• Amãna Bank PLC Blog Detail - Main Visual

அமானா வங்கி குளோபல் ஃபினான்ஸ் விருதை சுவீகரித்துள்ளது

அமானா வங்கி November 10, 2020

சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட குளோபல் ஃபினான்ஸ் சஞ்சிகையின் 2020 ஆம் ஆண்டுக்கான வட்டிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் சர்வதேச நிறுவனங்கள் வரிசையில் அமானா வங்கியையும் விருது வழங்கி கௌரவித்துள்ளது. இலங்கையிலுள்ள சிறந்த இஸ்லாமிய நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக அமானா வங்கி தெரிவு செய்யப்பட்டிருந்தது. இந்த சர்வதேச விருதை அமானா வங்கி தொடர்ச்சியாக 7ஆவது ஆண்டாக சுவீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனூடாக வட்டிசாரா நிதிச் சேவைகளை வழங்கும் துறையில் வங்கியின் தலைமைத்துவ நிலையை மேலும் உறுதி செய்துள்ளது. நாட்டுக்கும் பிராந்தியத்துக்கும் பெருமை சேர்த்திடும் வகையில்இ இதற்கு முன்னரும் குளோபல் ஃபினான்ஸ் சஞ்சிகையினால் அமெரிக்காவின்இ வொஷிங்டன் டிசி இல் இடம்பெற்ற 18ஆவது வருடாந்த உலகின் சிறந்த வங்கிகள் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த வளர்ந்து வரும் இஸ்லாமிய வங்கியாக அமானா வங்கி தெரிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த கௌரவமான விருதைப் பெற்றுக் கொண்டமை தொடர்பாக அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில்இ “இந்த அதிகௌரவமிக்க விருதை தொடர்ச்சியாக 7 ஆவது வருடமாகவும் பெற்றுக் கொண்டுள்ளமை வங்கிக்கு மிகவும் பெருமையான விடயமாக அமைந்துள்ளது. வளர்ச்சி மற்றும் வாழ்க்கைக்கு வளமூட்டும் எமது பயணத்தில் தொடர்ச்சியாக எம்முடன் கைகோர்த்து பயணிக்கும் பல்வேறு தரப்பினருக்கும் நான் நன்றி தெரிவிக்கின்றேன். வங்கியின் தனித்துவமான வங்கியியல் முறையினூடாக, இத்துறையில், முன்னோடிகளாக எம்மால் தொடர்ந்து நிலைத்திருக்க முடிந்துள்ளது” என்றார்.

இலங்கை மத்திய வங்கியினால் அனுமதி அளிக்கப்பட்ட அமானா வங்கி பி.எல்.சி. கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட ஒரு தனி நிறுவனமாகும். ஜித்தாவில் தலைமையகத்தைக் கொண்ட இஸ்லாமிய அபிவிருத்தி வங்கி (IsDB) குழுமம் பிரதான பங்குதாரர் என்ற முறையில் அமானா வங்கியில் 29.97%  பங்குளைக் உரிமம் கொண்டுள்ளது. IsDB குழுமம் என்பது ‘AAA’ தரப்படுத்தலைப் பெற்ற பல்துறை அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கிக்கு எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் கிடையாது. அதன் பிரத்தியேகமான சமூகப் பொறுப்புணர்வுத் திட்டமான அனாதை பராமரிப்பு நம்பிக்கை நிதியை ‘OrphanCare’ Trust ஐ   மாத்திரமே பேணி வருகின்றது.

Featured

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo