச் சேவை நிலையத்தைத் திறப்பதன் மூலம் அமானா வங்கி தனது வலையமைப்பை வலுப்படுத்துகிறது.

Amana Bank September 24, 2026

அமானா வங்கி அண்மையில் தனது 49 ஆவது சுய வங்கிச் சேவை நிலையத்தை ஏறாவூர் பற்றுப் பகுதியில் திறந்து வைத்ததன் மூலம், இப்பிராந்தியத்தில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளதுடன், அப்பகுதி வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட வங்கிச் சேவை வசதிகளையும் வழங்கியுள்ளது. ஏறாவூர், மீச்சநகர், மீராக்கெர்னி வீதியில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ள இந்தப் புதிய சுய வங்கிச் சேவை நிலையத்தின் ஊடாக, ஏறாவூர் பற்று மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் தனிநபர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் பரந்த சமூகத்தினர் பண மீளப்பெறுதல், பண வைப்புச் செய்தல் மற்றும் காசோலை வைப்புச் செய்தல் ஆகிய சேவைகளை 24X7 அடிப்படையில் இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும். இந்தத் திறப்புடன், கிழக்கு மாகாணத்தில் அமானா வங்கியின் சுய வங்கிச் சேவை நிலையங்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளதுடன், மாகாணம் முழுவதும் அமைந்துள்ள 9 முழுமையான வங்கிக் கிளைகளுக்கு இது மேலும் துணையாக அமைகிறது. 
திறப்பு விழாவில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தவிசாளர் திரு. முரளிதரன் உள்ளிட்ட பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள், வர்த்தகப் பிரதிநிதிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த நலன்விரும்பிகள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் அமானா வங்கியைப் பிரதிநிதித்துவப்படுத்தி, உதவி உப தலைவர் – SME மற்றும் பிராந்தியக் கிளைகள், அர்ஷத் அத்னான், தனிநபர் விற்பனை மற்றும் வாடிக்கையாளர் சேர்க்கை வழித்தடங்களின் தலைவர் மொஹமட் அஸ்மில், செயல்பாட்டாளர் – கிளைக்கான வெளிக்கள SBC செயற்பாடுகள், இம்ரான் மொஹமட், ஏறாவூர் கிளை முகாமையாளர் மாஹிர் பதுர்தீன், கதுருவெல கிளை முகாமையாளர் ஜிஃப்ரி ராஸிக் மற்றும் வங்கியின் ஏனைய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். 
நிகழ்வில் உரையாற்றிய அமானா வங்கியின் SME மற்றும் பிராந்தியக் கிளைகளுக்கான உதவி உப தலைவர் அர்ஷத் அத்னான் கருத்து தெரிவிக்கையில், 'ஏறாவூர் பற்று பகுதியில் எமது 49 ஆவது சுய வங்கிச் சேவை நிலையத்தைத் திறந்து வைத்திருப்பது, நாம் சேவையாற்றும் சமூகங்களுக்கு வசதியானதும் இலகுவாக அணுகக்கூடியதுமான வங்கிச் சேவைகளை மேலும் நெருக்கமாகக் கொண்டு சேர்ப்பதில் மற்றுமொரு முக்கியமான படியாகும். இந்த வசதியின் ஊடாக, இப்பிராந்தியத்தில் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் மாறிவரும் வங்கித் தேவைகளுக்கு ஆதரவளிப்பதுடன், ஏறாவூர் பற்று மக்களுடனான எமது உறவை மேலும் வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்' எனத் தெரிவித்தார்.  
அமானா வங்கி பீஎல்சி என்பது இலங்கை மத்திய வங்கியினால் உரிமம் வழங்கப்பட்டு, கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு தனித்துவமான வங்கியாகும். ஜித்தாவைத் தளமாகக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (IsDB) குழுமம், வங்கியின் பிரதான பங்குதாரராக உள்ளது. 57 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட (IsDB) குழுமம், ‘AAA’ தரநிலை மதிப்பீட்டைப் பெற்ற பல்தரப்பு அபிவிருத்தி நிதி நிறுவனமாகும். வட்டி சாராத வங்கியியல் மாதிரியின் முன்னணி செயற்பாட்டாளராக அமானா வங்கியின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில், தி ஏசியன் பேங்கர் நிறுவனத்தினால் உலகின் வலுவான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக அமனா வங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. 
 
அமானா வங்கிக்கு, நிறுவன ஆதரவாளர் என்ற வகையில் ஆதரவற்றோர் காப்பகம் (OrphanCare) என்ற அமைப்புடனான அதன் ஈடுபாட்டைத் தவிர, துணை நிறுவனங்கள், இணை நிறுவனங்கள் அல்லது தொடர்புடைய நிறுவனங்கள் எதுவும் இல்லை. 

Image Caption : அமானா வங்கியின் உதவி உப தலைவர் அர்ஷத் அத்னான், ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தலைவர் திரு. எம். முரளிதரன், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் திரு. ஏ.எஸ்.எம். ரஸ்மி மற்றும் ஏறாவூர் கிளை முகாமையாளர் பி.எம். மாஹிர் ஆகியோருடன் இணைந்து ஏறாவூர் பற்று சுய வங்கிச் சேவை நிலையத்தைத் திறந்து வைத்தார். 

Featured

விண்ணப்பியுங்கள்
Financing Calculator
Chat on WhatsApp
govpay