• Amãna Bank PLC Blog Detail - Main Visual

SLIBFI விருது வழங்கலில் ஆண்டின் சிறந்த நிறுவனத்துக்கான தங்க விருதை அமானா வங்கி சுவீகரித்துள்ளது

Amãna Bank November 22, 2021

நிதிப் பரிமாற்று மற்றும் சந்தைப்படுத்தல் திட்டத்துக்காகவும் தங்க விருதை சுவீகரித்து விருதுகள் வரிசையில், அமானா வங்கி முன்னிலையில் திகழ்கின்றது

ஆண்டின் சிறந்த நிறுவனத்துக்கான தங்க விருதை அமானா வங்கி தொடர்ந்தும் மூன்றாவது வருடமாக சுவீகரித்துள்ளது. அண்மையில் இடம்பெற்ற SLIBFI விருதுகள் 2021 வழங்கும் நிகழ்வில் இந்த விருதை அமானா வங்கி பெற்றுக் கொண்டது. 10 ஆவது வருடமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த SLIBFI விருதுகள் வழங்கும் நிகழ்வை KPMG சுயாதீனமான முறையில் மத்தியஸ்தம் வகிக்கின்றது.

ஆண்டின் சிறந்த நிறுவனத்துக்கான விருதை வெற்றியீட்டியிருந்தமைக்கு மேலதிகமாக, தனியார் விமான சேவை செயற்பாடுகளுக்கு நிதி வசதியளித்திருந்தமைக்காக ஆண்டின் சிறந்த நிதிப் பரிமாற்றுக்கான தங்க விருதையும், நடைமுறை கணக்குகளை ஊக்குவித்தலுக்காக முன்னெடுத்திருந்த சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக ஆண்டின் சிறந்த சந்தைப்படுத்தல் திட்டத்துக்கான தங்க விருதையும் அமானா வங்கி சுவீகரித்திருந்தது.

இந்த விருதுகளைப் பெற்றுக் கொண்டமை தொடர்பில் அமானா வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “வங்கி தனது 10 வருட பூர்த்தியை கொண்டாடும் நிலையில், மீண்டும் SLIBFI விருது வழங்கும் நிகழ்வில் அமானா வங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையில் வட்டிசாராத வங்கியியல் மற்றும் நிதியியல் துறையை கட்டியெழுப்பி அதற்கு தலைமைத்துவம் வழங்குவதற்கு நாம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை இந்த விருதுகள் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. குறிப்பாக தற்போதைய தொற்றுப் பரவலுடனான சூழலில் எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில் இந்த விருதுகள் கிடைத்துள்ளமை எமது செயற்பாடுகளுக்கு மேலும் வலுச் சேர்த்துள்ளன. எம்மீது தொடர்ச்சியாக நம்பிக்கை கொண்டுள்ள எமது சகல வாடிக்கையாளர்கள், சக ஊழியர்கள் மற்றும் இதர பங்காளர்களுக்கு இந்த விருதை நான் சமர்ப்பிக்கின்றேன். கடந்த 10 ஆண்டு காலமாக இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை ஏற்பாடு செய்யும் SLIBFI விருதுகளின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் மத்தியஸ்தம் வழங்கியிருந்த KPMG ஆகியோருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்வதுடன், வங்கியின் 29.97% பங்குகளை தன்வசம் கொண்டுள்ளது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. அமானா வங்கியின் பிரதான சமூகப் பொறுப்புணர்வு திட்டமான ‘OrphanCare’ நிதியம் தவிர்ந்த, வேறு எவ்வித துணை நிறுவனங்களோ, அங்கத்துவ அல்லது இணை நிறுவனங்களோ இல்லை.

Featured

விண்ணப்பியுங்கள்
Chat on WhatsApp
govpay
logo